தமிழகத்தில் வெளுக்கும் கனமழை… எந்தெந்த மாவட்டங்கள்? லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!

Tamil Nadu Weather Update : தமிழகத்தில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், 2025 ஏப்ரல் 8ஆம் தேதியான இன்று கனமழை வெளுக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும். சென்னையிலும் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வெளுக்கும் கனமழை... எந்தெந்த மாவட்டங்கள்? லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!

தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை

Updated On: 

08 Apr 2025 06:21 AM

சென்னை, ஏப்ரல் 08: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தில் 2025 ஏப்ரல் 8ஆம் தேதியான இன்று கனமழை (Tamil Nadu Rain Update) வெளுக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கணித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெளியே செல்லவே முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது.

கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. சென்னையிலும் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இந்த சூழலில், பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சில தினங்களாகவே விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் 2025 ஏப்ரல் 8ஆம் தேதியான இன்று கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.

இது 2025 ஏப்ரல் 8ஆம் தேதியான இன்று நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

எந்தெந்த மாவட்டங்கள்?


இதன் காணரமாக, தமிழகத்தில் 2025 ஏப்ரல் 8ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், 2025 ஏப்ரல் 8ஆம் தேதியான தமிழகத்தில் ஒருசில இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் மிதமான மழை பெய்யும்.

அதோடு, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை 2025 ஏப்ரல் 8ஆம் தேதியான இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று நகரில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 2025 ஏப்ரல் 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் வெயில் கொளுத்தி எடுக்கும் நிலையில், மழை பெய்வது வெப்பத்தை தனித்து குளிர்ச்சியான சூழலை தரும் என்பது குறிப்பிடத்தக்கது.