வெளுக்கும் மழை.. சென்னையில் எப்படி? லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!

Chennai Rain Update : சென்னையில் 2025 ஏப்ரல் 16ஆம் தேதியான நேற்று பலத்த மழை பெய்த நிலையில், 2025 ஏப்ரல் 17ஆம் தேதியான இன்று சென்னையில் நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளுக்கும் மழை.. சென்னையில் எப்படி? லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!

சென்னையில் மழை

Published: 

17 Apr 2025 06:59 AM

சென்னை, ஏப்ரல் 17: தமிழக்ததில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் சென்னையில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி எடுக்கிறது. 2025 மார்ச் மாதம் முதல் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது. இன்னும் மே மாதத்தில் வெப்பநிலை அதிகமாக இருக்கக் கூடும்.

வெளுக்கும் மழை

இதற்கிடையில், தமிழக்ததில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. 2025 ஏப்ரல் 16ஆம் தேதியான நேற்று சென்னையில் பேய் மழை பெய்தது. நேற்று காலை முதலே சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. சென்னையில் ஏப்ரல் மாதத்தில் 10 ஆண்டுகளுக்கு இல்லாத வகையில் திடீரென கனமழை கொட்டியது. அதிகபட்சமாக மேடவாக்கத்தில் 13 செ.மீ மழை பதிவாகி உள்ளது.  இந்த நிலையில், தற்போதை வானிலை நிலவரத்தை பார்ப்போம்.

மேலும், வளசரவாக்கத்தில் 10 செ.மீ, சாலிகிராமத்தில 8 செ.மீ, பாரிமுனையில் 7 செ.மீ, நுங்கம்பாக்கத்தில் 7 செ.மீ, ராஜா அண்ணாமலைபுரத்தில் 7 செ.மீ என்ற அளவில் மழை பெய்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

சென்னையில் எப்படி?


இதன் காரணமாக, 2025 ஏப்ரல் 17ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை 2025 ஏப்ரல் 17ஆம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதே நேரததில், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், 2025 ஏப்ரல் 17ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிபடியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை வேலூரில் 38.1 செல்சியஸ் பதிவாகி உள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை தருமபுரியில் 21 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது.