வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. அடுத்த 2 நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை!
Tamil Nadu Rain Forecast | தெற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் இன்று (ஏப்ரல் 07, 2025) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னை, எப்ரல் 07 : தெற்கு வங்கக்கடலின் (South Bay of Bengal) மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி (Low Pressure Area) உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தின் வானிலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் மழை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இதன் காரணமாக மதிய வேலைகளில் பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும், வெயிலை தணிக்கும் வகையில் உணவு, பழங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தமிழகத்தில் சென்னையில் அதிக வெப்பமான சூழல் நிலவிய நிலையில், பொதுமக்களை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஆனால், ஒரு வார காலமாக தமிழகத்தின் பலவேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இவ்வாறு குறிப்பிட்ட இடைவெளியில் மழை பெய்து வரும் நிலையில், அதிக வெப்பத்தில் இருந்து சற்று குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும், இதன் காரணமாக தமிழகத்தில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது
Low pressure area forms over Bay of Bengal
The system is expected to move in the north-west direction over southwest BoB till 8th April and likely to shift slightly northwards over west-central Bay of Bengal over the next 48 hours #Odisha #LowPressure #IMD #WeatherUpdate pic.twitter.com/3dLxXqu50w
— Argus News (@ArgusNews_in) April 7, 2025
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வரும் நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும், இது வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (ஏப்ரல் 08, 2025) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை அடையும் எனவும் இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுவது என்ன?
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள நிலையில், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் இன்று (ஏப்ரல் 07, 2025) மழை பெய்யகூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.