Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Tamil Nadu Weather Update: வெயிலும், மழையும்.. அடுத்த 7 நாட்கள் வரப்போகும் வானிலை அப்டேட் இதோ..!

Tamil Nadu Temperature and Rain Forecast: 2025 ஏப்ரல் 13ம் தேதியான இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் என்பதால் அசௌகரியம் ஏற்படலாம். மேலும் தமிழ்நாட்டின் வடகிழக்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது.

Tamil Nadu Weather Update: வெயிலும், மழையும்.. அடுத்த 7 நாட்கள் வரப்போகும் வானிலை அப்டேட் இதோ..!
வெயில் மற்றும் மழைImage Source: PTI
mukesh-kannan
Mukesh Kannan | Published: 13 Apr 2025 14:50 PM

சென்னை, ஏப்ரல் 13: தமிழ்நாடு (Tamil Nadu), புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கையை பற்றி தெரிந்துகொள்வோம். கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக வேலூரில் 40.1 டிகிரி செல்சியஸூம், குறைந்தபட்ச வெப்பநிலை சமவெளிப்பகுதிகளான கரூர் பரமத்தியில் 21.5 டிகிரி செல்சியஸூம் பதிவாகியுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை (Temperature) 2-5° செல்சியஸ் அதிகரித்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லை. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் (Karaikal) பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3-5° செல்சியஸ் அதிகமாக இருந்தது. இந்தநிலையில், அடுத்த 7 தினங்களுக்கான வானிலை அப்டேட் பற்றி தெரிந்து கொள்வோம்.

வடதமிழ்நாட்டில் உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகள் மற்றும் கடலோரப்பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36–40° செல்சியஸ், தென்தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 32–38° செல்சியஸ், தென்தமிழ்நாட்டின் கடலோரப்பகுதிகளில் 32-36° செல்சியஸ், மலைப் பகுதிகளில் 20–28° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு:

கடலோர மாவட்டமான ஆந்திரபிரதேசத்திலும், அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன்படி, 2025 ஏப்ரல் 13ம் தேதியான இன்றும், 2025 ஏப்ரம் 14ம் தேதியான நாளையும் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், 2025 ஏப்ரல் 15 மற்றும் 16ம் தேதி ஆகிய நாட்களில் தமிழ்நாட்டுல் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்புகளில் 2025 ஏப்ரல் 13ம் தேதியான இன்றும், 2025 ஏப்ரம் 14ம் தேதியான நாளையும் தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை சற்று உயரக்கூடும்.

இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:

2025 ஏப்ரல் 13ம் தேதியான இன்றும், 2025 ஏப்ரம் 14ம் தேதியான நாளையும் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை:

2025 ஏப்ரல் 13ம் தேதியான இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் என்பதால் அசௌகரியம் ஏற்படலாம். மேலும் தமிழ்நாட்டின் வடகிழக்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது. அதை தொடர்ந்து, 2025 ஏப்ரம் 14ம் தேதியான நாளையும், 2025 ஏப்ரம் 14ம் தேதியான நாளை மறுநாளும் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

2025 ஏப்ரம் 14ம் தேதியான நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழ்நாட்டின் கடலோரப்பகுதிகளான 2025 ஏப்ரல் 13ம் தேதியான இன்று தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன்படி, மேற்குறிப்பிட்ட நாளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

2025 ஏப்ரம் 14ம் தேதியான நாளை முதல் 2025 ஏப்ரம் 14ம் தேதி வரை மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை. அதனை தொடர்ந்து, வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் 13-04-2025 முதல் 17-04-2025 வரை மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.

கோடையில் வாக்கிங் சிறந்ததா? எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்?
கோடையில் வாக்கிங் சிறந்ததா? எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்?...
இந்தியாவில் ஒரே நிதியாண்டில் 60% உயர்ந்த ஐபோன் உற்பத்தி!
இந்தியாவில் ஒரே நிதியாண்டில் 60% உயர்ந்த ஐபோன் உற்பத்தி!...
சமையலறையில் நேரமும், உழைப்பும் மிச்சம்! எளிய குறிப்புகள் இதோ!
சமையலறையில் நேரமும், உழைப்பும் மிச்சம்! எளிய குறிப்புகள் இதோ!...
பதஞ்சலி தயாரிப்புகள் ஏன் பிரபலமாகின்றன? இதுவே காரணம்!
பதஞ்சலி தயாரிப்புகள் ஏன் பிரபலமாகின்றன? இதுவே காரணம்!...
சிறந்த 5 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் - உங்க சாய்ஸ் எது?
சிறந்த 5 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் - உங்க சாய்ஸ் எது?...
அன்புமணிக்கு ஆதரவு! திலகபாமாவை விமர்சித்த வடிவேல் இராவணன்..!
அன்புமணிக்கு ஆதரவு! திலகபாமாவை விமர்சித்த வடிவேல் இராவணன்..!...
வக்ஃப் சட்டம் முறையாக பயன்படுத்தப்படவில்லை - பிரதமர் மோடி
வக்ஃப் சட்டம் முறையாக பயன்படுத்தப்படவில்லை - பிரதமர் மோடி...
ஏன் ப்ளூடூத் ஹெட்போன்கள் வாங்க கூடாது? 5 முக்கிய காரணங்கள்!
ஏன் ப்ளூடூத் ஹெட்போன்கள் வாங்க கூடாது? 5 முக்கிய காரணங்கள்!...
ஸ்ரீயின் உடல் நிலை எப்படி இருக்கிறது? பிரபல தயாரிப்பாளர் அப்டேட்!
ஸ்ரீயின் உடல் நிலை எப்படி இருக்கிறது? பிரபல தயாரிப்பாளர் அப்டேட்!...
குட் பேட் அக்லியை பார்த்துவிட்டு அஜித் சொன்ன கமெண்ட் இதுதான்!
குட் பேட் அக்லியை பார்த்துவிட்டு அஜித் சொன்ன கமெண்ட் இதுதான்!...
நடிகை சினேகாவுடைய சினிமா க்ரஷ் யார் தெரியுமா? அவரே சொன்ன விஷயம்!
நடிகை சினேகாவுடைய சினிமா க்ரஷ் யார் தெரியுமா? அவரே சொன்ன விஷயம்!...