’காலனி’ என்ற சொல் நீக்கம்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி… காரணம் என்ன?
தமிழக அரசு ஆவணங்கள், பொதுப் புழக்கத்தில் இருந்து காலனி என்ற சொல் நீக்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முன்னதாக, 2024ஆம் ஆண்டு காலனி என்ற வார்த்தையை அரசு பதிவுகளில் இருந்து கேரள அரசு நீக்கி இருந்த நிலையில், தற்போது தமிழக அரசு நீக்கி உள்ளது.

முதல்வர் ஸ்டாலின்
சென்னை, ஏப்ரல் 29: தமிழக அரசு ஆவணங்கள், பொதுப் புழக்கத்தில் இருந்து காலனி என்ற சொல் நீக்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ‘காலனி’ என்கிற சொல் ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமைக்கான குறியீடாகவும் மாறி இருப்பதால், இனி இந்த சொல் அரசு அலுவலகங்களில் இருந்தும் பொது புழகத்தில் இருநது நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கூட்டத்தொடர் 2025 ஏப்ரல் 29ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. 2024 மார்ச் 14ஆம் தேதி பட்ஜெட் தாக்குதலுக்காக சட்டப்பேரவை கூடியது.
’காலனி’ என்ற சொல் நீக்கம்
ஒரு மாதத்திற்கு மேலாக நடந்த பட்ஜெட் கூட்டத்தொடர் 2025 ஏப்ரல் 29ஆம் தேதியான இன்று முடிவடைகிறது. மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்களும், அறிவிப்புகளும் வெளியாகி வந்தன. இந்த நிலையில், 2025 ஏப்ரல் 29ஆம் தேதியான இன்று காவல்துறை, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்த விவாதத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் காவல்துறையினருக்கும், சிறுபான்மையினருக்கும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இதற்கிடையில், காலனி என்ற சொல்லை நீக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ சிந்தனை செல்வம் கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில், தமிழக அரசு ஆவணங்கள், பொதுப் புழக்கத்தில் இருந்து காலனி என்ற சொல் நீக்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ‘காலனி’ என்கிற சொல் ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமைக்கான குறியீடாகவும் மாறி இருப்பதால் நீக்க உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் அதிரடி
ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமைக்கான குறியீடாகவும், வசைச்சொல்லாகவும் மாறியிருக்கும் ‘காலனி’ என்ற சொல் அரசு ஆவணங்களில் இருந்தும் பொதுப் புழக்கத்தில் இருந்தும் நீக்கப்படும்!
– கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்#DMK4TN #TNAssembly pic.twitter.com/nRiNnmUmww
— DMK (@arivalayam) April 29, 2025
இதுகுறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “இந்த மண்ணின் ஆதிகுடிகளை இழிவுபடுத்தும் அடையாளமாக ‘காலனி’ என்ற சொல் பதிவாகி இருக்கிறது. ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமைக்கான குறியீடாகவும், வசைச்சொல்லாகவும் மாறியிருக்கும் ‘காலனி’ என்ற சொல் அரசு ஆவணங்களில் இருந்தும் பொதுப் புழக்கத்தில் இருந்தும் நீக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
முதலமைச்சரின் நடவடிக்கைக்கு தமிழ்நாட்டில் உள்ள தலித் உரிமை அமைப்புகள் வரவேற்றுள்ளன. சாதியத்தை ஒழிப்பதற்கான ஒரு பெரிய படியாக இருப்பதாக தலித் அமைப்புகள் கூறியுள்ளன. முன்னதாக, 2024ஆம் ஆண்டு காலனி என்ற வார்த்தையை அரசு பதிவுகளில் இருந்து கேரள அரசு நீக்கி இருக்கிறது. இந்த நிலையில், தற்போது தமிழகத்திலும் நீக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.