மாநில உரிமை.. சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தீர்மானம்.. கூடுதல் அதிகாரம் பெற அதிரடி!
சட்டப்பேரவையில் மாநில சுயாட்சி தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்தார். இதன் மூலம், மாநில அரசுக்கு கூடுதல் அதிகாரம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஆராய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை, ஏப்ரல் 15: சட்டப்பேரவையில் மாநில சுயாட்சி ( state autonomy) தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் (MK Stalin) கொண்டு வந்தார். இதன் மூலம், மாநில அரசுக்கு கூடுதல் அதிகாரம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும், மாநில சுயாட்சியை உறுதி செய்ய மத்திய மாநில அரசுகளின் உறவுகள் குறித்து விரிவாக ஆராய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தீர்மானம்
ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அசோக் வர்தன் ஷெட்டி, திட்டக்குழு முன்னாள் துணைத் தலைவர் நாகநாதன் இதில் உறுப்பினராக இருப்பர் என்றும் கூறியுள்ளார். இந்த குழு 2026 ஜனவரி இறுதிக்குள் இடைக்ல அறிக்கை, 2 ஆண்டுகளில் இறுதி அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
1971 ஆம் ஆண்டு ராஜமன்னார் கமிஷன் முதல் 2004 ஆம் ஆண்டு எம்.எம். புஞ்சி கமிஷன் வரை மத்திய-மாநில உறவுகளை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட பல்வேறு குழுக்களின் அரசியலமைப்பு மற்றும் பரிந்துரைகளை இந்தக் குழு முழுமையாக ஆய்வு செய்யும் என்று கூறியுள்ளார்.
கூடுதல் அதிகாரம் பெற அதிரடி
Speaking in Tamil Nadu Assembly, CM MK Stalin says, “We have lost many students due to NEET exam. We have continuously opposed NEET exam. In the name of the triple language policy, the Union Government is trying to impose Hindi in Tamil Nadu. Since we have denied NEP, Rs 2500 cr… pic.twitter.com/26xamu7E4m
— ANI (@ANI) April 15, 2025
தமிழ்நாட்டின் உரிமைகளை மட்டுமல்ல, குஜராத் முதல் வடகிழக்கு மற்றும் காஷ்மீர் முதல் கேரளா வரையிலான அனைத்து மாநிலங்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்காகவே இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
தொடர்ந்து சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தி மொழியை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாகவும், தமிழ்நாடு தேசிய கல்விக் கொள்கையை நிராகரித்ததால், மாநிலத்தின் ரூ. 2,500 கோடி மதிப்புள்ள நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
நீட் தேர்வால் பல மாணவர்களை இழந்துவிட்டோம். நீட் தேர்வை நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். மும்மொழிக் கொள்கையின் பெயரில், மத்திய அரசு தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்க முயற்சிக்கிறது. கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்க வேண்டியது இன்றியமையாதது” என்று கூறினார்.