Tamil Nadu Assembly: 6 புதிய மருத்துவமனைகள்! தமிழ்நாடு சட்டமன்றத்தில் சுகாதார மானிய திட்டங்கள் அறிவிப்பு!
TN Assembly Approves Major Health Budget: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற மருத்துவத்துறை மானிய கோரிக்கை விவாதத்தில், எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை, உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு கௌரவச் சுவர், டயாலிசிஸ் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு, மருத்துவக் கல்லூரி மேம்பாடு உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகின. புற்றுநோய் சிகிச்சை வசதிகளும் விரிவாக்கம் செய்யப்படும் என்றும், சிசு மரண விகிதத்தைக் குறைக்க உயிர்காக்கும் உபகரணங்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன்
சென்னை, ஏப்ரல் 21: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் (Tamil Nadu Assembly) கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த கையோடு, துறை ரீதியான மானிய கோரிக்கை மீதான விவாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்றது. கடந்த 2025 ஏப்ரல் 18ம் தேதி புனித வெள்ளியை முன்னிடு நேற்று வரை அதாவது 2025 ஏப்ரல் 20ம் தேதி சட்டப்பேரவை செயல்படவில்லை. இந்தநிலையில், 2025 ஏப்ரல் 21ம் தேதியான இன்று மீண்டும் சட்டப்பேரவை தொடங்கியது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மீதான மானிய கோரிக்கை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கை அறிவிப்புகளை அமைச்சர் மா. சுப்பிரமணியன் (Minister M. Subramanian) அறிவித்தார். அவற்றில் முக்கியமானவை பின்வருமாறு:
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கை அறிவிப்புகள்:
- தமிழ்நாட்டில் உள்ள 7,618 எஸ்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் எஸ்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களுடன் வசிக்கும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து, கல்வி மற்றும் மருத்துவ தேவைகளுக்காக மாதந்தோறும் ரூ. 1000 வழங்கப்படும்.
- மருத்துவ துறையில் உடல் உறுப்பு தானம் செய்பவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்தவர்களை அங்கீகரிப்பதற்கான ஒரு நினைவுப்பாதையாக கௌரவச் சுவர் அமையும். இது சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மேலும் உடல் உறுப்பு தானங்களின் எண்ணிக்கையை ஊக்குவிக்கவும் உதவும்.
- பராமரிப்பு டயாலிசிஸ் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு புரதம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படுகின்றன. இதற்கு தீர்வு கண்டறியும் வகையில் இந்நோயாளிகளுக்கு புரதச்சத்து நிறைந்த உணவுகளான 150 மிலி பால், 2 வேகவைத்த முட்டையின் வெள்ளைக்கரு, 50 கிராம் சுண்டல், குறைந்த சோடியம் மற்றும் பொட்டாசியம் உள்ள 3 பிஸ்கட்கல் வழங்கப்படும்.
- ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருநெல்வேலி, மதுரை, கோயம்புத்தூர், கடலூர், சேலம் உட்பட 25 அரசு மருத்துவ கல்லூரிகலில் உள்ள மருத்துவ மாணவர் மற்றும் மாணவியர் விடுதிகள் ரூ.50 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
- ராமநாதபுரம் மற்றும் கடலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு புற்றுநோய்க்கான சிகிச்சை சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில் ஏழைய எளிய மக்களுக்கு உயர்தர புற்றுநோய் சிகிச்சைக்கான அதிநவீன கதிர்வீச்சு சிகிச்சை வழங்குவதற்கு லீனியர் அக்ஸிலேட்டர் மற்றும் சிடி சிமுலேட்டர் வசதிகள் ரூ.54 கோடி செலவில் வழங்கப்படும்.
- அரசு கஸ்தூரிபா காந்தி தாய சேய் நல மருத்துவமனை, அரசு ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனை ஆகிய இரு மருத்துவமனைகளுக்கு தலா ரூ. 3 கோடி செலவிலும் மற்றும் பென்னாகரம், மணப்பாறை ஆகிய 2 அரசு மருத்துவனைக்கு தலா ரூ. 2 கோடி செலவில் அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும்.
- தமிழ்நாட்டில் சிசு மரண விகித்தை மேலும் குறைப்பதற்கும், பச்சிளம் குழந்தை இறப்புகளை குறைப்பதற்கும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ கல்லாரி மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள 84 சிறப்பு பச்சிளம் குழந்தை பராமரிப்பு பிரிவுகளுக்கு ரூ. 7.49 கோடி மதிப்பீட்டில் உயிர்காக்கும் அதிநவீன உபகரணங்கள் வழங்கப்படும்.
மேலும், தமிழ்நாட்டில் 6 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.