சதம் அடிக்கும் வெயில்.. கடும் அவதியில் மக்கள்.. எச்சரிக்கும் வானிலை ரிப்போர்ட்..
Weather Alert: தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அடுத்த ஏழு நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வானிலை நிலவரம், ஏப்ரல் 29: தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கியது முதலே வெப்பநிலை அதிகமாக இருக்கிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தால் மக்கள் அன்றாட வேலையை செய்வதில் கூட சிரமம் ஏற்படுவதாக குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக இந்த வெயில் காலத்தில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். 29, ஏப்ரல் 2025 முதல் 2025, மே 2 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை 2 முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் இன்று தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலை 2025, மே மூன்றாம் தேதி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 29 ஏப்ரல் 2025 தொடங்கி மே ஒன்றாம் தேதி வரை வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் அதிகம் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசோகரின் ஏற்படலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பொறுத்தவரையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் அதிகபட்ச வெப்பநிலை என்பது 36 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை என்பது 28 முதல் 29 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோடை மழை இருக்குமா?
இது ஒரு பக்கம் இருக்க லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழ் அடுக்க சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழ் அடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் வரும் 2025, மே 5 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மதுரை போன்ற நகரில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டாலும் தென் தமிழக கடலோர பகுதிகளில் நல்ல மழை பதிவாகியுள்ளது. அதாவது ஆவுடையார்கோவில் புதுக்கோட்டையில் 10 சென்டிமீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து பூதலூர் தஞ்சாவூர் மாவட்டம் 7 சென்டிமீட்டர் மழையும், இராமநாதபுரம் மண்டபம் பகுதியில் 6 சென்டிமீட்டர் மழையும், திருவாடானை ராமநாதபுரத்தில் 5 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் சொல்வது என்ன?
Toppers in Temperature (in C) in Observatories of Tamil Nadu on 28.04.2025 (5.30 pm) and Mango showers continue to lash south and interior Tamil Nadu
===========
We expected close fight yesterday between karur, Erode and Vellore. Karur captures the top hot spot from vellore.… pic.twitter.com/BEJ1ZdHWkg— Tamil Nadu Weatherman (@praddy06) April 29, 2025
இந்த நிலையில் இன்று மீண்டும் கொங்கு மாவட்டங்களான ஈரோடு, கரூர் மற்றும் வேலூர் ஆகிய பகுதிகளில் 39 டிகிரி செல்சியஸை தாண்டி வெப்பநிலை இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார். தென் தமிழக பகுதிகளான ராமநாதபுரம், கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, நெல்லை, தேனி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான கோடை மழை இருக்கும் எனவும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்