Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

எச்சரிக்கை: தமிழில் பெயர்ப்பலகை கட்டாயம்..இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும்

Tamil Signboards Mandatory: 2025 மே மாதம் முதல் தமிழில் பெயர்ப்பலகை கட்டாயம் எனவும் தவறினால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தின் அனைத்து வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள், மற்றும் தொழிற்சாலைகள் தமிழில் பெயர்பலகை வைக்க வேண்டும் எனவும் இதற்காக கண்காணிப்பு குழுக்கள் தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் உருவாக்கப்பட்டுள்ளன.

எச்சரிக்கை: தமிழில் பெயர்ப்பலகை கட்டாயம்..இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும்
தமிழில் பெயர்ப்பலகை கட்டாயம் Image Source: x
sivasankari-bose
Sivasankari Bose | Updated On: 13 Apr 2025 10:12 AM

திருப்பூர் ஏப்ரல் 13: தமிழில் பெயர்ப்பலகை கட்டாயம் (Nameplate in Tamil is mandatory) இருக்க வேண்டும் எனவும் இல்லையெனில் கடை ஒன்றுக்கு இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் தமிழக அமைச்சர் சாமிநாதன் (Minister Saminathan) எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகள், ஓட்டல்களில் தமிழில் பெயர்பலகை வைக்க வேண்டும் என வலியுறுத்திய அவர் தமிழில் பெயர்பலகை இல்லாத நிறுவனங்களுக்கு 2025 மே மாதம் முதல் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தார். தமிழ் வளர்ச்சி மற்றும் மரியாதைக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார். திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தபோது அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

பெயர் பலகைகள் கட்டாயம் தமிழில் நிறுவப்பட வேண்டும்

தொழிற்சாலைகள் சட்டம், 1948 மற்றும் விதிகள், 1950-ன் கீழ் விதி 113ப்படி, அனைத்து தொழிற்சாலைகளிலும் பெயர் பலகைகள் கட்டாயம் தமிழில் நிறுவப்பட வேண்டும். இந்தப் பலகையில் முதலில் தமிழ் மொழியில் நிறுவத்தின் பெயர் குறிப்பிடப்பட வேண்டும். அதன் பின் ஆங்கிலத்தில் மற்றும் விருப்பமுள்ளவர்கள் பிற மொழிகளில் குறிப்பிடலாம்.

தமிழில் பெயர்ப்பலகை வைக்க அறிவுறுத்தல்

தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் சாமிநாதன் திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, தமிழில் பெயர்ப்பலகை வைக்கும் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், கடைகள் போன்ற அனைத்து நிறுவனங்களும் தங்களது பெயர்பலகைகளை தமிழில் வெளியிட வேண்டும் என்று அவர் கூறினார்.

தமிழில் பெயர்பலகை கட்டாயம்: மே முதல் அபராதம்

மேலும், இது தொடர்பாக வரும் மே மாதம் முதல், தமிழில் பெயர்பலகை வைக்காத நிறுவனங்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். இந்த நடைமுறை தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும், அதன் மரியாதையை பாதுகாப்பதற்காகவும் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வெளியிட்ட அறிவுறுத்தல்

இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2025 மே 1ம் தேதிக்குள் பெயர் பலகைகளை தமிழில் நிறுவுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதை மீறும் நிறுவனங்களுக்கு, தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவங்கள் சட்டம், 1947 மற்றும் விதிகள், 1948-ன் படி அபராதம் விதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

தேனியில் கண்காணிப்பு குழு அமைப்பு

தேனி மாவட்டத்திலும் இதே நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தமிழில் பெயர் பலகைகள் நிறுவப்படுவதை உறுதி செய்யும் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் தொழிலாளர் துறை, தொழிலக பாதுகாப்பு இயக்ககம், தமிழ் வளர்ச்சித் துறை, உள்ளாட்சித் துறை, வணிகர் சங்கங்கள் மற்றும் ஓட்டல் சங்கங்கள் ஆகியவை இணைந்துள்ளன.

சம்பவம் செய்த சுப்மன், சுதர்சன்! கொல்கத்தாவை கடைந்தெடுத்த குஜராத்
சம்பவம் செய்த சுப்மன், சுதர்சன்! கொல்கத்தாவை கடைந்தெடுத்த குஜராத்...
சுவிட்சுக்கு பதிலாக சிரிஞ்ச் மூலம் பல்பை ஆன் செய்யும் இளைஞர்!
சுவிட்சுக்கு பதிலாக சிரிஞ்ச் மூலம் பல்பை ஆன் செய்யும் இளைஞர்!...
பனிக்கட்டியா? வைரமா? வைரலாகும் ஐஸ்லாந்தின் டைமண்ட் பீச் வீடியோ!
பனிக்கட்டியா? வைரமா? வைரலாகும் ஐஸ்லாந்தின் டைமண்ட் பீச் வீடியோ!...
திருமண பரிசாக நீல நிற டிரம்... மணமக்களுக்குக் காத்திருந்த ஷாக்!
திருமண பரிசாக நீல நிற டிரம்... மணமக்களுக்குக் காத்திருந்த ஷாக்!...
சுந்தர் சி-யின் கேங்கர்ஸ் படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!
சுந்தர் சி-யின் கேங்கர்ஸ் படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!...
பிரச்சனையை கொண்டுவரனும் என்றே கமல் செய்வார்- கே.எஸ்.ரவிக்குமார்!
பிரச்சனையை கொண்டுவரனும் என்றே கமல் செய்வார்- கே.எஸ்.ரவிக்குமார்!...
ஒரிஜினலைப் போலவே போலி ரூ.500 நோட்டுக்கள் - எப்படி கண்டுபிடிப்பது?
ஒரிஜினலைப் போலவே போலி ரூ.500 நோட்டுக்கள் - எப்படி கண்டுபிடிப்பது?...
ஜே.டி.வான்ஸை இந்திய முறைப்படி வரவேற்ற பிரதமர் மோடி..!
ஜே.டி.வான்ஸை இந்திய முறைப்படி வரவேற்ற பிரதமர் மோடி..!...
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ரூ.32,000 வரை விலை குறைத்த ஹீரோ!
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ரூ.32,000 வரை விலை குறைத்த ஹீரோ!...
தேர்தலில் நாம் தமிழர் கட்சி பாஜகவுடன் கூட்டணியா? சீமான் விளக்கம்!
தேர்தலில் நாம் தமிழர் கட்சி பாஜகவுடன் கூட்டணியா? சீமான் விளக்கம்!...
கம்மி செலவில் அதிக பலன்கள்.. திராட்சை நீரில் பல பலன்கள்!
கம்மி செலவில் அதிக பலன்கள்.. திராட்சை நீரில் பல பலன்கள்!...