விரைவில் த.வெ.க பூத் கமிட்டி மாநாடு? இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. விஜய் எடுக்கும் முடிவு!
Tamilaga Vettri Kazhagam Vijay: விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 2025 ஏப்ரல் 11ஆம் தேதி நண்பல் 12 மணிக்கு நடைபெற உள்ளது. பனையூரில் உள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், விஜய் முக்கிய முடிவுகளை எடுப்பார் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, பூத் கமிட்டி தொடர்பாக ஆலோசனை நடத்துவார் என தெரிகிறது.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்
சென்னை, ஏப்ர்ல் 11: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 2025 ஏப்ரல் 11ஆம் தேதியான இன்று நடைபெற உஎள்ளது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகளை அக்கட்சி தலைவர் விஜய் எடுப்பார் என்று கூறப்படுகிறது. 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், கட்சியை பலப்படுத்துவது தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் விஜய் அறிவுரை வழங்குவார் என தெரிகிறது.
இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
தமிழ் சினிமாவில் உச்சபட்ச நடிகராக இருக்கும் விஜய், 2024ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழக எனும் கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கிய வேகத்திலேயே முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடத்தினர். அதன்பிறகு சமூக பிரச்னைகளுக்கு தீவிரமாக குரல் கொடுத்து வருகிறார்.
சமீபத்தில் பரந்தூர் மக்களை நேரில் சந்தித்து வந்தார். அண்மையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக் குழு கூட்டம் நடந்தது. இந்த பொதுக் குழு கூட்டத்தில் திமுக மற்றும் பாஜகவை விஜய் நேரடியாக விமர்சித்தார். அந்த கூட்டத்தில் முதல்முறையாக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி என பெயரை குறிப்பிட்டு பேசினார்.
மேலும், வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு தவெகவுக்கு மட்டும் தான் நேரடி போட்டி என கூறினார். இது பேசும் பொருளாக மாறியது. மேலும், கட்சி நிர்வாகிகளும் அறிவுறுரை வழங்கினார். தேர்தலுக்காக கடுமையாக உழைக்க வேண்டும் எனவும் கூறினார்.
இதற்கிடையில், கட்சியை அனைத்து மட்டத்திலும் பலப்படுத்த கட்சியின் நிர்வாக பணிக்காக 120 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த ஒவ்வொரு மாவட்டத்திற்கு செயலாளர், துணை செயலாளர், பொருளாளர் என நியமிக்கப்பட்டு வருகிறது. இதுவரை நான்கு கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியானதாக தெரிகிறது.
விரைவில் த.வெ.க பூத் கமிட்டி மாநாடு?
அதோடு, அந்த மாவட்டங்களில் பூத் கமிட்டிகளுக்கான நிர்வாகிகள் நியமிக்கும் பணிகள் நடந்து வருகிறது. பூத் கமிட்டிக்கு நிர்வாகிகள் நியமிப்பது மிகவும் முக்கியம். இப்போது, திமுக, அதிமுகவுக்கு தான் பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளனர். எனவே, பூத் கமிட்டி நியமனம் என்பது மிகவும் முக்கியம். இந்த நிலையில், அதற்கான பணியில் தமிழக வெற்றிக் கழகம் தீவிராக இறங்கியுள்ளது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 2025 ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. அக்கட்சி தலைவர் விஜய் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமையகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
நண்பகல் 12 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பாக விஜய் ஆலோசனை நடத்துவார் என கூறப்படுகிறது. மேலும், பூத் கமிட்டி மாநாடு நடத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.