தமிழகத்தில் 6 மாதத்தில் 25,000 பேருக்கு எச்ஐவி தொற்று.. அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்!
HIV Infection Tamilnadu: தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் எச்ஐவி தொற்றால் 25,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் கூறியுள்ளார். மேலும், எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

எச்ஐவி தொற்று
சென்னை, ஏப்ரல் 16: கடந்த ஆறு மாதங்களில் தமிழகத்தில் 25,000 பேருக்கு எச்ஐவி பாதிப்பு (Tamil Nadu HIV cases) இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். அதே நேரத்தில், என்ஐவி தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித் தொகை விரைவில் வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தார். தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. தொடர் ஐந்து நாட்கள் விடுமுறைக்கு பிறகு, 2025 ஏப்ரல் 15ஆம் தேதியான நேற்று சட்டப்பேரவை மீண்டும் கூடியது.
6 மாதத்தில் 25,000 பேருக்கு எச்ஐவி தொற்று
அப்போது, பல்வேறு துறை ரீதியான கேள்விகள் எழுப்பப்பட்டு, அதற்கு துறை அமைச்சர்க்ள் பதிலளித்து வந்தனர். அந்த வகையில், கடையநல்லூர் எம்எல்ஏ கிருஷ்ண முரளி எச்ஐவி நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்ளுக்கு உதவித் தொகை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதற்கு பதில் அளித்த பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் என்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு ஓய்வூதிய திட்டம் எதுவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் செயல்படுத்தப்படவில்லை. தமிழகத்தில் எச்ஐவி தொற்றால் 1,57,908 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆறு மாதத்தில் எச்ஐவி தொற்றால் 25,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க 76 கூட்டுறவு மருத்துவ சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகிறது. கூட்டு மருத்துவ சிகிச்சையில் பயனாளிகளின் எண்ணிக்கை 1.41 லட்சம் இருக்கின்றனர்.
அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்
தமிழக்ததில் கூட்டு மருத்துவ சிகிச்சை என்பது விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் என்ஐவி தொற்றால் பாதிக்கப்படும் முதயவர்களுக்கு உதவித் தொகை ரூ.1500, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1500, 75 சதவீத பாதிப்பு அடைந்தவர்களுக்கு உதவித் தொகை ரூ.2000 வழங்கப்பட்டு வருகிறது.
எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க மாநில அரசு விரைவில் முயற்சிகளை மேற்கொள்ளும். முன்னாள் முதல்வர் எம்.கருணாநிதி தொடங்கிய அறக்கட்டளை தமிழ்நாட்டில் அத்தகைய குழந்தைகளுக்கு ஆதரவளித்து வருகிறது.
முன்னாள் முதல்வர் வழங்கிய ரூ.5 லட்சத்தில் தொடங்கப்பட்ட அறக்கட்டளையின் நிதி ரூ.25 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் உதவும் வகையில் அறக்கட்டகளை ஈடுபட்டு வருகிறது.
2024-25 நிதியாண்டில் மட்டும், தமிழ்நாட்டில் எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட குழந்தைகளுககு ரூ.1.89 கோடி மதிப்புள்ள மருத்துவ மற்றும் கல்வி உதவிகளை அறக்கட்டளை வழங்கியது. விரைவில் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆறு மாதத்தில் 25 ஆயிரம் பேருக்கு எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.