Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Tamil Nadu Heatwave: தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் சதம்! போட்டுத்தாக்க தொடங்கிய வெயில்.. அடுத்த 7 நாட்கள் வானிலை எப்படி..?

Tamil Nadu weather update: தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் வெப்ப அலை தாக்கம் அதிகரித்துள்ளது. வேலூர் மற்றும் மதுரையில் 104°F வெப்பநிலை பதிவாகியுள்ளது. அடுத்த ஏழு நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை அறிவிப்பு தெரிவிக்கிறது. வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை உயரக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை.

Tamil Nadu Heatwave: தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் சதம்! போட்டுத்தாக்க தொடங்கிய வெயில்.. அடுத்த 7 நாட்கள் வானிலை எப்படி..?
வெயில் தாக்கம்Image Source: PTI
mukesh-kannan
Mukesh Kannan | Published: 20 Apr 2025 20:33 PM

சென்னை, ஏப்ரல் 20: தமிழ்நாடு (Tamilnadu) மட்டுமின்றி இந்தியா முழுவதும் கோடை வெயில் அதன் தாக்கத்தை வெளிப்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்தாலும், இன்று அதாவது 2025 ஏப்ரல் 20ம் தேதி பல இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்தது. ஏப்ரல் 20, 2025 மாலை 5.30 மணி நிலவரப்படி, தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வேலூர் மற்றும் மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் அளவிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, மதுரை (Madurai), கரூர் மற்றும் ஈரோட்டில் 103 டிகிரி பாரன்ஹூட்டும், திருச்சி மற்றும் திருத்தணியில் 102 டிகிரி பாரன்ஹூட்டும், மீனம்பாக்கத்தில் 100 டிகிரி பாரன்ஹூட்டும் பதிவாகியுள்ளது.

வெப்பநிலையில் மாற்றமா..?

தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இன்று அதாவது 2025 ஏப்ரல் 20ம் தேதி 2 முதல் 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக பதிவாகியுள்ளது. ஏனைய தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டியே காணப்பட்டது. தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 36–41° செல்சியஸூம், தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 34–36° செல்சியஸும்,  மலைப் பகுதிகளில் 21–28° செல்சியஸும் பதிவாகியுள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு:

2025 ஏப்ரல் 21ம் தேதி முதல் 2025 ஏப்ரல் 26ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

2025 ஏப்ரல் 21ம் தேதியான நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3° செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும், 2025 ஏப்ரல் 22ம் தேதி முதல் 2025 ஏப்ரல் 24ம் தேதி வரை தமிழ்நாட்டின் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை எனினும், ஓரிரு இடங்களில் சற்று உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:

2025 ஏப்ரல் 22ம் தேதி முதல் 2025 ஏப்ரல் 24ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்றும், 2025 ஏப்ரல் 22ம் தேதி முதல் 2025 ஏப்ரல் 24ம் தேதி வரை தமிழ்நாட்டில் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

2025 ஏப்ரல் 21ம் தேதியான சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழ்நாட்டின் கடலோரப்பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் 2025 ஏப்ரல் 21ம் தேதி முதல் 2025 ஏப்ரல் 24ம் தேதி வரை மீனவர்களுக்கான எச்சரிக்கை என்பது எதுவுமில்லை.

பம்பாய் படம் இப்போ ரிலீஸ் ஆனா தியேட்டரே பத்தி எரியும்
பம்பாய் படம் இப்போ ரிலீஸ் ஆனா தியேட்டரே பத்தி எரியும்...
2026 சட்டமன்ற தேர்தலில் யார் யாருக்கு எவ்வளவு தொகுதிகள் - நயினார்
2026 சட்டமன்ற தேர்தலில் யார் யாருக்கு எவ்வளவு தொகுதிகள் - நயினார்...
வெயிலும் மழையும் தொடரும் – வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை
வெயிலும் மழையும் தொடரும் – வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை...
எலுமிச்சையை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்? ஆச்சரிய தகவல்!
எலுமிச்சையை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்? ஆச்சரிய தகவல்!...
சிகிச்சைக்காக வந்த முதியவரை தர தரவென இழுத்து சென்ற டாக்டர்!
சிகிச்சைக்காக வந்த முதியவரை தர தரவென இழுத்து சென்ற டாக்டர்!...
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய MI! CSK நம்பிக்கையை உடைத்து வெற்றி
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய MI! CSK நம்பிக்கையை உடைத்து வெற்றி...
சாதிக்கவேண்டும் என்ற வெறியிருக்கு.. அந்த ஆசை எனக்கு- நடிகர் அஜித்
சாதிக்கவேண்டும் என்ற வெறியிருக்கு.. அந்த ஆசை எனக்கு- நடிகர் அஜித்...
படம் வெற்றிபெற காமாக்யா கோவிலில் தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா!
படம் வெற்றிபெற காமாக்யா கோவிலில் தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா!...
அதிரடி நகைச்சுவை.. மிர்ச்சி சிவாவின் சுமோ படத்தின் ட்ரெய்லர்!
அதிரடி நகைச்சுவை.. மிர்ச்சி சிவாவின் சுமோ படத்தின் ட்ரெய்லர்!...
நம் பேச்சை ஒட்டு கேட்கும் ஸ்மார்ட்போன் - எப்படி தவிர்ப்பது?
நம் பேச்சை ஒட்டு கேட்கும் ஸ்மார்ட்போன் - எப்படி தவிர்ப்பது?...
பெங்களூருவில் மனைவியால் கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி?
பெங்களூருவில் மனைவியால் கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி?...