Annamalai – Seeman Share Stage: சீமானுடன் ஒரே மேடை.. புகழ்ந்து பேசிய அண்ணாமலை.. 2026 தேர்தலில் பாஜக – நாம் தமிழர் கட்சி கூட்டணியா..?
BJP-Naam Tamilar Katchi Alliance: முன்னதாக, ஒருமுறை சீமான் காரில் அமர்ந்திருந்தபோது, அண்ணாமலை வெளியே நின்றபடி நலம் விசாரித்தார். இப்போது மீண்டும் ஒரே மேடையில் தோன்றிருப்பது 2026 சட்டமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி வைப்பதற்கான ஆதரங்கள் என்று கூறப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
சென்னை, ஏப்ரல் 07: சென்னையை அடுத்த பொத்தேரியில் உள்ள பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள தமிழ் பேராயகம் சார்பில் ’சொல் தமிழா சொல்’ என்ற தலைப்பின் கீழ் இறுதிச்சுற்று போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை (Tamil Nadu BJP President Annamalai) மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் (Naam Tamilar Katchi Leader Seeman) ஒரே மேடையில் அமர்ந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, ஒருமுறை சீமான் காரில் அமர்ந்திருந்தபோது, அண்ணாமலை வெளியே நின்றபடி நலம் விசாரித்தார். இப்போது மீண்டும் ஒரே மேடையில் தோன்றிருப்பது 2026 சட்டமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி வைப்பதற்கான ஆதரங்கள் என்று கூறப்பட்டு வருகிறது.
ஒரே மேடையில்..
சென்னையை அடுத்த பொத்தேரியில் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராயகம் உள்ளது. இதன் சார்பில் மாநில அளவிலான மாபெரும் தமிழ் பேச்சு போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்களை 9 மண்டலமாக பிரித்து பேச்சு போட்டிகள் நடைபெற்றது. இதன் யின் இறுதி சுற்றுடன் பரிசளிப்பு விழாவும் இன்று அதாவது 2025 ஏப்ரல் 7ம் தேதி நடைபெற்ற நிலையில், இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டனர். இவர்களுடன் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனருமான பாரிவேந்தர் என அனைவரும் ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர்.
இதன் காரணமாக, தமிழ்நாடு பாஜகவுடன் இணைந்து நாம் தமிழர் கட்சி வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருப்பதாக சமூக வலைதளங்களில் கருத்து பரவி வருகிறது. அதிமுகவுடன் சமீபத்திய கூட்டணி உறவை முறித்துகொண்ட பாஜக மீண்டும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு கூட்டணி வைக்க முயற்சி செய்கிறது. அதேநேரத்தில், கடந்த சில மாதங்களாக ஆளும் திமுகவை கடுமையாக எதிர்த்து வரும் சீமான், அதிமுகவின் கடந்த கால ஆட்சியின் நன்மை குறித்தும் ஒரு சில மேடைகளில் பேசினார். இந்தநிலையில், பாஜக – அதிமுக – நாதக என 3 கட்சிகளும் ஒன்றாக கூட்டணி வைத்து 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டும் திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர திட்டம் வகுக்கலாம்.
சீமான் குறித்து அண்ணாமலை பேச்சு:
அண்ணன் சீமானுக்கு தொடர்ந்து நான் ஆதரவாக குரல் கொடுப்பதற்கு காரணம் இன்றைய அரசியல் களத்தில் நேர்மையும் நெஞ்சுரமும் குறைந்து கொண்டே இருக்கிறது அந்த காலத்தில் தான் சார்ந்த கொள்கைக்கு நேர்மையாக இருக்கிறார் ! pic.twitter.com/aJ3YgihmFI
— Army of Dheeran Annamalai (@annamalai_chap2) April 7, 2025
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா..?
கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். இதுவும் அரசியல் வட்டாரத்தில் பெரியளவில் பேசப்பட்டது. அதிமுக – பாஜகவுடன் கூட்டணி வைக்காது என்று அதிமுக கூறி வரும் நிலையில், செங்கோட்டையனை வைத்து பாஜக கூட்டணிக்கு காய் நகர்த்துவதாக செய்திகள் வெளியானது. அதேநேரத்தில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நிர்மலா சீதாராமன் சென்னை வந்திருந்தார். தனியார் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த அவரை, நேற்று அதாவது 2025 ஏப்ரல் 6ம் தேதி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்ததாகவும், அதன் பிறகு அதிமுகவை சேர்ந்த செங்கோட்டையன் மீண்டும் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சீமான், ”2026 சட்டமன்ற தேர்தலில் தனியாக போட்டியிடுவதற்காக நாங்கள் வேட்பாளர்களை சந்தித்து வருகிறோம். நான் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்திருந்தால், ஆமாம் சந்திந்தேன் என நேரடியாக சொல்வேன்” என தெரிவித்தார்.