Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பொளக்கப்போகும் வெயில்.. 3 டிகிரி வரை வெப்பநிலை உயரும்.. லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!

Tamil nadu Weather Alert : தமிழகத்தில் மூன்று டிகிரி வரை வெப்பநிலை உயரக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொளக்கப்போகும் வெயில்.. 3 டிகிரி வரை வெப்பநிலை உயரும்.. லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
வெப்பநிலைImage Source: PTI
umabarkavi-k
Umabarkavi K | Published: 29 Apr 2025 06:15 AM

சென்னை, ஏப்ரல் 29: தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்பநிலை 3 டிகிரி வரை உயரக்கூடும் (Tamil Nadu Heatwave Alert) என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி எடுக்கிறது. 2025 மார்ச் முதலே வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. இதனிடையே, அவ்வப்போது கோடை மழையும் வந்தது. இருப்பினும், வெயிலின் தாக்கம் மோசமாக உள்ளது. பல்வேறு இடங்களில் வெப்பநிலை 100 டிகிரியை கடந்து பதிவாகி வருகிறது.

பொளக்கப்போகும் வெயில்

இன்னும் மே, ஜூன் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதோடு, அனல் காற்றும் வீசும் என தெரிகிறது. இந்த நிலையில், அடுத்த 3 நாட்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம். அதாவது, தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்பநிலை உயரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதாவது, 2025 ஏப்ரல் 29ஆம் தேதி முதல் மே 2ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிமாக இருக்க கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருப்பதால், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை மையம் கணித்துள்ளது. மேலும், சென்னையை பொறுத்தவரை 2025 ஏப்ரல் 29ஆம் தேதியான இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 டிகிரி வரை வெப்பநிலை உயரும்

அதோடு, அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 2025 ஏப்ரல் 29ஆம் தேதி முதல் மே 4ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னல், மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றறுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. அதன்படி, கரூர் பரமத்தியில் 102 டிகிரி பாரன்ஹீட், ஈரோட்டில் 101 டிகிரி பாரன்ஹீட், வேலூரில் 101 டிகிரி பாரன்ஹீட், திருச்சியில் 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 2025 மே 4ஆம் தேதி கதிரி வெயில் தொடங்க உள்ளது. இதனால், வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டில் குங்குமம் தயாரிப்பது எப்படி? எத்தனை நாட்கள் பயன்படும்..?
வீட்டில் குங்குமம் தயாரிப்பது எப்படி? எத்தனை நாட்கள் பயன்படும்..?...
சனி பகவானுக்குப் பிடித்த 3 ராசிக்காரர்கள்.. யாருன்னு தெரியுமா?
சனி பகவானுக்குப் பிடித்த 3 ராசிக்காரர்கள்.. யாருன்னு தெரியுமா?...
பள்ளியில் தண்ணீர் தொட்டியில் விழுந்த 4 வயது சிறுமி பலி!
பள்ளியில் தண்ணீர் தொட்டியில் விழுந்த 4 வயது சிறுமி பலி!...
மே 1-ம் தேதி வெளியாகும் 3 படங்களில் எதை முதலில் பார்ப்பீங்க?
மே 1-ம் தேதி வெளியாகும் 3 படங்களில் எதை முதலில் பார்ப்பீங்க?...
’காலனி' என்ற சொல் நீக்கம்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி!
’காலனி' என்ற சொல் நீக்கம்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி!...
வராரு வராரு அழகர் வராரு.. மதுரை கள்ளழகர் கோயில் சிறப்புகள்!
வராரு வராரு அழகர் வராரு.. மதுரை கள்ளழகர் கோயில் சிறப்புகள்!...
காஷ்மீரில் 48 சுற்றுலா தலங்கள் மூடல்.. மத்திய அரசு அதிரடி
காஷ்மீரில் 48 சுற்றுலா தலங்கள் மூடல்.. மத்திய அரசு அதிரடி...
பத்ம பூஷன் விருது பெற்ற அஜித்திற்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண்!
பத்ம பூஷன் விருது பெற்ற அஜித்திற்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண்!...
சித்ரா பௌர்ணமி.. கள்ளழகர் திருவிழா.. மே மாத முக்கிய நிகழ்வுகள்!
சித்ரா பௌர்ணமி.. கள்ளழகர் திருவிழா.. மே மாத முக்கிய நிகழ்வுகள்!...
கொடியேற்றத்துடன் தொடங்கிய மதுரை சித்திரை திருவிழா...
கொடியேற்றத்துடன் தொடங்கிய மதுரை சித்திரை திருவிழா......
நீச்சல் அடிக்கும்போது ஏற்படும் சரும கருமையை தவிர்க்க சில வழிகள்..
நீச்சல் அடிக்கும்போது ஏற்படும் சரும கருமையை தவிர்க்க சில வழிகள்.....