KN Ravichandran: அமைச்சர் கே என் நேரு சகோதரருக்கு திடீர் உடல்நலக் குறைவு! விசாரணையை நடத்த முடியாமல் தவிக்கும் ED!
Minister K.N. Nehru’s brother Ravichandran: கடந்த மூன்று நாட்களாக கே.என். ரவிச்சந்திரன் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, விசாரணைக்கு ஆஜராக கூறி அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பி இருந்த நிலையில் கே.என். ரவிச்சந்திரன் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் கே என் நேரு சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன்
சென்னை, ஏப்ரல் 11: தமிழ்நாடு அமைச்சர் கே.என்.நேருவின் (Minister K N Nehru) சகோதரரும், ரியல் எஸ்டேட் அதிபருமான கே.என். ரவிச்சந்திரன் (KN Ravichandran) திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார். கடந்த மூன்று நாட்களாக கே.என். ரவிச்சந்திரன் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் (Directorate of Enforcement) சோதனை நடத்தி வரும் நிலையில், தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, விசாரணைக்கு ஆஜராக கூறி அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பி இருந்த நிலையில் கே.என். ரவிச்சந்திரன் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமலாக்கத்துறையினர் சோதனை:
ED raids underway at Minister KN Nehru’s residence and his brother KN Ramajeyam’s house in Thillai Nagar, #Trichy. The operation began at 6:30 AM and is still in progress. @xpresstn @mannar_mannan pic.twitter.com/jAgPgHhf0w
— Jose K Joseph, Journalist (@josereports) April 7, 2025
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரும், ரியல் எஸ்ரேட் அதிபர் கே.என்.ரவிச்சந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர், நண்பர்களுடன் தொடர்புடைய பல இடங்களில் கடந்த 3 நாட்களுக்கு மேலாக சோதனை நடத்தப்பட்டது. இதற்காக, சென்னையில் உள்ள அமலாக்க இயக்குநரகம் அலுவலகத்திற்கு கே.என்.ரவிச்சந்திரன் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார். முன்னதாக, ரவிச்சந்திரன் விளம்பரப்படுத்திய ரியல் எஸ்டேட் குழுமத்திற்கு எதிரான புகார் தொடர்பாக, தமிழ்நாடு முழுவதும் அமைச்சர் கே.என்.நேருவின் குடும்பத்தினருடன் தொடர்புடைய பல இடங்களில் கடந்த 2025 ஏப்ரல் 7ம் தேதி அமலாத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும். அமைச்சர் கே.என்.நேருவின் மறைந்த சகோதரர் ராமஜெயம் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
எங்கெங்கு சோதனை..?
#BREAKING Enforcement Directorate (ED) raid targeting over 7 locations linked to Tamil Nadu Municipal Administration Minister K.N. Nehru, his family/ friends. pic.twitter.com/zNFo9kFkU8
— Mahalingam Ponnusamy (@mahajournalist) April 7, 2025
தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை,சிஐடி காலனி, பெசண்ட் நகர் மற்றும் எம்.ஆர்.சி நபர் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு இடங்களில் உள்ள தனியார் ஒப்பந்ததாரர்கள் மற்றும் டெவலப்பர்களுக்கு சொந்தமான பல இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனைகளை நடத்தினர். இருப்பினும், இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் மீட்கப்பட்ட ஆவணங்கள் அல்லது கைது செய்யப்பட்டவர்கள் குறித்த விவரங்களை அமலாக்கத்துறை வெளியிட இல்லை. அதேநேரத்தில், சந்தேகத்திற்கிடமான நிதி தடங்களை இணைக்கும் முக்கிய ஆதாரங்கள் கண்டறியப்பட்டதாக வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
அந்தவகையில்தான் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரனை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமைலாக்கத்துறை சம்மன் பிறப்பித்து இருந்தனர். ஆஜராகும் நேரத்தில் கே.என்.ரவிச்சந்திரனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள அப்போலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.