ரேஷன் கடை துவரம் பருப்பில் கலப்படம்… தமிழகம் முழுவதும் ஆய்வு… தமிழக அரசு அதிரடி!
Tamil Nadu Ration Shops Raid : தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகள், ரேஷன் பொருட்கள் கிடங்குகளை சோதனை நடத்த உணவுத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்ட துவரம் பருப்பில் கலப்படம் இருப்பதை கண்டறியப்பட்டதை அடுத்து, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படும் துவரம் பருப்பில் கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த ஆய்வின்பது, மாவட்ட ஆடசியர் துவரம் பருப்பில் கலப்படம் இருப்பதை கண்டுபிடித்தார். இதனை அடுத்து, இரண்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட முழுவதும் ரேஷன் கடைகளில் ஆய்வு நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 34,793 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ரேஷன் கடைகள் கூட்டுத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் 2.24 கோடி ரேஷன் அட்டை கார்டுகள் உள்ளன.
ரேஷன் கடை துவரம் பருப்பில் கலப்படம்
இவர்களுக்கு மாதந்தோறும் ரேஷன் கடைகள் மூலம் சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு, அரிசு பருப்பு, கோதுமை மாவு வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டுகள் மூலம் வறுமை கோட்டின் கீழ உள்ள குடும்பங்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
இதனால், ஏழை, எளிய மக்களுக்கு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் அன்றாட குடும்பத்தை நிர்வகிக்க பெரிதும் உதவுகிறது. ரேஷனில் பொருட்களை வழங்குவதற்காக தனியார் நிறுவனங்களில் இருந்து நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் செய்கிறது.
கொள்முதல் செய்யப்படும் பருப்பு, அரிசு உள்ளட்டவற்றை அரசு கிடக்குகளில் இருப்பு வைக்கப்பட்டு, ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, அருணாச்சலா, எஸ்கேஎஸ், இண்டஸ்ட்ரீஸ், பெஸ்ட் உட்பட தனியார் நிறுவனங்களிடம் இருந்து பருப்பு கொள்முதல் செய்யப்பட்டு ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் ஆய்வு நடத்த தமிழக அரசு ஆணை
இந்த நிலையில் தான், திண்டுக்கல் மாவட்ட ரேஷன் கடையில் துவரம் பருப்பு கலப்படம் செய்யப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள ரேஷன் பொருட்கள் கிடங்கில் மாவட்ட ஆட்சியர் சரவணன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட இருந்த பருப்பு மூடையில் கலப்படம் செய்யப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தார். இதனை அடுத்து இரண்டு அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர் சரவணன் சஸ்பெண்ட் செய்தார். மதுரை மண்டல அதிகாரி லியோர் ராபர்ட், குடோன் மேனேஜர் ஆனந்த ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
இந்த விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகள், ரேஷன் பொருட்கள் கிடங்குகளில் பருப்பின் தரத்தை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உணவு துறை உத்தரவிட்டிருக்கிறது. இதனால், அவர்கள் அனைத்து ரேஷன் கடைகளில் சோதனையிட்டு வருகின்றனர். மக்களுக்கு தரமான பருப்பு கிடைப்பதை உறுதி செய்ய உணவுத் துறை சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.