Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஏப்ரல் 19 முதல் குளுகுளுவென ஏ.சி. மின்சார ரயிலில் பயணிக்கலாம்…

First Air-Conditioned Electric Train: தமிழ்நாட்டில் முதல் முறையாக குளிர்சாதன வசதியுடன் கூடிய புறநகர் ரயில் சேவை 2025 ஏப்ரல் 19 நாளை முதல் இயக்கப்பட உள்ளது. தற்போது கோடை வெயில் சூழ்நிலையில் இந்த சேவை பயணிகளுக்கு மிகுந்த நிவாரணமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 19 முதல் குளுகுளுவென ஏ.சி. மின்சார ரயிலில் பயணிக்கலாம்…
ஏ.சி. மின்சார ரயில்Image Source: x
sivasankari-bose
Sivasankari Bose | Published: 18 Apr 2025 21:20 PM

சென்னை ஏப்ரல் 18: சென்னை – செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. பயணிகள் நீண்ட நாட்களாக கோரிய குளிர்சாதன வசதியுடன் கூடிய ரெயிலே இது. சோதனை ஓட்டத்தின் போது ஏற்பட்ட அதிர்வு பிரச்சனை சரிசெய்யப்பட்டுள்ளது. தற்போது ரெயில் தாம்பரம் நிலையத்தில் தயாராக காத்திருக்கிறது. முக்கிய விருந்தினரின் தேதி காரணமாக தொடக்க விழா தாமதமாகியுள்ளது. 12 பெட்டிகள் கொண்ட ரெயில் சேவைக்கான கட்டணங்கள் ரூ.35 முதல் ரூ.95 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை – செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரயில் சேவை

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் மின்சார ரெயில்கள் முக்கியப் பாத்திரம் வகிக்கின்றன. தினசரி லட்சக்கணக்கான பயணிகள் சென்னை கடற்கரை – தாம்பரம் மற்றும் கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடங்களில் இயங்கும் ரெயில்களை பயன்படுத்தி வருகிறார்கள். இருப்பினும், இவ்வழித்தடங்களில் தற்போது வரை குளிர்சாதன வசதி இல்லாத சாதாரண மின்சார ரெயில்களே இயக்கப்பட்டு வருகின்றன.

பயணிகளின் கோரிக்கையை ஒட்டி புதிய சேவை

பயணிகள் பலர் ஏ.சி. வசதியுடன் கூடிய மின்சார ரெயில் சேவை தேவை எனக் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரெயில் இயக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

சோதனை ஓட்டமும் அதன் சவால்களும்

அதன்படி, ஏ.சி. மின்சார ரெயில் தயாரிக்கப்பட்டு, கடந்த மாதம் சோதனை ஓட்டம் நடைபெற்றது. சோதனை ஓட்டத்தின் போது ஏ.சி. பகுதியில் அதிர்வு பிரச்சனை ஏற்பட்டது. இதற்கான பராமரிப்பு வேலைகள் முடிக்கப்பட்டு தற்போது ரெயில் தாம்பரம் பணிமனையில் தயாராக காத்திருக்கிறது.

தொடக்க விழாவின் தாமதம்

பிரதமர் நரேந்திர மோடி பாம்பன் பாலத்தை திறந்தபோது, அதே நேரத்தில் இந்த ஏ.சி. ரெயிலைத் தொடங்கும் திட்டமும் இருந்தது. ஆனால், தொடக்க விழா ஏதும் நடத்தப்படாமல் அது தாமதம் அடைந்தது. நாடு முழுவதும் ஏ.சி. வசதியுள்ள 14 புதிய புறநகர் ரெயில்கள் அண்மையில் தொடங்கப்பட்ட போதும், சென்னை ரெயில் சேவை உடனடியாக தொடங்கப்படவில்லை.

தற்போதைய நிலை மற்றும் எதிர்பார்ப்பு

ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்ததாவது, இந்தியாவின் பல நகரங்களில் ஏற்கனவே ஏ.சி. மின்சார ரெயில்கள் இயங்கிவருகின்றன. சென்னையில் இது முதன்முறையாக அமையவிருக்கிறது. தற்போது முக்கிய விருந்தினர் ஒருவரின் தேதி உறுதி செய்யப்படாத காரணத்தால் தொடக்க விழா தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

சென்னையின் முதல் ஏ.சி. புறநகர் ரெயில் சேவை ஏப்ரல் 19-முதல் தொடக்கம்

தமிழ்நாட்டின் முதல் ஏ.சி. மின்சார புறநகர் ரெயில் நாளை முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரவிருக்கிறது. 12 பெட்டிகளைக் கொண்ட இந்த ரெயில், கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் விரைவில் இயக்கப்படவுள்ளது. கட்டண விபரமாக, கடற்கரை முதல் தாம்பரம் வரை 29 கிமீக்கு ரூ.95, 9 கிமீக்கு ரூ.35, 24 கிமீக்கு ரூ.70 மற்றும் 34 கிமீக்கு ரூ.95 என பயணத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

உச்சத்தில் மீன் விலை.. சிக்கன் வைத்து இப்படி செஞ்சு பாருங்க!
உச்சத்தில் மீன் விலை.. சிக்கன் வைத்து இப்படி செஞ்சு பாருங்க!...
PPFல் தம்பதிகள் ரூ.1 கோடி லாபம் பெறுவது எப்படி?
PPFல் தம்பதிகள் ரூ.1 கோடி லாபம் பெறுவது எப்படி?...
உலக கல்லீரல் தினத்தில் பிரதமர் மோடி குடிமக்களுக்கு அட்வைஸ்!
உலக கல்லீரல் தினத்தில் பிரதமர் மோடி குடிமக்களுக்கு அட்வைஸ்!...
அறுந்த மின்கம்பி! தெரியாமல் கால் வைத்த சிறுவனை மீட்ட இளைஞர்!
அறுந்த மின்கம்பி! தெரியாமல் கால் வைத்த சிறுவனை மீட்ட இளைஞர்!...
எனக்கு நடிக்கவே ஆசை இல்லை.. எல்லாம் அவரால்தான்.. நடிகை ஜோதிகா!
எனக்கு நடிக்கவே ஆசை இல்லை.. எல்லாம் அவரால்தான்.. நடிகை ஜோதிகா!...
உலக அளவில் மோகன்லாலின் எல்2: எம்புரான் இதுவரை செய்த வசூல்?
உலக அளவில் மோகன்லாலின் எல்2: எம்புரான் இதுவரை செய்த வசூல்?...
ஆப்கானிஸ்தான் பகுதியில் நிலநடுக்கம்.. இந்தியாவிலும் அதிர்வு!
ஆப்கானிஸ்தான் பகுதியில் நிலநடுக்கம்.. இந்தியாவிலும் அதிர்வு!...
சங்கமித்ரா திரைப்படம் மீண்டும் உருவாகிறதா? இயக்குநர் சுந்தர் சி!
சங்கமித்ரா திரைப்படம் மீண்டும் உருவாகிறதா? இயக்குநர் சுந்தர் சி!...
நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது பரபரப்பு - பரபரப்பு வாக்குமூலம்!
நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது பரபரப்பு - பரபரப்பு வாக்குமூலம்!...
கோடையில் மாம்பழம் ருசிக்க ஆசை? இப்படி செய்தால் ஆரோக்கியம் கெடாது!
கோடையில் மாம்பழம் ருசிக்க ஆசை? இப்படி செய்தால் ஆரோக்கியம் கெடாது!...
2025-ல் அதிக கூலிங் கொடுக்கக் கூடிய டாப் 5 சிறந்த ஏசிகள் !
2025-ல் அதிக கூலிங் கொடுக்கக் கூடிய டாப் 5 சிறந்த ஏசிகள் !...