Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

லாரி மீது மோதிய ஆம்புலன்ஸ்.. சம்பவ இடத்திலேயே பலியான கணவன் – மனைவி!

Tirupur Ambulance Crash Kills Couple | திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே முருகன் என்பரை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று சென்றுக் கொண்டிருந்துள்ளது. இந்த நிலையில், சாலையோரம் நின்றுக் கொண்டிருந்த லாரியின் மீது ஆம்புலன்ஸ் வாகனம் மோதி விபத்துக்குள்ளான நிலையில், ஆம்புலன்சில் பயணித்த தம்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

லாரி மீது மோதிய ஆம்புலன்ஸ்.. சம்பவ இடத்திலேயே பலியான கணவன் – மனைவி!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 11 Apr 2025 08:45 AM

திருப்பூர், ஏப்ரல் 11 : திருப்பூரில் (Tirupur) சாலை ஓரம் நின்றுக்கொண்டிருந்த லாரி மீது தனியார் ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளாகியதில் (Ambulance Ran Over Lorry) இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் ஆம்புலன்சில் பயணித்த முருகன், கல்யாணி தம்பதி உயிரிழந்த நிலையில், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உள்ளிட்ட மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். அதிகாலையில் நடைபெற்ற இந்த கொடூர விபத்தில் தம்பதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த விபத்து எப்படி ஏற்பட்டது, காயமடைந்தவர்களில் நிலை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

திருப்பூரில் அதிகாலையில் நடைபெற்ற கோர விபத்து

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேந்த முருகன் என்பவரை ஏற்றிக் கொண்டு ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று மருத்துவமனை நோக்கி சென்றுக் கொண்டிருந்துள்ளது. அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் முருகனின் மனைவி கல்யாணி உள்ளிட்ட மூன்று பேரும் பயணம் செய்துள்ளனர். இந்த நிலையில், ஆம்புலன்ஸ் வாகனம் திடீரென சாலையோரம் நின்றுக் கொண்டிருந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. அதிவேகமாக வந்த ஆம்புலன்ஸ் லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளான நிலையில், ஆம்புலன்சில் பயணம் செய்த முருகன் மற்றும் அவரது மனைவி கல்யாணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் முருகன், கல்யாணி தம்பதியுடன் பயணித்த மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த கோர விபத்தின் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உயிரிழந்த முருகன் – கல்யாணி தம்பதியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலை விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவர்கள்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கண்ணுடையான்பட்டியை சேர்ந்தவர் இன்பராஜ். இவருக்கு  வயது 19. இவருக்கு செவக்காலப்பட்டியை சேர்ந்த பூவரசன் என்ற நண்பர் இருந்துள்ளார். அவருக்கு வயது 19. இவர்கள் இருவரும் குளித்தலையில் உள்ள அரசு கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 10, 2025) இருவரும் மணப்பாறை அடுத்த ஆண்டவர்கோவில் பகுதிக்கு அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது அந்த வழியாக சென்ற டிப்பர் லாரி ஒன்று மாணவர்களின் இருசக்கர வாகனத்தின் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் பயணித்த கல்லூரி மாணவர்கள் இருவரும் சம்பவ இடத்திலே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் செய்த சுப்மன், சுதர்சன்! கொல்கத்தாவை கடைந்தெடுத்த குஜராத்
சம்பவம் செய்த சுப்மன், சுதர்சன்! கொல்கத்தாவை கடைந்தெடுத்த குஜராத்...
சுவிட்சுக்கு பதிலாக சிரிஞ்ச் மூலம் பல்பை ஆன் செய்யும் இளைஞர்!
சுவிட்சுக்கு பதிலாக சிரிஞ்ச் மூலம் பல்பை ஆன் செய்யும் இளைஞர்!...
பனிக்கட்டியா? வைரமா? வைரலாகும் ஐஸ்லாந்தின் டைமண்ட் பீச் வீடியோ!
பனிக்கட்டியா? வைரமா? வைரலாகும் ஐஸ்லாந்தின் டைமண்ட் பீச் வீடியோ!...
திருமண பரிசாக நீல நிற டிரம்... மணமக்களுக்குக் காத்திருந்த ஷாக்!
திருமண பரிசாக நீல நிற டிரம்... மணமக்களுக்குக் காத்திருந்த ஷாக்!...
சுந்தர் சி-யின் கேங்கர்ஸ் படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!
சுந்தர் சி-யின் கேங்கர்ஸ் படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!...
பிரச்சனையை கொண்டுவரனும் என்றே கமல் செய்வார்- கே.எஸ்.ரவிக்குமார்!
பிரச்சனையை கொண்டுவரனும் என்றே கமல் செய்வார்- கே.எஸ்.ரவிக்குமார்!...
ஒரிஜினலைப் போலவே போலி ரூ.500 நோட்டுக்கள் - எப்படி கண்டுபிடிப்பது?
ஒரிஜினலைப் போலவே போலி ரூ.500 நோட்டுக்கள் - எப்படி கண்டுபிடிப்பது?...
ஜே.டி.வான்ஸை இந்திய முறைப்படி வரவேற்ற பிரதமர் மோடி..!
ஜே.டி.வான்ஸை இந்திய முறைப்படி வரவேற்ற பிரதமர் மோடி..!...
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ரூ.32,000 வரை விலை குறைத்த ஹீரோ!
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ரூ.32,000 வரை விலை குறைத்த ஹீரோ!...
தேர்தலில் நாம் தமிழர் கட்சி பாஜகவுடன் கூட்டணியா? சீமான் விளக்கம்!
தேர்தலில் நாம் தமிழர் கட்சி பாஜகவுடன் கூட்டணியா? சீமான் விளக்கம்!...
கம்மி செலவில் அதிக பலன்கள்.. திராட்சை நீரில் பல பலன்கள்!
கம்மி செலவில் அதிக பலன்கள்.. திராட்சை நீரில் பல பலன்கள்!...