விடைகளை படித்து சரியான மதிப்பெண் போடுங்க..! ஆசிரியர்களுக்கு அறிவுரை

Answer Sheet Correction Work: தமிழ்நாட்டில் 2025ஆம் ஆண்டுக்கான பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறுகின்றன. 40 ஆயிரம் ஆசிரியர்கள் 80 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டு, தேர்வுத்துறை வழங்கிய வழிகாட்டுதல்களை பின்பற்றி மதிப்பீடு செய்கின்றனர். மதிப்பெண் குறைபாடு உள்ளிட்ட புகார்கள் தவிர்க்க, ஒவ்வொரு விடையையும் கவனமாக மதிப்பீடு செய்து, சரியாக மதிப்பெண்கள் கணக்கீடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விடைகளை படித்து சரியான மதிப்பெண் போடுங்க..! ஆசிரியர்களுக்கு அறிவுரை

விடைத்தாள் திருத்த வழிகாட்டு நெறிகள்

Published: 

19 Apr 2025 07:51 AM

சென்னை ஏப்ரல் 19: தமிழ்நாட்டில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் (Plus 1, Plus 2 public examinations in Tamil Nadu) 2025 மார்ச் 1 முதல் 28 வரை நடைபெற்றன. 40 ஆயிரம் ஆசிரியர்கள் 80 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணியில் (Answer Sheet Correction Work) ஈடுபட்டுள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்வுகள் 2025 மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்று, அதன் திருத்தும் பணியும் தொடங்கியுள்ளது. முந்தைய வருடங்களில் மாணவர்கள் மதிப்பெண் குறைவு குறித்து புகார் கூறியதால், இந்த ஆண்டு அதனை தவிர்க்க முயற்சி செய்யப்படுகிறது. ஆசிரியர்கள் ஒவ்வொரு விடையையும் கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. மதிப்பெண் கூட்டல், பதிவுகள் தவறில்லாமல் செய்ய வேண்டும் என்றும் தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

பிளஸ் 2, மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி

தமிழகத்தில் கடந்த 2025 மார்ச் மாதம் பிளஸ் 2, மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தொடங்கி 2025 மார்ச் 28ம் தேதி வரை நடந்தது. அதற்கான விடைத்தாள்கள் திருத்துவதற்காக தமிழகத்தில் 80 மையங்கள் அமைத்து 40 ஆயிரம் ஆசிரியர்கள் மூலம் விடைத்தாள் திருத்தப்படுகின்றனர். இந்நிலையில் 2025 மார்ச் 28ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்கி 2025 ஏப்ரல் 15ம் தேதி முடிந்தன. அதற்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது.

விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல்

இந்நிலையில், கடந்த ஆண்டில் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்த மாணவ மாணவியர் தாங்கள் எழுதிய விடைகளுக்கு உரிய மதிப்பெண் வழங்கவில்லை என்று தெரிவித்து புகார்கூறினர். அது போன்ற நிலை இந்த ஆண்டில் வரக்கூடாது என்று தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. அதற்காக தற்போது விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல்களை தேர்வுத்துறை வழங்கியுள்ளது.

விடைகளை கவனமாக படித்து உரிய மதிப்பெண் வழங்குக

அதில், விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் விடைத்தாளில் மாணவர்கள் எழுதியுள்ள ஒவ்வொரு விடைகளையும் கவனமாக படித்துப் பார்த்து அதன்பிறகே உரிய மதிப்பெண் வழங்க வேண்டும். கூடுதலாகவோ குறைவாகவோ மதிப்பெண் வழங்கக் கூடாது. மேலும் மதிப்பெண்களை கூட்டி மொத்த மதிப்பெண் குறிப்பிடும் போதும் கவனமாக கூட்டல் செய்ய வேண்டும்.

வழிகாட்டுதல்களை ஆசிரியர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்

வினாவாரி, பக்கவாரி மதிப்பெண் முதல் பக்கத்தில் எடுத்து எழுதும் போதும் கவனமாக எழுதி மொத்த மதிப்பெண்களை குறிப்பிட வேண்டும். அதில் தவறு ஏற்படாத வகையில் ஆசிரியர்கள் செயல்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்களை ஆசிரியர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வு

தமிழ்நாட்டில் 2025ஆம் ஆண்டுக்கான பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்றது. இரு வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த 2025 மார்ச் மாதத்தில் நடைபெற்றன. இந்தத் தேர்வுகள் 2025 மார்ச் 1ஆம் தேதி தொடங்கி, 2025 மார்ச் 28ஆம் தேதி வரை நடைபெற்றன.

தமிழ்நாடு அரசு தேர்வுத் துறை இந்த தேர்வுகளை நடத்தி, மாநிலம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மாணவர்கள் இதில் பங்கேற்றனர். பிளஸ் 2 தேர்வுகள் முதலில் தொடங்கின; பிளஸ் 1 தேர்வுகள் அதன் பின்னர் ஆரம்பிக்கப்பட்டன. இந்த தேர்வுகள் ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனி நாட்களில் நடத்தப்பட்டு, மாணவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட நேர அட்டவணையின் கீழ் நடைபெற்றன.