Pahalgam Attack : தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் காயம்.. டெல்லியில் உதவி மையம் அமைத்த தமிழக அரசு!

Tamil Nadu 24 Hours Service: ஜம்மு-காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர்; இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், புதுடில்லி தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேர உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது (தொடர்பு எண்கள்: 011-24193300 / 9289516712).

Pahalgam Attack : தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் காயம்..  டெல்லியில் உதவி மையம் அமைத்த தமிழக அரசு!

தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேர சிறப்பு உதவி மையம் தொடக்கம்

Updated On: 

23 Apr 2025 10:20 AM

சென்னை ஏப்ரல் 23: ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் (Jammu and Kashmir Pahalgam) பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு (Terrorists open fire) நடத்தி 28 பேர் உயிரிழந்தனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த சிலரும் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் (Tamil Nadu CM Stalin) உத்தரவின்படி, புதுடில்லி தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேர சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்பு எண்கள்: 011-24193300 (லேண்ட்லைன்), 9289516712 (மொபைல்) என்று அரசு அறிவித்துள்ளது. சம்பவ இடத்திற்கு கூடுதல் கலெக்டர் அப்தாப் ரசூல் அனுப்பப்பட்டு ஒருங்கிணைப்பு பணிகள் நடைபெறுகின்றன. பயங்கரவாதிகள் ஆண்களை மட்டும் தாக்கி, பெண்கள் மற்றும் குழந்தைகளை விட்டு விட்டதாக புனேயை சேர்ந்த பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேர சிறப்பு உதவி மையம் தொடக்கம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த் நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது திடீர் துப்பாக்கி தாக்குதல் நடத்தியதையடுத்து, தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு உதவுவதற்காக புதுடில்லியில் அமைந்துள்ள தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேர சிறப்பு உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த உதவி மையம் முதல்வர் மு.க. ஸ்டாலினின் உத்தரவின்பேரில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை 011-24193300 என்ற நிலைத் தொலைபேசி எண்ணிலும், 9289516712 என்ற மொபைல் எண்ணிலும் தொடர்புகொண்டு தமிழக மக்கள் உதவி பெறலாம்.

காஷ்மீர் தாக்குதலில் தமிழர்கள் இருவர் காயம்

ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் (Jammu and Kashmir Pahalgam) பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு (Terrorists open fire) நடத்தி 28 பேர் உயிரிழந்தனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த சிலரும் காயமடைந்ததாக தகவல் வெளியாகியது. அதில், சாண்டானோ என்பவர் அனந்த்நாக்கில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி (ஜிஎம்சி) மருத்துவமனையில் தீவிர சிகிக்சை பெற்று வருகிறார். இதேபோல் பரமேஸ்வர்,
என்பவர் பஹல்காம் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகிறார்.

தேவையான மருத்துவ வசதிகளை ஏற்படுத்தும் பணி தீவிரம்

தாக்குதலுக்குப் பின்னர், உடனடி ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்காக புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், நேரடியாக பஹல்காம் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளார். அவருக்கு தேவையான மருத்துவ வசதிகளை ஏற்படுத்தும் பணியும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த பயங்கரவாத தாக்குதலில் 28 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலும் ஆண்கள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது எந்தவிதத்திலும் தாக்குதல் நடக்கவில்லை.

ஆண்களை மட்டும் குறி வைத்து தாக்கிய பயங்கரவாதிகள்

புனேயைச் சேர்ந்த சந்தோஷ் ஜக்தலே (54) என்பவர் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒருவர் ஆவார். அவரது மகள் அசாவரி ஜக்தலே (26) வெளியிட்ட தகவலின்படி, தங்கள் குடும்பத்தினர் சுற்றுலா சென்றபோது துப்பாக்கிச் சூடு தொடங்கியதால் அவர்கள் கூடாரம் ஒன்றில் பதுங்கிக்கொண்டனர்.

பின்னர் சந்தோஷ் ஜக்தலே மற்றும் அவரது உறவினர் வெளியே அழைத்து செல்லப்பட்டு, இருவரும் பலமுறை சுட்டதாகவும், பெண்களை விட்டுவிட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சம்பவத்துக்குப் பின் உள்ளூர் மக்கள் அவர்களை பஹல்காம் கிளப்புக்கு அழைத்துச் சென்றனர்.

தவறான தகவல்கள் பரவாமல் இருக்க கண்காணிப்பு

இத்தாக்குதல் தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவாமல் இருக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மத நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் யாரேனும் பதிவுகள் செய்வதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.