TN Assembly: தொடர் விடுமுறை எதிரொலி.. சட்டசபைக்கு அடுத்த 5 நாட்கள் லீவு!
Tamil Nadu Legislative Session: மகாவீர் ஜெயந்தி, வார இறுதி, தமிழ் புத்தாண்டு காரணமாக சட்டசபைக்கு 2025 ஏப்ரல் 10 முதல் 14 வரை 5 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டது. 2025 ஏப்ரல் 15-ஆம் தேதி மானியக் கோரிக்கை விவாதங்கள் தொடரும்; எனவும் கூட்டங்கள் 2025 ஏப்ரல் 29 வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு விடுமுறை
சென்னை ஏப்ரல் 09: தமிழகத்தில் 2025 மார்ச் 14-ஆம் தேதி தமிழக பட்ஜெட், (Tamil Nadu Budget) 2025 மார்ச் 15-ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2025 மார்ச் 17 முதல் 21 வரை பட்ஜெட்டுகள் மீதான விவாதங்கள் (Debates on budgets), பதிலுரைகள் நடைபெற்றன. 2025 மார்ச் 24 முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. 2025 ஏப்ரல் 10 முதல் 14 வரை மகாவீர் ஜெயந்தி (Mahavir Jayanti), வார இறுதி, தமிழ் புத்தாண்டு (Tamil New Year) ஆகியவை காரணமாக சட்டசபைக்கு விடுமுறை (Holiday for the Assembly) அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின், 2025 ஏப்ரல் 15-ஆம் தேதி மீண்டும் சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது. அன்றைய தினம் பல துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறவுள்ளன.
தமிழக சட்டசபை கூட்டம்
தமிழ்நாடு சட்டசபையின் 2025 ஆம் ஆண்டுக்கான கூட்டத் தொடர் ஜனவரி 6, 2025 அன்று காலை 9:30 மணிக்கு ஆளுநர் அவர்களின் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் ஏப்ரல் 30, 2025 வரை நடைபெற உள்ளது. மார்ச் 14, 2025 அன்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் 2025-2026 ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்தார். தன் மறுநாள், 15-ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் முன்வைக்கப்பட்டது. தமிழக சட்டசபையின் இந்தாண்டு காலாண்டு கூட்டத் தொடர் கடந்த மாதம் தொடங்கியதுடன், முக்கியமான பட்ஜெட் தாக்கல்கள் மற்றும் விவாதங்கள் நடைபெற்றன. அஅடுத்த சட்டசபை தேர்தல் ஏப்ரல்-மே 2026 இல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட்டுக்கு பின்னர் விவாதங்கள்
பட்ஜெட்டுகளுக்குப் பின்னர், மார்ச் 17 முதல் 21-ஆம் தேதி வரை அவற்றைச் சுற்றி உறுப்பினர்களின் விவாதங்களும், அமைச்சர்களின் பதிலுரைகளும் இடம்பெற்றன. அதன் தொடர்ச்சியாக, மார்ச் 24-ஆம் தேதியிலிருந்து துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடந்து வருகின்றன.
இன்றைய மானியக் கோரிக்கை விவாதம்
அந்தவகையில், இன்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது.
ஐந்து நாள்கள் இடைவேளை
இதையடுத்து, சட்டசபைக்கு 5 நாட்கள் இடைவேளை அளிக்கப்படுகிறது. 2025 ஏப்ரல் 10-ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி காரணமாக அரசு விடுமுறை; 11-ஆம் தேதி சட்டசபைக்கு தனி விடுமுறை; 2025 ஏப்ரல் 12 மற்றும் 13 ஆம் தேதிகள் வார இறுதிக்கால சனி, ஞாயிறு விடுமுறைகள்; 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டும், அம்பேத்கர் பிறந்த நாளும் ஆகியவற்றால் அரசு விடுமுறை விடப்படுகிறது. எனவே, சட்டசபை இந்நாள்களில் கூடுவதில்லை.
ஏப்ரல் 15-ஆம் தேதி மீண்டும் கூட்டம்
இந்த விடுமுறைகளுக்குப் பிறகு, சட்டசபை மீண்டும் 2025 ஏப்ரல் 15-ஆம் தேதி கூட இருக்கிறது. அன்றைய தினம் செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, தமிழ் வளர்ச்சி, மனிதவள மேலாண்மைத் துறைகளுக்கான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற உள்ளன. மேலும், இம்மாதம் ஏப்ரல் 29-ஆம் தேதி வரை சட்டசபை கூட்டம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.