“இனி இப்படியெல்லாம் செய்யாதீங்க” அன்பு கட்டளை போட்ட த.வெ.க. தலைவர் விஜய்!
tamilaga vettri kazhagam vijay : வாகனத்தின் மீது ஏறுவதோ, குதிப்பதோ கூடாது என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். பூத் கமிட்டி மாநாட்டிற்காக கோவை சென்ற விஜயின் வாகனம் மீது தொண்டர்கள் ஏரி அட்ராசிட்டியில் ஈடுபட்ட நிலையில், அறிவுரை வழங்கியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்
சென்னை, ஏப்ரல் 30: வாகனத்தின் மீது ஏறுவதோ, குதிப்பதோ கூடாது என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் (tamilaga vettri kazhagam) விஜய் (TVK Vijay) தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “பாதுகாப்பு குழுவினரை மீறி வாகனத்தின் மீது ஏறுவது, குதிப்பது எனக்கு கவலை அளிக்கிறது. நான் சொல்வதை நீங்கள் கேட்டு அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் நடந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் பாதுகாப்புதான் எனக்கு ரொம்ப முக்கியம்.
“இனி இப்படியெல்லாம் செய்யாதீங்க”
நம் அரசியலில் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோட self discipline இருக்க வேண்டும். நீங்கள் என்மேல் அன்போடு இருப்பது உண்மை எனில் இதுபோல இனி நீங்கள் செய்யக் கூடாது” என குறிப்பிட்டு இருக்கிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி கருத்தரங்கம் 2025 ஏப்ரல் 26,27ஆம் தேதிகளில் கோயம்புத்தூரில் தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஈரோடு, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வருகை தந்தார். சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பூத் கமிட்டி கருத்தரங்களில் கலந்து கொண்டனர்.
அதே நேரத்தில், முதல்முறையாக கட்சி தொடங்கிய பிறகு கோவைக்கு விஜய் வந்திருந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதோடு, பொதுமக்களுக்கு இடையூறும் ஏற்பட்டது. அதாவது, கோவை விமான நிலையத்தில் தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது.
அன்பு கட்டளை போட்ட த.வெ.க. தலைவர் விஜய்
அதோடு, விஜய் கோவை விமான நிலையத்தில் இருந்து ஹோட்டல் வரை வேனில் சென்ற விஜய் 3 இடங்களில் வேனின் மேல் நின்றப்படி தொண்டர்களை பார்த்து கை அசைத்தார். ரோடு ஷோ போன்று நடந்த நிகழ்ச்சியில் தொண்டர்கள் பலரும் குவிந்தனர்.
மேலும், விஜய் வாகனத்தை சுழ்ந்து கொண்டிருந்தனர். அதோடு, விஜய்யின் வாகனத்தின் மீது ஏறி அவரிடம் பேச முயற்சித்தார். இது சம்பந்தமான வீடியோக்களும் சோஷியல் மீடியாவில் வேகமாக பரவியது. அதோடு, பொதுமக்களுக்கு பெரிதும் இடையூறாக இருந்தது. தமிழக வெற்றிக் கழக தொண்டர்களின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ”நம்முடைய இளைய தோழர்கள், நமது வாகனங்களை இரு சக்கர வாகனங்களில் தலைக் கவசமின்றி வேகமாகப் பின்தொடருவது, பாதுகாப்புக் குழுவினரை மீறி வாகனத்தின் மீது ஏறுவது, குதிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டது எனக்கு மிகவும் கவலையை அளித்தன.
உங்கள நான் கை கூப்பித் தலைவணங்கிக் கேட்டுக்கிறதெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான். நீங்களும் என்மேல அன்போட இருக்கறது உண்மைன்னா எப்பவும் இதுபோல இனி நீங்க செய்யவே கூடாது. நம்ம அரசியல்ல கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோட கண்டிப்பும் self discipline-ம் 100 சதவீதம் சமரசமற்றதாத்தான் இருக்கணும் ஃப்ரெண்ட்ஸ்” என குறிப்பிட்டு இருக்கிறார்.