Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அமித்ஷா கொடுத்த நம்பிக்கை.. 2026 தேர்தலில் நயினார் நாகேந்திரனின் வியூகம்!

தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கும் நயினார் நாகேந்திரன், 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கான திட்டங்களை விளக்கியுள்ளார். அதிமுகவுடனான கூட்டணி இயற்கையானது என்றும், திமுக ஆட்சியின் தோல்விகளைக் காரணம் காட்டி, ஆட்சி மாற்றத்திற்கான அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

அமித்ஷா கொடுத்த நம்பிக்கை.. 2026 தேர்தலில் நயினார் நாகேந்திரனின் வியூகம்!
நயினார் நாகேந்திரன் - அமித்ஷா
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 17 Apr 2025 16:23 PM

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு (TN Assembly Election 2026) இன்னும் சரியாக ஓராண்டு மட்டுமே உள்ளது. அரசியல் கட்சிகள் ஏற்கனவே களப்பணிகளை தொடங்கி விட்ட நிலையில் ஒவ்வொரு கட்சி ரீதியாகவும் பல்வேறு விதமான மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக அக்கட்சியின் திருநெல்வேலி தொகுதி எம்.எல்.ஏ., சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் (Nainar Nagendran) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரின் வருகை கட்சிக்கு என்ன மாதிரியான பலத்தை கொடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் நேர்காணல் ஒன்றில் மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்ட சமயத்தில் என்ன நடந்தது என்பது பற்றி பேசியுள்ளார். அதில், “என்னை பொறுத்தமட்டில் பாஜக தலைமை என்னை நம்பி மாநில தலைவர் என்ற பொறுப்பை வழங்கியுள்ளார்கள். என்னுடைய இலக்கு என்ன எனக் கேட்டால், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என்பதாகும். இது மிக முக்கியமான ஒரு இலட்சியமாகும்” என கூறியுள்ளார்.

மேலும், “மாநில தலைவராக தேர்வான இந்த வாய்ப்பு எந்த சமயத்தில் உருவானது என தெரியவில்லை. மாநில தலைவருக்கான தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். இதில் அகில இந்திய பாஜக தலைமை சில முடிவுகளை எடுத்து அதை செய்திருக்கலாம் என நினைக்கிறேன்.

அமித்ஷா கொடுத்த அட்வைஸ்

உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வருகை தந்திருக்கும்போது தான் வேட்புமனுத்தாக்கல் நடைபெற்றது. அவர் என்னிடம், “புதிய பொறுப்பை கையில் எடுத்துள்ளீர்கள். இது மிகப்பெரிய சவாலாக தான் இருக்கும். நீங்கள் தேசிய ஜனநாயக கட்சி கூட்டணியில் யார் யாரெல்லாம் உள்ளார்களோ, அவர்களைப் பார்த்து பேசி தோழமை நட்புறவை உருவாக்குங்கள்” என கூறினார்.மேலும் அடிக்கடி நான் தமிழ்நாட்டுக்கு வருவேன். அப்போது என்ன செய்ய வேண்டும் என சொல்கிறேன் என்று அமித்ஷா கூறினார்.

நயினார் நாகேந்திரன் பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்கும் அதே நேரத்தில் அதிமுக கூட்டணியும் அமைந்தது பற்றி கேட்கிறார்கள். இதை எதேச்சையான நிகழ்வு என எடுத்துக் கொள்ளலாம். அதிமுக மிகப்பெரிய கட்சி. ஏற்கனவே 1998 ஆம் ஆண்டு ஜெயலலிதா இருந்தபோது கூட அவர்களுடன் கூட்டணியில் இருந்தோம். அதன்பிறகு எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி அமைத்தோம். நடுவில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் மட்டும் கூட்டணி இல்லாமல் இருந்தது. தற்போது மீண்டும் கூட்டணி அமைத்திருக்கிறோம். இந்த கூட்டணி இயற்கையாகவே உருவாகியிருக்கிறது.

பிரிந்தவர் கூடினால் பேரின்பம்

அதிமுகவைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் எனக்கு நண்பர்கள் தான். பிரிந்தவர் கூடினால் பேரின்பம் தான் என சொல்வார்கள். நான் கூட்டணி உறுதியாவதற்கு முன்னால் ஏன் அதிமுக – பாஜக கூட்டணி வேண்டும் என சொன்னேன் என்றால், திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும். மக்கள் நம்பி வாக்களித்தார்கள். ஆனால் அவர்களின் வலி அறியாமலேயே இன்றைக்கு எல்லா வரியையும் உயர்த்தி விட்டார்கள்.

தமிழ்நாட்டின் குக்கிராமத்தில் கூட போதைப்பொருள் பழக்கம் அதிகமாகி விட்டது. சட்டம் ஒழுங்கு சரியில்லை. பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. அமைச்சர் ஒருவரே பெண்களை சர்வ சாதாரணமாக கேவலமாக பேசுகிறார். இதனையெல்லாம் பார்க்கும்போது ஒரு மாற்றம் வேண்டும் என தோன்றுகிறது. மக்களுக்கும் மாற்றம் என்பது தோன்றியுள்ளது. ஆட்சி மாற்றம் என்ற முனைப்பில் வலுவான கூட்டணி என்பது அவசியமாகிறது.என்னைப் பொறுத்தவரை அதிமுகவில் அடிமட்ட தொண்டர்கள் முதல் மேல்மட்ட தலைவர்கள் வரை அனைவரையும் எனக்கு தெரியும்” என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

மதிமுகவில் மோதல்? பதவியை தூக்கி எறிந்த துரை வைகோ
மதிமுகவில் மோதல்? பதவியை தூக்கி எறிந்த துரை வைகோ...
சீலம்பூர் கொலை: "லேடி டான்" என்ற பெண் குற்றவாளிக்கு தொடர்பா..?
சீலம்பூர் கொலை:
15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சிம்புவுடன்.. நடிகை திரிஷா!
15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சிம்புவுடன்.. நடிகை திரிஷா!...
வெற்றிக்காக போராடும் ராஜஸ்தான்..? ராஜ நடை போடுமா லக்னோ..?
வெற்றிக்காக போராடும் ராஜஸ்தான்..? ராஜ நடை போடுமா லக்னோ..?...
குடியரசுத் துணைத் தலைவருடன் ஆளுநர் ரவி சந்திப்பு.. பின்னணி என்ன?
குடியரசுத் துணைத் தலைவருடன் ஆளுநர் ரவி சந்திப்பு.. பின்னணி என்ன?...
அந்த 4 மாதத்தை மறக்க முடியாது.. நடிகர் சூர்யா நெகிழ்ச்சி!
அந்த 4 மாதத்தை மறக்க முடியாது.. நடிகர் சூர்யா நெகிழ்ச்சி!...
நீலகிரி இ-பாஸ் சிக்கல்: காத்திருந்து திண்டாடிய சுற்றுலாப்பயணிகள்
நீலகிரி இ-பாஸ் சிக்கல்: காத்திருந்து திண்டாடிய சுற்றுலாப்பயணிகள்...
கொடூர சம்பவம்.. 2 மகள்களை கத்தியால் குத்திக் கொன்ற தாய்!
கொடூர சம்பவம்.. 2 மகள்களை கத்தியால் குத்திக் கொன்ற தாய்!...
முதல் இடத்திற்கு போட்டி! வெற்றி யார் வசம்? GTயை எதிர்கொள்ளும் DC!
முதல் இடத்திற்கு போட்டி! வெற்றி யார் வசம்? GTயை எதிர்கொள்ளும் DC!...
பூந்தமல்லி - போரூர் மெட்ரோ திட்டம் - 2 ஆம் கட்ட சோதனை எப்போது?
பூந்தமல்லி - போரூர் மெட்ரோ திட்டம் - 2 ஆம் கட்ட சோதனை எப்போது?...
ராசியை மாற்றும் சூரியன்.. இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!
ராசியை மாற்றும் சூரியன்.. இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!...