Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அதிமுக – பாஜக.. மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி.. கடுமையாக சாடிய விஜய்!

Tamilaga Vettri Kazhagam Vijay: அதிமுக பாஜக கூட்டணி குறித்து தமிழக வெற்றிக் கழக விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், "தமிழக மக்கள் 2026 சட்டமன்றத் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டி, விரட்டியடித்து தூக்கி எறியப் போவது உறுதி” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

அதிமுக – பாஜக.. மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி.. கடுமையாக சாடிய  விஜய்!
த.வெ.க விஜய்Image Source: PTI/X
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 12 Apr 2025 13:17 PM

சென்னை, ஏப்ரல் 12:  அதிமுக பாஜக கூட்டணி (AIADMK BJP Alliance) குறித்து தமிழக வெற்றிக் கழக விஜய் (Tamilaga Vettri Kazhagam Vijay) கடுமையாக விமர்சித்துள்ளார்.  மக்கள் விரோத மறைமுகக் கூட்டுக் கணக்குகளுக்கும் மக்களால் நிராகரிக்கப்பட்ட நேரடி நிர்ப்பந்தக் கூட்டுக் கணக்குகளுக்கும் தமிழக மக்கள் 2026 சட்டமன்றத் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டி, விரட்டியடித்து தூக்கி எறியப் போவது உறுதி என்று விஜய் கூறியுள்ளார்.  2025 ஏப்ரல் 11ஆம் தேதியான நேற்று சென்னை வந்த  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,  2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று அதிகாரப்பூர்வ அறிவித்தார்.

“மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி”

தேசிய அளவில்  பிரதமர் மோடி தலைமையிலும், தமிழகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் கூட்டணி செயல்படும் என்று அறிவித்தார். இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், தற்போது தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யும் விமர்சித்து  அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், ”தி.மு.க.வை மறைமுகக் கூட்டாளியாக ஏற்கெனவே தயார் செய்துவிட்ட நிலையில், தன்னுடைய பழைய பங்காளியான அ.இ.அ.தி.மு.க.வைப் பகிரங்கக் கூட்டாளியாகப் பா.ஜ.க. மீண்டும் கைப்பிடித்துள்ளது ஒன்றும் ஆகப் பெரிய ஆச்சர்யமில்லை.

பிளவுவாத சக்திகளுக்குச் சாமரம் வீசிய காரணத்தாலேயே, ஏற்கெனவே மூன்றுமுறை தமிழ்நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு நிர்ப்பந்தக் கூட்டே இப்போது ஏற்பட்டுள்ளது என்பது நாம் சொல்லித்தான் மக்களுக்குத் தெரிய வேண்டும் என்பதில்லை” என்றார்.

த.வெ.க தலைவர் விஜய் கண்டனம்

 

மேலும், “நாம், ஏற்கெனவே நம்முடைய பொதுக்குழுவில் அறிவித்தது போலவே, 2026 தேர்தல் களமானது தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற, ஒவ்வொரு வீட்டிலும் தங்களின் பிள்ளையாகக் கருதக் கூடிய தமிழக வெற்றிக் கழகத்திற்கும், வெற்று விளம்பரம் செய்து மக்கள் விரோத ஆட்சி நடத்தும் தி.மு.க.விற்கும் இடையே தான்.

அதிமுக – பாஜக கூட்டணி


எனவே, பிளவுவாத பா.ஜ.க. மற்றும் மக்கள் விரோத தி.மு.க.வின் பகல் கனவு மற்றும் கபட நாடகமான, மறைமுகக் கூட்டுக் கணக்குகளுக்கும் மக்களால் நிராகரிக்கப்பட்ட நேரடி நிர்ப்பந்தக் கூட்டுக் கணக்குகளுக்கும் தமிழக மக்கள் 2026 சட்டமன்றத் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டி, விரட்டியடித்து தூக்கி எறியப் போவது உறுதி” என்று தனது அறிக்கையில் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2021ஆம் ஆண்டு அதிமுக பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. அப்போது, அதிமுக தோல்வி அடைந்தது. இதனை அடுத்து,  பாஜகவுடனான கூட்டணை முறித்து கொண்டு, எந்த சூழலிலும் பாஜகவுடன் கூட்டணியே கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி கூறி வந்தார்.  இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி அமைத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

சிகிச்சைக்காக வந்த முதியவரை தர தரவென இழுத்து சென்ற டாக்டர்!
சிகிச்சைக்காக வந்த முதியவரை தர தரவென இழுத்து சென்ற டாக்டர்!...
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய MI! CSK நம்பிக்கையை உடைத்து வெற்றி
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய MI! CSK நம்பிக்கையை உடைத்து வெற்றி...
சாதிக்கவேண்டும் என்ற வெறியிருக்கு.. அந்த ஆசை எனக்கு- நடிகர் அஜித்
சாதிக்கவேண்டும் என்ற வெறியிருக்கு.. அந்த ஆசை எனக்கு- நடிகர் அஜித்...
படம் வெற்றிபெற காமாக்யா கோவிலில் தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா!
படம் வெற்றிபெற காமாக்யா கோவிலில் தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா!...
அதிரடி நகைச்சுவை.. மிர்ச்சி சிவாவின் சுமோ படத்தின் ட்ரெய்லர்!
அதிரடி நகைச்சுவை.. மிர்ச்சி சிவாவின் சுமோ படத்தின் ட்ரெய்லர்!...
நம் பேச்சை ஒட்டு கேட்கும் ஸ்மார்ட்போன் - எப்படி தவிர்ப்பது?
நம் பேச்சை ஒட்டு கேட்கும் ஸ்மார்ட்போன் - எப்படி தவிர்ப்பது?...
பெங்களூருவில் மனைவியால் கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி?
பெங்களூருவில் மனைவியால் கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி?...
அவரால் தான் நான் நடிக்கவில்லை... வடிவேலு பேச்சு!
அவரால் தான் நான் நடிக்கவில்லை... வடிவேலு பேச்சு!...
பணக்காரர்களின் கடன் வாங்கும் யுக்தி - வரியைத் தவிர்க்க செம பிளான்
பணக்காரர்களின் கடன் வாங்கும் யுக்தி - வரியைத் தவிர்க்க செம பிளான்...
தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் சதம்! வேலை காட்டும் வெயில்..!
தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் சதம்! வேலை காட்டும் வெயில்..!...
பட்ஜெட் விலையில் பவர் ஹவுஸ்: ரெட்மி டர்போ 4 ப்ரோவின் சிறப்பம்சம்!
பட்ஜெட் விலையில் பவர் ஹவுஸ்: ரெட்மி டர்போ 4 ப்ரோவின் சிறப்பம்சம்!...