” மேலே பாம்பு, கீழே நரிகள்.. தடைகள் கடந்து செய்யப்பட்ட சாதனை” – சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பதிலுரை..

Tamil Nadu CM MK Stalin: இன்று சட்டசபையில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பல தடைகளை கடந்து தமிழ்நாடு இந்த சாதனை படைத்துள்ளது என தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியாளர்கள் செய்த சீர்கேட்டால் தமிழ்நாடு கட்டாந்தரையில் இருந்தது என்றும் அதனை தற்போது தலைநிமிரச் செய்துள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

” மேலே பாம்பு, கீழே நரிகள்.. தடைகள் கடந்து செய்யப்பட்ட சாதனை” - சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பதிலுரை..

சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை

Updated On: 

29 Apr 2025 13:58 PM

சென்னை, ஏப்ரல் 29: தமிழ்நாடு சட்டசபையில் இன்று சட்டம் ஒழுங்கு மற்றும் தீயணைப்பு துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பதிலுரை தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர்,  ” திமுக ஆறாவது முறையாக ஆட்சி அமைத்து நான்காவது ஆண்டை முடிவு செய்து ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளது. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இன்னும் பொறுப்பேற்று மே 7க்கு இன்னும் 7 நாள் தான் உள்ளது. 60 ஆண்டு கால பொது வாழ்க்கையை ஒரே சொல்ல குறிப்பிடற மாதிரி தலைவர் கலைஞர் ஸ்டாலின் என்றால் உழைப்பு உழைப்பு உழைப்பு என்று சொல்வார். ஆனால் கலைஞர் இப்போது இருந்திருந்தால், ஸ்டாலின் என்றால் சாதனை சாதனை என சொல்லி இருப்பார். கலைஞரின் எண்ணங்கள் தான் இந்த அரசினுடைய செயல்கள்.

கட்டாந்தரையில் ஊர்ந்த தமிழ்நாடு:

கடந்த ஆட்சியாளர்கள் செய்த சீர் கேட்டால் நிர்வாக கட்டமைப்பு கட்டாந்தரையில் ஊர்ந்துக்கொண்டிருந்தது. ஊர்ந்து கொண்டிருந்த இந்த இழுவை போக்கி தலை நிமிர்ந்த தமிழ்நாட்டை உருவாக்க தமிழ்நாட்டு மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியை பொறுப்பில் அமர்த்தினார்கள்.

கடும் உழைப்பால் விளைந்த சாதனை இது. இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் செய்யாத சாதனை செய்துள்ளோம். 2024 – 25 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே நம்பர் ஒன்றாக தமிழ்நாடு 9.69 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி அடைந்திருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் 5 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் வணிக வரியாக வந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகள் நம் அரசின் திட்டங்கள் காரணமா நடுநிலைப் பள்ளிகளில் இடைநீற்றல் இல்லை. மிகச் சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 22 பல்கலைக்கழக தமிழ்நாட்டில் உள்ளது. நிலையான விலைமதிப்பின் படி தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (GSDP) 17 லட்சத்து 23 ஆயிரத்து 698 கோடியாக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் 2024 – 2025 ஆவது ஆண்டில் 3.58 லட்சம் ஆகும். உயர் கல்வியில் தமிழ்நாட்டின் சேர்க்கை விகிதம் 47 விழுக்காடாக உயர்ந்து விட்டது. இந்திய அளவில் 28.4 விழுக்காடு தான் இருக்கிறது. சமூக பொருளாதார வளர்ச்சியை மத்திய அரசின் பொருளாதார திரைக்குள் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த சமூகம் முன்னேற்றக் குறியீட்டுல பெரிய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாடு 63.3 புள்ளிகள் பெற்று தேசிய அளவில் முதலிடத்தில் இருக்கிறோம்.

தமிழ்நாட்டில் இருக்கும் மருத்துவ வசதிகள்:

தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்கள் 1.4% கீழ் உள்ளது. இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் அரசு மருத்துவர்கள் உள்ளனர். தொழில்துறை பொறுத்தவரைக்கும் 39 ஆயிரத்து 626 தொழிற்சாலைகளுடைய இந்தியாவில் நாம தான் நம்பர் ஒன். 1,16,733 படுக்கைகள் அரசு மருத்துவமனையில் உள்ளது. பெண்களுக்கான சிறப்பு திட்டங்களால் தொழிற்சாலை பணிபுரியும் பெண் தொழிலாளர்களின் விகிதம் 47% ஆக உள்ளது.

மேலே பாம்பு – கீழே நரி:

மேலே பாம்பு கீழே நரிகள். ஒரு பக்கம் மத்திய அரசு மறுபக்கம் ஆளுநர். இன்னொரு பக்கம் நிதி நெருக்கடின்னு தடைகளை கடந்து செய்யப்பட்ட சாதனை இது. இதுவரையிலும் இருந்த அரசுகளை காமராஜர் அரசு அண்ணா அரசு கலைஞர் அரசு எம்ஜிஆர் அரசு என சொல்வது வழக்கம் அந்த வரிசையில் இது ஸ்டாலின் அரசு என்று சொல்லிக் கொள்ளாமல் திராவிட மடால் அரசு என குறிப்பிட்டுள்ளேன். சுயமரியாதை, சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி கருத்துக்கள் அதிகாரங்களை கொண்ட மாநிலங்கள் அதுக்காகத்தான் உழைக்கிறோம்.

சட்டம் ஒழுங்கு சீராகவும் தமிழ்நாடு அமைதி மிகுந்த மாநிலமாக இருப்பதால் தான் பெரிய அளவிலான சாதி சண்டைகளோ மதக் கலவரங்களோ பெரிய கலவரங்களோ வன்முறைகளோ இல்லை. குற்றச் சம்பவங்கள் நடந்தால் உடனடியாக குற்றவாளிகள் கைது செய்யப்படுகிறார்கள். மக்களாட்சியில் எல்லோருடைய கருத்துகளையும் கவனித்து ஆராய்ந்து செய்ய வேண்டும் என நினைப்பவன் நான். இது மணிப்பூர் அல்ல இது காஷ்மீர் அல்ல. இது தமிழ்நாடு அதை மறந்துடாதீர்கள். குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்டறியும் நவீன வலை பின்னல் அமைப்பு மறுசீரமைக்கப்பட்டு வருகிறது

சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது நம் அனைவருடைய கூட்டுப் பொறுப்பு. ஒரு குற்றம் நடக்குறதுக்கு முன்னாடியே அதை உணர்ந்து தடுக்கிற முன்னெச்சரிக்கையும் நமக்கு தேவை. காவல்துறையும் பொதுமக்கள் நண்பர்கள் என இரு தரப்பும் இனைந்து செயல்பட வேண்டும். காவலர் நாள் செப்டம்பர் 6ஆம் தேதி கொண்டாடப்படும். மனித வளர்ச்சியோடு எல்லா குறியீடுகளையும் முன்னணி மாநிலமாக இருக்கிற தமிழ்நாடு குற்ற சம்பவங்களிலும் பூஜ்ஜியமாக இருந்தால் தான் நமக்கு பெருமை.

பல்லாண்டு காலமாக தமிழ்நாட்டில் அரசு பணியாளர் தேர்வு முறையில் தயாரிக்கப்பட்டு வந்த தரவரிசை பட்டியல் ஆனது சமூக நீதி அடிப்படையிலிருந்து வந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு வரப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக இந்த முறையில் ஏற்பட்டுள்ள மற்றும் வருங்காலத்து ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கும் அதற்கான சட்ட ரீதியான தீர்வு அளித்திடவும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்றத்தின் நிதி அரசு தலைமையில் குழு ஒன்று அமைக்கப்படும். அந்த குழு அளிக்கக்கூடிய பரிந்துரை அடிப்படையில் இந்த தீர்ப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் இருந்து ஒரு நல்ல தீர்வு காணப்படும்.

ஆதிகுடிகளை இழிவு படுத்து அடையாளமாக காலணி என்ற சொல் பதிவாகி இருக்கிறது. ஆதிக்கத்தின் அடையாளமாகவும் தீண்டாமைக்கான குறியீடாகவும் வசதி சொல்லாக மாறி இருப்பதால் இனி இந்த சொல் அரசு ஆவணங்கள் இருந்தும் பொது புழக்கத்திலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அரசு எந்தவித அழுத்தங்களுக்கு உள்ளகாமல் காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டு சட்டம் ஒழுங்கை பராமரிப்பதிலும் நீதியை நிலைநாட்டுவதிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை பார்த்தது திராவிட மாடல் அரசின் வெர்ஷன் 1 தான். அடுத்த 2026 ஆம் ஆண்டு ஆட்சியில் திராவிட மாடல் வெர்ஷன் 2 வருகிறது” என பேசியுள்ளார்.