Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

படுத்தி எடுக்கும் வெயில்.. அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை இன்னும் உயரும்.. லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படுத்தி எடுக்கும் வெயில்..  அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை இன்னும் உயரும்.. லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
வெயில்Image Source: PTI
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 15 Apr 2025 06:19 AM

சென்னை, ஏப்ரல் 15: தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை படிபடியாக உயரக்கூடும் என்று வானிலை மையம் (Tamil Nadu Heatwave Alert) தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 2 முதல் 3 டிகிரி வரை உயரக்கூடும் என கணித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மதிய நேரங்களில் மக்கள் வெளியே வருவதற்கு சிரமப்படுகின்றனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி தாண்டி பதிவாகி வருகிறது. சென்னையிலும் வெயில் தாக்கம் கடுமையாக உள்ளது.

படுத்தி எடுக்கும் வெயில்

இருப்பினும், கடந்த ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்தது. கோவை, தேனி, நீலகிரி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்தது. அதே நேரத்தில் வெயிலும் படாய் படுத்துகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் வெப்பநிலை படிபடியாக உயரக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது, தமிழகத்தில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி வரை உயரக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

2025 ஏப்ரல் 15ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 ஏப்ரல் 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திகான குறைவு என்றும் எனினும் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிபடியாக உயரக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை இன்னும் அதிகரிக்கும்

அதே நேரத்தில், தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 2025 ஏப்ரல் 15ஆம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளில் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில் மேற்கு மற்றும கிழக்கு காற்று சந்திக்கு பகுதி நிலவுகிறது.

இதன் காரணமாக, 2025 ஏப்ரல் 15ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை தமிழகக்ததில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில்  அதிகபட்ச வெப்பநிலை  திருத்தணியில் 38.6 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது.  குறைந்தபட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 20.6 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது என்று  வானிலை மையம் கூறியுள்ளது.

கூலி படம் குறித்து முக்கிய அப்டேட் கூறிய நடிகர் உபேந்திரா
கூலி படம் குறித்து முக்கிய அப்டேட் கூறிய நடிகர் உபேந்திரா...
மலையாள நடிகர் ஃபஹத் பாசில் கூட்டணியில் படம்? - எஸ்.ஜே.சூர்யா!
மலையாள நடிகர் ஃபஹத் பாசில் கூட்டணியில் படம்? - எஸ்.ஜே.சூர்யா!...
கூலி படத்தில் ஸ்பெஷல் பாடல்.. கண்டிப்பா ஹிட்டாகும்- பூஜா ஹெக்டே!
கூலி படத்தில் ஸ்பெஷல் பாடல்.. கண்டிப்பா ஹிட்டாகும்- பூஜா ஹெக்டே!...
'குட் பேட் அக்லி' சர்ச்சை: இளையராஜாவின் குற்றச்சாட்டு நியாயமானதா?
'குட் பேட் அக்லி' சர்ச்சை: இளையராஜாவின் குற்றச்சாட்டு நியாயமானதா?...
தோழியர் வேண்டுதல்.. மணக்கோலத்தில் மீனாட்சி இருக்கும் கோயில்!
தோழியர் வேண்டுதல்.. மணக்கோலத்தில் மீனாட்சி இருக்கும் கோயில்!...
நெல்லை: இருட்டு கடை அல்வா கடை உரிமையாளருக்கு வந்த சோதனை...
நெல்லை: இருட்டு கடை அல்வா கடை உரிமையாளருக்கு வந்த சோதனை......
சென்னையில் கனமழை தொடரும்.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
சென்னையில் கனமழை தொடரும்.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்!...
சம்மர் விடுமுறையை டெல்லியை சுற்றியும் கொண்டாடலாம் வாங்க..!
சம்மர் விடுமுறையை டெல்லியை சுற்றியும் கொண்டாடலாம் வாங்க..!...
நன்மைகள் அளிக்கும் தீப வழிபாடு.. கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
நன்மைகள் அளிக்கும் தீப வழிபாடு.. கவனிக்க வேண்டிய விஷயங்கள்!...
ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளதை உறுதி செய்த சிவராஜ்குமார்
ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளதை உறுதி செய்த சிவராஜ்குமார்...
SC: விசாரணைக்கு வரும் வக்ஃப் சட்ட திருத்தத்துக்கு எதிரான மனுக்கள்
SC: விசாரணைக்கு வரும் வக்ஃப் சட்ட திருத்தத்துக்கு எதிரான மனுக்கள்...