Vijay : அம்பேத்கர் ஜெயந்தி.. சிலைக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்திய விஜய்!

Vijay Pays Homage To Dr. Ambedkars Statue : தமிழகத்தின் பிரபல நடிகராகவும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகவும் இருந்து வருபவர் விஜய். இன்று 2025, ஏப்ரல் 14ம் தேதியில் அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை, பாலவாக்கத்தில் உள்ள அவரின் சிலைக்கு மாலை அணிவித்து, மலர்த்தூவி நடிகரும், அரசியல் கட்சித் தலைவருமான விஜய் மரியாதையைச் செலுத்தியுள்ளார்.

Vijay : அம்பேத்கர் ஜெயந்தி.. சிலைக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்திய விஜய்!

விஜய்

Updated On: 

14 Apr 2025 10:42 AM

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri Kazhagam)  தலைவராக இருந்து வருபவர் விஜய் (Vijay). இவர் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகரும் கூட, என்று அனைவருக்கும் தெரியும். இவர் தற்போது ஜன நாயகன் (Jana Nayagan) திரைப்படத்தைத் தொடர்ந்து முழுவதுமாக அரசியலில் இறங்கவுள்ளார். மேலும் தற்போது படங்களைத் தொடர்ந்த அரசியல் கூட்டங்கள் மற்றும் சந்திப்புகள் போன்றவரை நடத்தியும் வருகிறார். இந்நிலையில், இன்று இந்தியாவின் சட்டமேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் ( Dr. Ambedkar) 135வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை (Chennai), பாலவாக்கத்தில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு நடிகரும், த.வெ.க கட்சி (TVK Party) தலைவருமான விஜய் மாலை அணிவித்தும், மலர்த்தூவியும் சிலைக்கு மரியாதையைச் செலுத்தியுள்ளார்.

தற்போது இணையத்தளத்தில் அவர் அண்ணல் அம்பேத்கரின் சிலைக்கு முன் மரியாதை செலுத்திய வீடியோவும், புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் சட்ட உரிமைகள் மட்டுமில்லாமல், சமத்துவம், சமூக நீதிகள் மற்றும் சகோதரத்துவத்தை அனைவருக்கும் என்று வலியுறுத்திய அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளைக் கொண்டாடுவோம் என அவர் கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்ட பதிவு :

மனித உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களில் அண்ணல் அம்பேத்கரும் ஒருவர். அவர் எழுதிய சட்டத்தில்தான் தற்போது இந்தியாவே இயக்கி வருகிறது. எல்லா மனிதர்களுக்கு எல்லாம் சமம்தான் எனப் புரியவைத்தவரே அவர்தான். இன்று 2025, ஏப்ரல் 14ம் தேதியான இன்று அவரின் 135வது பிறந்தநாள் தமிழகத்தில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவிலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது நடிகர் விஜய் ஜன நாயகன் திரைப்பட ஷூட்டிங்கில் இருந்து வரும் நிலையில், சென்னையில் உள்ள பாலவாக்கத்தில் இருக்கும் அண்ணல் அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு மரியாதையைச் செலுத்தியுள்ளார்.

ஜன நாயகன் திரைப்படம் :

த.வெ.க. கட்சித் தலைவரும், நடிகருமான விஜய் இறுதியாக ஜன நாயகன் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தைப் பிரபல இயக்குநர் ஹச்.வினோத் இயக்கி வருகிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகிவரும் இப்படத்தை, கேவிஎன் ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்த படத்தின் கதைக்களமானது அரசியல் பின் புலனுடன் அமைந்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் விஜய்யின் கட்சி படம் என்பதால் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.