அடுத்த 2 நாட்கள்.. 3 டிகிரி வரை வெப்பநிலை உயரும்.. வானிலை மையம் அலர்ட்!
tamil nadu weather alert: தமிழக்ததில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை
சென்னை, ஏப்ரல் 19: தமிழகத்தில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை மையம் (Tamil Nadu Heatwave Alert) தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி எடுக்கிறது. 2025 மார்ச் மாதத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால், மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது.
3 டிகிரி வரை வெப்பநிலை உயரும்
இன்னும் மே மாதங்களில் இன்னும் மோசமாக இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கிடையில், அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. கொங்கு, தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும், அண்மையில் கூட சென்னையில் பலத்த மழை பெய்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது, 2025 ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிமாக இருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்வை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
வானிலை மையம் அலர்ட்
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) April 18, 2025
சென்னையை பொறுத்தவரை, 2025 ஏப்ரல் 19ஆம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், தென்னிந்திய பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்று மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
இதன் காரணமாக, 2025 ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை, தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை மதுரை விமான நிலையத்தில் 39.0 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 23.0 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.