6 மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்.. அடுத்த 10 நாட்களுக்கு இப்படி தான் இருக்கும்.. எச்சரிக்கும் ரிப்போர்ட்..
Weather Report: தமிழ்நாட்டில் அடுத்த 10 நாட்களுக்கு வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூரில் 40 டிகிரியும், சென்னையில் அதிகப்பட்சமாக 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார்.

கோப்பு புகைப்படம்
சென்னை, ஏப்ரல் 19: கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை (100 degree Fahrenheit) கடந்து வெயில் பதிவாகி வருகிறது. அதன்படி ஏப்ரல் 19, 2025 மாலை 5.30 மணி நிலவரப்படி வேலூரில் (Vellore) அதிகபட்சமாக 40.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஆறு மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிகப்படியான வெப்பநிலையின் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். திருத்தணியில் அதிகபட்சமாக இயல்பை விட 2.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. வேலூர் மாவட்டத்தை தொடர்ந்து திருத்தணியில் 39.6 டிகிரி செல்சியசும், மதுரையில் 39.5 டிகிரி செல்சியசும், கரூர் பரமத்தியில் 39 டிகிரி செல்சியசும். மதுரை நகரில் 39 டிகிரி செல்சியசும், திருச்சிராப்பள்ளியில் 38.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சென்னை பொறுத்த வரை நுங்கம்பாக்கத்தில் 36 டிகிரி செல்சியசும், மீனம்பாக்கத்தில் 36.1 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 1.2° c அதிக வெப்பநிலையாகும்.
அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக ஒரு சில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழ் அடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் வரும் ஏப்ரல் 25ஆம் தேதி வரை ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தனியார் வானிலை ஆய்வாளர் சொல்வது என்ன?
Next 10 days the hot temperature in the Interior Tamil Nadu is back. Today Vellore can again touch 40C for second time this month, Tirutanni will be 39+.
Erode – Salem-Namakkal belt be in 39C range.
Karur will in 40C range
Madurai too will be in 39C range
Trichy will be in…— Tamil Nadu Weatherman (@praddy06) April 19, 2025
அடுத்து ஒரு பத்து நாட்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாக கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதனை தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அரியலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை மற்றும் உள் டெல்டா மாவட்டங்களில் கடலூர் மாவட்டத்தில் உள்பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்க கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.
பகல் நேரங்களில் அதிகபட்ச வெப்பநிலையின் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் இரவு நேரத்தில் கோடை மழை இருக்கக் கூடும் என்றும் ஏப்ரல் 19ஆம் தேதி பொருத்தவரை நாமக்கல் மாவட்டத்தில் கோடை மழை இருக்கக்கூடும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் சென்னையில் நகர் பகுதிகளில் வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும் என்றும் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 37 அல்லது 38 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக் கூறும் எனவும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்