தொடர் சர்ச்சைகளில் சிக்கும் அமைச்சர்கள்.. அறிவுரை வழங்கிய முதலமைச்சர்?

CM MK Stalin Warned Tamil Nadu Ministers | தமிழ்நாடு அமைச்சர்களின் தொடர் சர்ச்சை பேச்சுக்கள் கடும் கண்டனங்களை பெற்று வரும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஏப்ரல்18, 2025) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தொடர் சர்ச்சைகளில் சிக்கும் அமைச்சர்கள்.. அறிவுரை வழங்கிய முதலமைச்சர்?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Updated On: 

18 Apr 2025 13:12 PM

சென்னை, ஏப்ரல் 18 : தமிழக அமைச்சர்கள் (Tamil Nadu Ministers) தங்களது சர்ச்சை பேச்சுக்களால் தொடர் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வரும் நிலையில், அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தாமல் செயல்படுங்கள் என அமைச்சர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன் உள்ளிட்டோர் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், முதலமைச்சர் அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அமைச்சர்களுக்கு முதலமைச்சர் வழங்கிய அறிவுரை குறித்து விரிவாக பார்க்கலாம்.

சர்ச்சை பேச்சுக்களால் தொடர் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வரும் அமைச்சர்கள்

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வனத்துறை அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்தும், சைவ மற்றும் வைண சமயம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துக்களை முன்வைத்து பேசியிருந்தார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், பெண்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் இத்தகைய அநாகரிகமான பேச்சுக்காக அமைச்சர் பொன்முடி பதவி விலக வேண்டும் என்றும் அவர்கள் கூறி வந்தனர்.

அமைச்சர் பொன்முடி பேச்சு

அமைச்சர் பொன்முடியின் பேச்சு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், திமுக எம்.பி கனிமொழி அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து திமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அவர் நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக திருச்சி சிவாவை திமுக பொதுச்செயாலளராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கிய முதலமைச்சர்

அமைச்சர் பொன்முடி விவகாரத்தை தொடர்ந்து, அமைச்சர் துரைமுருகன் மாற்று திறனாளிகள் குறித்து அவதூராக பேசியதாக ஒரு சிக்கல் எழுந்தது. இந்த நிலையில், இரண்டு அமைச்சர்களும் மன்னிப்பு கோரினர். இவ்வாறு திமுக அமைச்சர் தொடர் சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று (ஏப்ரல் 18, 2025) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அரசுக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்தாமல் நடந்துக்கொள்ளுங்கள் என்று அமைச்சர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.