சுட்டெரிக்கும் வெயில்.. 4 டிகிரி வரை அதிகரிக்கும்… லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!

Tamil Nadu Weather Update : தமிழகத்தில் இன்னும் சில அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ளது. இந்த நிலையில், அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையிலும் வெயிலின் தாக்கம் 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக் கூடும் என கூறியுள்ளது.

சுட்டெரிக்கும் வெயில்.. 4 டிகிரி வரை அதிகரிக்கும்... லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!

வெப்பநிலை

Updated On: 

27 Apr 2025 06:17 AM

சென்னை, ஏப்ரல் 27: தமிழக்ததில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என வானிலை மையம் (Tamil Nadu Weather Alert) தெரிவித்துள்ளது. இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும் என தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி எடுக்கிறது. 2025 பிப்ரவரி மாதம் முதலே வெயில் படுத்தி எடுக்கிறது. இதற்கிடையில், அவ்வப்போது மழையும் பெய்தது. ஆனால், ஏப்ரல் மாதத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கிறது. கூடவே அனல் காற்றும் வீசுகிறது. இதனால் மக்கள் கடுமையாக சிரமப்பப்படுகின்றனர்.

சுட்டெரிக்கும் வெயில்

இன்னும் சில நாட்களில் அக்னி வெயில் தொடங்குகிறது. இதன்பிறகு, வெயில் தாக்கம் மோசமாக இருக்கும். இந்த நிலையில், அடுத்த 3 நாட்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம்.

2025 ஏப்ரல் 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களி அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், 2025 ஏப்ரல் 27ஆம் தேதி அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரித்துள்ளது.

லேட்டஸ்ட் வானிலை அப்டேட்


சென்னையை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை அரியலூரில் 39.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். அதன்பிறகு, சேலத்தில் 39.1, கரூரில் 38.5, ஈராட்டில் 38.4, வேலூரில் 38.1, திருத்தணியில் 38, தஞ்சையில் 38 டிகிரி வெப்பநிலை பதிவாகி உள்ளது. சென்னை விமான நிலையத்தில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளதாக பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

இதற்கிடையில், தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுககு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, 2025 ஏப்ரல் 27ஆம்தேதி முதல் மே 2ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

எனவே, வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என வானிலை மையம் கூறி வருகிறது. எனவே, அத்தியாவசிய தேவையின்றி முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் அறிவுறுத்தப்படுகிறது.