Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அடுத்த 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.. லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!

Tamil Nadu Weather Update : தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.. லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
வெப்பநிலைImage Source: PTI
umabarkavi-k
Umabarkavi K | Published: 23 Apr 2025 07:01 AM

சென்னை, ஏப்ரல் 23: சென்னையில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் (Tamil Nadu Heatwave Alert) தெரிவித்துள்ளது. அதாவது, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கக் கூடும் என கணித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. 2024 பிப்ரவரி மாதம் இறுதியில் இருந்தே வெயில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. இப்போதே வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது.

அடுத்த 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்

இன்னும் மே மாதங்களில் வெப்பநிலை உச்சமடையும் என வானிலை நிபுணர்கள் கூறி வருகின்றனர்.  இதனால், மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், அவ்வப்போது தமிழகத்தில் கோடை மழை பெய்து வருகிறது.

சென்னையில் கூட ஏப்ரல் மாதத்தில் 10 ஆண்டுகளுக்கு மழை வெளுத்து வாங்கியது. இருப்பினும், வெயிலின் தாக்கம் குறையவில்லை. இந்த நிலையில், தமிழக்ததில் அடுத்த மூன்று நாட்களுக்கு இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது.

அதாவது, 2025 ஏப்ரல் 23ஆம் தேதியில் இருந்து 26ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

லேட்டஸ்ட் வானிலை அப்டேட்


சென்னையை பொறுத்தவரை, 2025 ஏப்ரல் 23ஆம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தென்தமிழக, கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் 2025 ஏப்ரல் 23ஆம் தேதி முதல் 2025 ஏப்ரல் 28ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கணித்துள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் வரும் நாட்களில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 39.5 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 22 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. மேலும், ஈராடு, மதுரை விமான நிலையம், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பகலில் வேலை செய்வது போர் - ஏ.ஆர்.ரகுமானின் ரொட்டின் இதுதான்
பகலில் வேலை செய்வது போர் - ஏ.ஆர்.ரகுமானின் ரொட்டின் இதுதான்...
பயங்கரவாதிகள் எப்படி இருப்பார்கள்? வெளியான வரைபடம்!
பயங்கரவாதிகள் எப்படி இருப்பார்கள்? வெளியான வரைபடம்!...
கார் வேண்டாம்.. நேராக மீட்டிங் - பிரதமர் மோடியின் அவசர ஆலோசனை!
கார் வேண்டாம்.. நேராக மீட்டிங் - பிரதமர் மோடியின் அவசர ஆலோசனை!...
"மோடியிடம் போய் சொல்" பெண்ணை மிரட்டிய பயங்கரவாதி!
பேட்டிங்கில் சொதப்பல்! ரூ.27 கோடி எதற்கு? பண்ட்-ஐ விளாசும் பேன்ஸ்
பேட்டிங்கில் சொதப்பல்! ரூ.27 கோடி எதற்கு? பண்ட்-ஐ விளாசும் பேன்ஸ்...
ஹனிமூன் சென்ற கடற்படை வீரர் மனைவி கண்முன்னே சுட்டுக்கொலை..!
ஹனிமூன் சென்ற கடற்படை வீரர் மனைவி கண்முன்னே சுட்டுக்கொலை..!...
டாஸ்மாக் வழக்கில் சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
டாஸ்மாக் வழக்கில் சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு...
செங்கல்பட்டில் புதிய பேருந்து நிலையம் தீபாவளிக்கு முன் திறப்பு
செங்கல்பட்டில் புதிய பேருந்து நிலையம் தீபாவளிக்கு முன் திறப்பு...
நெருங்கும் அட்சய திரிதியை... அதிரடியாக குறைந்த தங்கம் விலை
நெருங்கும் அட்சய திரிதியை... அதிரடியாக குறைந்த தங்கம் விலை...
பஹல்காம் தாக்குதல்.. உடனே அழைத்த அமெரிக்க அதிபர்!
பஹல்காம் தாக்குதல்.. உடனே அழைத்த அமெரிக்க அதிபர்!...
துப்பாக்கியுடன் பயங்கரவாதி.. வெளியான பகீர் போட்டோ!
துப்பாக்கியுடன் பயங்கரவாதி.. வெளியான பகீர் போட்டோ!...