Tamil Nadu SSLC Exam: 10ம் வகுப்பு மாணவர்கள் மகிழ்ச்சி! கேள்வியில் குழப்பம்.. அட்டெண்ட் பண்ணிருந்தாலே மார்க் என அறிவிப்பு!

Tamil Nadu Board Exams: தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2025 மார்ச் மாதத்தில் நடைபெற்றன. 10ம் வகுப்பு தேர்வில் 9,13,036 மாணவர்கள் எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 21 முதல் 30 வரை நடைபெற்று, முடிவுகள் மே 19 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக அறிவியல் பாடத்தில் ஓர் மதிப்பெண் கேள்விக்கு பதில் எழுதியிருந்தாலும் மதிப்பெண் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

Tamil Nadu SSLC Exam: 10ம் வகுப்பு மாணவர்கள் மகிழ்ச்சி! கேள்வியில் குழப்பம்.. அட்டெண்ட் பண்ணிருந்தாலே மார்க் என அறிவிப்பு!

10ம் வகுப்பு பொதுத்தேர்வு

Published: 

21 Apr 2025 18:19 PM

சென்னை, ஏப்ரல் 21: தமிழ்நாட்டில் 12, 11 மற்றும் 10 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் (Public Exam) சமீபத்தில் நடந்து முடிந்தது. தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த 2025 மார்ச் 3ம் தேதி தொடங்கி 2025 மார்ச் 25ம் தேதி வரை நடைபெற்றது. இந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சுமார் 8,21,057 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதனை தொடர்ந்து, 11ம் வகுப்புகளுக்கான பொது தேர்வானது கடந்த 2025 மார்ச் 5ம் தேதி தொடங்கி 2025 மார்ச் 27ம் தேதி வரையும், 10ம் வகுப்பு (SSLC Exam) பொதுத்தேர்வானது 2025 மார்ச் 28ம் தேதி தொடங்கி 2025 ஏப்ரல் 15ம் தேதி வரையில் நடைபெற்றது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வை பொறுத்தவரை சுமார் 9,13,036 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

மாணவர்களுக்கு ஒரு மதிப்பெண்:

இதில், தமிழ்நாடு முழுவதும் 4,46,411 மாணவர்களும், 4,40,465 மாணவிகளும், அதேநேரத்தில், 25,888 தனி தேர்வர்களும், 272 சிறை கைதிகள் என மொத்தம் 9,13,036 பேர் எழுதியுள்ளனர். அதன்படி, 10 வகுப்பு பொதுத்தேர்வை பொறுத்தவரை தமிழ்நாட்டில் மொத்தமாக 12,480 பள்ளிகளை சேர்ந்த மாணவம் மாணவிகள் 4,113 தேர்வு மையங்களில் தேர்வை எழுதினர். இந்தநிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு என்று அழைக்கப்படும் SSLC விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று அதாவது 2025 ஏப்ரல் 21ம் தேதி முதல் தொடங்கியது.

இதில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சமூக அறிவியல் பாடப்பிரிவில் ஒரு மதிப்பெண் பிரிவில் 4வது கேள்விக்கு பதில் அளித்து இருந்தாலே அதாவது கேள்வியை Attend செய்திருந்தாலே ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும் என அரசு தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு காரணம், ஒரு மதிப்பெண் பிரிவில் 4வது கேள்வியில் இடம் பெற்றிருந்த ஜோதிபா பூலே தொடர்பான கேள்விக்கான விடைகள்
முரணாக இருந்ததால், அரசு தேர்வுகள் துறை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

10 வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது..?

2025 ஏப்ரல் 21ம் தேதியான இன்று தொடங்கும் 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி, வருகின்ற 2025 ஏப்ரல் 30ம் தேதி வரை நடத்த அரசு தேர்வுகள் துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, இந்த விடைத்தாள் திருத்தும் பணிகள் தினமும் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும். இதன் தொடர்ச்சியாக, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகின்ற 2025 மே 19ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.