Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தமிழகத்தில் 7 நாளுக்கு வெளுக்கும் மழை.. சென்னை நிலவரம் என்ன? வானிலை மையம் அலர்ட்!

Tamil Nadu Weather Alert : கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 7 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை நகரின் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 7 நாளுக்கு வெளுக்கும் மழை.. சென்னை நிலவரம் என்ன?  வானிலை மையம் அலர்ட்!
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புImage Source: PTI
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 17 Apr 2025 14:33 PM

சென்னை, ஏப்ரல் 17: தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் (Tamil Nadu Weather Forecast) தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இந்த நிலையில்,  7 நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. 2025 மார்ச் மாதத்தில் இருந்தே வெயில் கொளுத்தி எடுக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை கடந்து பதிவாகி வருகிறது.

தமிழகத்தில் 7 நாளுக்கு வெளுக்கும் மழை

இதனால், கடுமையான சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். அத்தியாவசிய தேவையின்றி  மதிய நேரத்தில் வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர்.  இதற்கிடையில், கடந்த சில தினங்களாகவே கோடை மழை பெய்து வருகிறது.  தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. ஆனால், சென்னையை பொறுத்தவரை மழை பெய்யவில்லை.

வெயில் வாட்டி வதைத்தது. இந்த வெப்பத்தை கொஞ்சம் தணிக்கும் வகையில், 2025 ஏப்ரல் 16ஆம் தேதியான நேற்று அட மழை பெய்தது. கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு சென்னையில் ஏப்ரல் மாதத்தில் மழை பெய்தது. 1முதல் 2 மணி நேரம் விடாமல் மழை பெய்தது.

இதில் 10 செ.மீ மழை பதிவாகி உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் 7 நாட்களுக்கு இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.  தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

சென்னை நிலவரம் என்ன?


இதன் காரணமாக, 2025 ஏப்ரல் 17ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்  மிதமான மழை பெய்யக் கூடும். அதே நேரத்தில், மிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று வானிலை மையம்  தெரிவித்துள்ளது.

2025 ஏப்ரல் 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை வெப்பநிலை 3 டிகிரி வரை உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 2025 ஏப்ரல் 17,18ஆம் தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. தமிழகத்தில் மதுரை விமான நிலையம் : 38.8 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 21 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உச்சத்தில் மீன் விலை.. சிக்கன் வைத்து இப்படி செஞ்சு பாருங்க!
உச்சத்தில் மீன் விலை.. சிக்கன் வைத்து இப்படி செஞ்சு பாருங்க!...
PPFல் தம்பதிகள் ரூ.1 கோடி லாபம் பெறுவது எப்படி?
PPFல் தம்பதிகள் ரூ.1 கோடி லாபம் பெறுவது எப்படி?...
உலக கல்லீரல் தினத்தில் பிரதமர் மோடி குடிமக்களுக்கு அட்வைஸ்!
உலக கல்லீரல் தினத்தில் பிரதமர் மோடி குடிமக்களுக்கு அட்வைஸ்!...
அறுந்த மின்கம்பி! தெரியாமல் கால் வைத்த சிறுவனை மீட்ட இளைஞர்!
அறுந்த மின்கம்பி! தெரியாமல் கால் வைத்த சிறுவனை மீட்ட இளைஞர்!...
எனக்கு நடிக்கவே ஆசை இல்லை.. எல்லாம் அவரால்தான்.. நடிகை ஜோதிகா!
எனக்கு நடிக்கவே ஆசை இல்லை.. எல்லாம் அவரால்தான்.. நடிகை ஜோதிகா!...
உலக அளவில் மோகன்லாலின் எல்2: எம்புரான் இதுவரை செய்த வசூல்?
உலக அளவில் மோகன்லாலின் எல்2: எம்புரான் இதுவரை செய்த வசூல்?...
ஆப்கானிஸ்தான் பகுதியில் நிலநடுக்கம்.. இந்தியாவிலும் அதிர்வு!
ஆப்கானிஸ்தான் பகுதியில் நிலநடுக்கம்.. இந்தியாவிலும் அதிர்வு!...
சங்கமித்ரா திரைப்படம் மீண்டும் உருவாகிறதா? இயக்குநர் சுந்தர் சி!
சங்கமித்ரா திரைப்படம் மீண்டும் உருவாகிறதா? இயக்குநர் சுந்தர் சி!...
நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது பரபரப்பு - பரபரப்பு வாக்குமூலம்!
நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது பரபரப்பு - பரபரப்பு வாக்குமூலம்!...
கோடையில் மாம்பழம் ருசிக்க ஆசை? இப்படி செய்தால் ஆரோக்கியம் கெடாது!
கோடையில் மாம்பழம் ருசிக்க ஆசை? இப்படி செய்தால் ஆரோக்கியம் கெடாது!...
2025-ல் அதிக கூலிங் கொடுக்கக் கூடிய டாப் 5 சிறந்த ஏசிகள் !
2025-ல் அதிக கூலிங் கொடுக்கக் கூடிய டாப் 5 சிறந்த ஏசிகள் !...