Tamil Nadu Weather Update: அதிகரிக்கப்போகும் வெயில்! மழையும் பெய்ய வாய்ப்பு.. அடுத்த 7 தினங்களுக்கான வானிலை நிலவரம்!
Chennai and Tamil Nadu Weather: தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கான வாய்ப்புள்ளது. அடுத்த 7 நாட்களுக்கு வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது எனவும், ஒரு சில இடங்களில் படிப்படியாக உயரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு எந்தவித எச்சரிக்கையும் இல்லை.

கடும் வெயில்
சென்னை, ஏப்ரல் 14: தென்தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், இதர தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுச்சேரி (Pondicherry) மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை (Weather) நிலவி வருகிறது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் குறைந்துள்ளது. மற்றபடி, தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2° செல்சியஸ் அதிகமாகவும், தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் குறைவாகவும் இருந்தது. ஏனைய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடதமிழ்நாட்டில் உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 35–39° செல்சியஸூம், தென்தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 32–39° செல்சியஸூம், தமிழ்நாட்டின் கடலோரப்பகுதிகள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34–37° செல்சியஸ், மலைப் பகுதிகளில் 19–26° செல்சியஸூம் பதிவாகியுள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு:
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. 2025 ஏப்ரல் 14ம் தேதியான இன்று தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஏப்ரல் 15ம் தேதியான நாளை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், 2025 ஏப்ரல் 16 முதல் 2025 ஏப்ரல் 20ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
2025 ஏப்ரல் 14ம் தேதியான இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. 2025 ஏப்ரல் 15ம் தேதியான நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழ்நாட்டின் கடலோரப்பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள் & அரபிக்கடல் பகுதிகளில்
2025 ஏப்ரல் 14ம் தேதியான இன்று முதல் 2025 ஏப்ரல் 18ம் தேதி வரை எச்சரிக்கை ஏதுமில்லை
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
14-04-2025 மற்றும் 18-04-2025 வரை தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு என்றாலும், ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிபடியாக உயரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.