Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நெருங்கும் அக்னி நட்சத்திரம்.. அடுத்த 3 நாட்களுக்கு கொளுத்தப்போகும் வெயில்.. வானிலை மையம் தகவல்!

Tamil Nadu Weather Update : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் கூறியுள்ளது.

நெருங்கும் அக்னி  நட்சத்திரம்.. அடுத்த 3 நாட்களுக்கு கொளுத்தப்போகும் வெயில்.. வானிலை மையம் தகவல்!
வெப்பநிலைImage Source: PTI
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 30 Apr 2025 06:53 AM

சென்னை, ஏப்ரல் 30:  தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்பநிலை (Heatwave) உயரக்கூடும் என வானிலை மையம் (Tamil Nadu Weather Alert) தெரிவித்துள்ளது.  தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ்  வரை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது.  2025 மார்ச் மாதம் முதலே வெயில் கொளுத்தி எடுக்கிறது. இதனால், மக்கள் கடுமையான சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இப்போதே பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது. வெயிலின் தாக்கம் வரும் நாட்களில் இன்னும் அதிகமாக இருக்கும் சொல்லப்படுகிறது.

அடுத்த 3 வெயில் கொளுத்தும்

இந்த நிலையில், அடுத்த மூன்று நாட்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம். அதன்படி, 2025 ஏப்ரல்30ஆம் தேதி முதல் மே 3ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிமாக இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், 2025 மே 1ஆம் தேதி வரை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருப்பதால், தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை, 2025 ஏப்ரல் 30ஆம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பிநலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நெருங்கும் அக்னி நட்சத்திரம்


மேலும், லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்ல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதோடு, வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, 2025 ஏப்ரல் 30ஆம் தேதி முதல் மே 5ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 39.5 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது. அடுத்ததாக வேலூரில் 39.9, திருச்சியில் 38.1, சேலத்தில் 38.2, ஈரோட்டில் 38.6, திருத்தணியில் 37.5, மதுரை விமான நிலையத்தில் 37.2, தருமபுரியில் 37.0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.

மேலும், சென்னையில் மீனம்பாக்கத்தில் 36.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், நுங்கம்பாக்கத்தில் 35. 1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் 2024 மே 4ஆம் தேதி தொடங்குகிறது. இதனால், மே மாதத்தில் இருந்து அக்னி வெயில் கொளுத்தி எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

2025 ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி எப்போது? - அதன் சிறப்புகள் இதோ!
2025 ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி எப்போது? - அதன் சிறப்புகள் இதோ!...
அமெரிக்க ஏர்லைன்ஸ்: விமானி அறைக்குள் நுழைய முயன்ற மூதாட்டி
அமெரிக்க ஏர்லைன்ஸ்: விமானி அறைக்குள் நுழைய முயன்ற மூதாட்டி...
ஐயப்பனே விரும்பி காட்சிக்கொடுத்த கோயில்.. எங்கே தெரியுமா?
ஐயப்பனே விரும்பி காட்சிக்கொடுத்த கோயில்.. எங்கே தெரியுமா?...
"இனி இப்படியெல்லாம் செய்யாதீங்க" தொண்டர்களுக்கு விஜய் அட்வைஸ்
மே மாதத்தில் 2 சனிப்பிரதோஷம்.. எப்போது தெரியுமா?
மே மாதத்தில் 2 சனிப்பிரதோஷம்.. எப்போது தெரியுமா?...
ஐபிஎல்லில் மீண்டும் சர்ச்சை! ரிங்கு சிங்குவை பளார் விட்ட குல்தீப்
ஐபிஎல்லில் மீண்டும் சர்ச்சை! ரிங்கு சிங்குவை பளார் விட்ட குல்தீப்...
கடலுக்குள் நடனம்... சென்னையை சேர்ந்த சிறுவன், சிறுமி அசத்தல்
கடலுக்குள் நடனம்... சென்னையை சேர்ந்த சிறுவன், சிறுமி அசத்தல்...
தேமுதிக இளைஞரணி செயலாளரானார் விஜய பிரபாகரன்
தேமுதிக இளைஞரணி செயலாளரானார் விஜய பிரபாகரன்...
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்? அப்டேட் இதோ
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்? அப்டேட் இதோ...
அடுத்த போப் ஆண்டவராகும் டிரம்ப்? அவரே சொன்ன முக்கியம் விஷயம்!
அடுத்த போப் ஆண்டவராகும் டிரம்ப்? அவரே சொன்ன முக்கியம் விஷயம்!...
தமிழக அங்கன்வாடிகளில் உணவு தரம் கேள்விக்குறி..? அறிக்கை வெளியீடு
தமிழக அங்கன்வாடிகளில் உணவு தரம் கேள்விக்குறி..? அறிக்கை வெளியீடு...