களம் ரெடியா இருக்கு… இனி அதெல்லாம் நடக்காது – கோவை கருத்தரங்கில் விஜய் அதிரடி
TVK Booth Committee Meeting: கோவையில் நடைபெற்ற பூத் கமிட்டி கருத்தங்கத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொண்டு தொண்டர்களோடு பேசினார். அப்போது பேசிய அவர், கோவை என்றாலே மரியாதை தான். கோவை என்றாலும் கொங்கு பகுதி என்றாலும் அவர்கள் தரும் மரியாதை தான் முதலில் நினைவிற்கு வரும். ஆட்சிக்கு வந்து நாம் என்ன செய்யப் போகிறோம். இதுவரை பண்ண மாதிரி நாம் பண்ணப்போறது இல்லை. நாம் ஆட்சிக்கு வருவதே மக்களுக்காக தான் என்று பேசினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின்(Tamilaga Vettri Kazhagam) பூத் கமிட்டி கருத்தரங்கம் ஏப்ரல் 26, 2025 அன்று கோயம்புத்தூரில் (Coimbatore) நடைபெற்றுவருகிறது. இதற்காக அக்கட்சியின் தலைவர் விஜய் (Vijay) கோவை விமான நிலையம் வந்தபோது தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் கருத்தரங்கம் நடைபெறும் இடத்துக்கு நடிகர் விஜய் பேரணியாக சென்றார். இதனையடுத்து அவரது ரசிகர்களும் தொண்டர்களும் காரை சூழ்ந்துகொண்டு அவரை பின் தொடர்ந்தனர். நூற்றுக்கணக்கானோர் கருத்தரங்கம் நடைபெறும் இடம் அவரை பின் தொடர்ந்து சென்றனர். கருத்தரங்கு மேடையில் விஜய் தனது தொண்டர்களைப் பார்த்து, ”ஃபிரெண்ட்ஸ் அங்க வயர்ஸ் போகுது, உங்களோட நான் இங்க 3 மணி நேரம் இருக்க போறேன். உங்க நல்லதுக்கு தான் சொல்றேன். அப்படியே பின் பக்கமாக சென்றால் நன்றாக இருக்கும்” என்று பேசியது ஹைலைட்டாக அமைந்தது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
முன்னதாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொது செயலாளர் என்.ஆனந்த் பேசியபோது, ”தமிழக வெற்றிக் கழகம் என்றாலே அனைவருக்கும் பயம் வந்துவிட்டது. அனைவர் மனதிலும் நடிகர் விஜய் இடம் பிடித்துவிட்டார். தமிழ் நாட்டில் 100 வாக்குகளில் தோற்றவர்களும் இருக்கிறார்கள். 25 வாக்குகளில் வென்றவர்களும் இருக்கிறார்கள். அதனால் ஒவ்வொரு ஓட்டும் முக்கியம். இன்னும் 10 மாதங்களே இருக்கின்றன. அனைத்து தொகுதிகளிலும் தலைவர் விஜய் தான் வேட்பாளர் என்று நினைத்து வேலை செய்ய வேண்டும்” என்று பேசினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேச்சு
Neat & Crisp Speech by @actorvijay #TVK_வலுவான_வாக்குச்சாவடி
pic.twitter.com/X8uJO7o9Yx— Arun Vijay (@AVinthehousee) April 26, 2025
அதனைத் தொடர்ந்து பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கோவை என்றாலே மரியாதை தான். கோவை என்றாலும் கொங்கு பகுதி என்றாலும் அவர்கள் தரும் மரியாதை தான் முதலில் நினைவிற்கு வரும். ஆட்சிக்கு வந்து நாம் என்ன செய்யப் போகிறோம். இதுவரை பண்ண மாதிரி நாம் பண்ணப்போறது இல்லை.
நாம் ஆட்சிக்கு வருவதே மக்களுக்காக தான். மக்களோடு எப்படி ஒன்றிணைந்து பணியாற்றப்போகிறோம் என்பதற்காக தான் இந்த பயிற்சி பட்டறை. இதற்கு முன் நிறைய பேர் வந்திருக்கலாம். நிறைய பொய்களை சொல்லியிருக்கலாம். மக்களை ஏமாத்தியிருக்கலாம். இதெல்லாம் செய்து ஆட்சியை பிடித்திருக்கலாம். அதெல்லாம் பழைய கதை. அதுக்காக நான் இங்க வரவில்லை. இனிமே அதெல்லாம் நடக்காது. நடக்கவிட போறதும் கிடையாது. மக்கள் கிட்ட நம்பிக்கை கொண்டு வரப்போறதே பூத் லெவல் ஏஜெண்ட்ஸ் ஆன நீங்க தான். நீங்கள் ஒவ்வொருவரும் போர் வீரருக்கு சமம். கரை படியாத அரசியல் செய்ய வேண்டும் என்ற நம்பிக்கை இருக்கு. லட்சியம் இருக்கு. உழைக்கிறதுக்கு தெம்பு இருக்கு. களம் ரெடியா இருக்கு. என்று பேசினார.