பூத் கமிட்டி கருத்தரங்கம்… மதுரையில் களமிறங்கும் விஜய்.. வெளியான தகவல்!
TVK vijay booth committee: தமிழக வெற்றிக் கழக கட்சியின் அடுத்த பூத் கமிட்டி மாநாடு மதுரையில் மாவட்டத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக கோவையில் பூத் கமிட்டி கருத்தரங்கம் நடந்த நிலையில், மே முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் மதுரையில் பூத் கமிட்டி கருத்தரங்கம் நடைபெறும் என கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகம் விஜய்
மதுரை, ஏப்ரல் 29: தமிழக வெற்றிக் கழகத்தில் (tamilaga vettri kazhagam) அடுத்த பூத் கமிட்டி மாநாடு மதுரை மாவட்டத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் பூத் கமிட்டி கருத்தரங்கம் நடந்து முடிந்த நிலையில், அடுத்த கட்டமாக மதுரை மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இடம் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருவதாக தெரிகிறது. கடந்த 2024ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கிய விஜய், அடுத்தடுத்து பல்வேறு நடவடிக்கைகளை கட்சி ரீதியாக எடுத்து வருகிறது.
பூத் கமிட்டி கருத்தரங்கம்
2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், கட்சியை அனைத்து மட்டத்திலும் பலப்படுத்த தீவிரமாக இறங்கியுள்ளார். இதில், முக்கியமானது பூத் கமிட்டி உறுப்பினர். ஒவ்வொரு கட்சிக்கும் பூத் கமிட்டிகள் பெரும் வகிக்கிறது.
தமிழகத்தில் திராவிட கட்சிகளை தவிர பெரிதாக எந்த கட்சிக்கும் பூத் கமிட்டி கிடையாது. இந்த நிலையில், கட்சிக்கு முக்கியமாக பூத் கமிட்டி கருத்தரங்கை தற்போது தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடத்தி வருகிறது. நான்கு கட்டங்களாக பூத் கமிட்டி கருத்தரங்கை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார்.
முதற்கட்டமாக, கடந்த வாரம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பூத் கமிட்டி மாநாடு நடைபெற்றது. குருவம்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழக வெற்றிக் கழக பூத் கமிட்டி நிர்வாகிகள் கருத்தரங்க கூட்டம் நடந்தது.
மதுரையில் களமிறங்கும் விஜய்
இந்த கருத்தரங்கில் நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் ஆகிய 7 மாவட்டங்களைச்சேர்ந்த பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கோவையில் இரண்டு நாட்கள் நடந்த பூத் கமிட்டி கருத்தரங்களில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் திமுகவை கடுமையாக விமர்சித்தார். இதைத் தொடர்ந்து, அடுத்த பூத் கமிட்டி கருத்தரங்கம் எங்கே நடக்கும் என்று எதிர்பார்த்துள்ளனர். இந்த நிலையில், அது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் கட்ட பூத் கமிட்டி கருத்தரங்கம் மதுரை மாவட்டத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மதுரை மாவட்டத்தில் பூத் கமிட்டி கருத்தரங்கம் மே முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் நடைபெறலாம் என கூறப்படுகிறது. இதற்காக இடத்தை தேர்வு செய்யும் பணிகளில் மும்முரமாக நடந்து வருகிறது. புஸ்ஸி ஆனந்த மதுரையில் கருத்தரங்கம் நடப்பதற்கான இடங்களை தேர்வு செய்து வருவதாக தெரிகிறது.
மதுரையில் நடைபெறும் கருத்தரங்கில் விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டத்தைச் சேர்ந்த பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்வாக்ரள என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவலும் எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.