Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

திமுக கூட்டணியில் பாமக? முதல்வர் ஸ்டாலின் சொன்ன பரபரப்பு பதில்!

CM MK Stalin: ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், முதல்வர் ஸ்டாலின் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளார். ஆளுநரின் அதிகாரம், தொகுதி மறுசீரமைப்பு, நீட் தேர்வு, திமுக கூட்டணி, அதிமுக பாஜக கூட்டணி, துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.

திமுக கூட்டணியில் பாமக? முதல்வர் ஸ்டாலின் சொன்ன பரபரப்பு பதில்!
முதல்வர் ஸ்டாலின்Image Source: X
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 20 Apr 2025 11:39 AM

சென்னை, ஏப்ரல் 20: திராவிட முன்னேற்ற கழக  (திமுக) கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தை கட்சி (விசிக) வெளியேறும் என்றும், பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) திராவிட முன்னேற்ற கழகத்தில் இணையும் என்றும் கூறும் செய்திகள் வதந்தி என்று முதல்வர் ஸ்டாலின் (MK Stalin) பேட்டி அளித்தார். மேலும், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் உறுதி உள்ளன என்றும் விளக்கம் அளித்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆங்கில நாளிதழுக்கு 2025 ஏப்ரல் 19ஆம் தேதியான நேற்று பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் பல்வேறு விஷயங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த பேட்டி அதிக கவனம் பெற்றுள்ளது.

திமுக கூட்டணியில் பாமக?

அதாவது, தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழிக் கொள்கை, ஆளுநர் விவகாரம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். அதன்படி, பாஜக அதிமுக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், “திமுக கூட்டணியால் தோற்கடிக்கப்பட்ட அதே கூட்டணி இது. ஒரு முறை அல்ல, இரண்டு முறை.

2024 மக்களவைத் தேர்தலின் போது இரு கட்சிகளும் பிரிந்துவிட்டதாகத் தோன்றினாலும், அவர்கள் ரகசிய கூட்டணியில் இருப்பதை நான் சுட்டிக் காட்டியிருந்தேன். தற்போது அது உண்மையாகிவிட்டது. மூன்றாவது முறையாக, தமிழக மக்களை ஏமாற்றிய பாஜகவையும், அவர்களுடன் கூட்டணி வைத்த அதிமுகவையும் தோற்கடிப்பார்கள்” என்றார்.

திமுக கூட்டணியில் பாமக இணைகிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், “திமுக கூட்டணி வலுவான கூட்டணி. திமுகவில் பாமக இணையும் என்ற செய்தி வதந்தி தான்” என்று விளக்கம் அளித்தார். தொடர்ந்து, அவரிடம் தமிழகத்தின் ஆளுநராக ரவி தொடர வேண்டுமா என்று கேள்வி எழுப்பபட்டது.

முதல்வர் ஸ்டாலின் சொன்ன பரபரப்பு பதில்

இதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், “தனது பதவிக்காலம் முடிந்த பிறகும் தமிழ்நாட்டில் பணியாற்றுகிறார். எங்களைப் பொறுத்தவரை, தமிழ் மொழி, தமிழ் தாய் வாழ்த்து மற்றும் தமிழ்நாடு என்ற பெயருக்கு எதிராக செயல்படும் ஆளுநர், தன்னை ஒரு தீவிர பாஜக நபராகக் காட்டிக் கொள்கிறார். அவர் பதவியில் இருக்கும் வரை மக்கள் விராத நடவடிக்கையில் ஈடுபடுவார். பாஜகவுக்கு மறைமுகமாக உதவுவார்” என்றார்.

மேலும், ஆளுநர் குறித்து பேசிய அவர், “சட்டமன்றத்தின் அதிகாரத்தை முடக்க முடியாது என்பதை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. ஒரு ஜனநாயகத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமே சட்டம் இயற்றும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது. ஆளுநர் பதவி, ஒரு நியமிக்கப்பட்ட பதவி. ஒரு கௌரவப் பதவி மட்டுமே. ஆளுநர் என்பவர் மத்திய மாநில அரசுகளுக்கு இடையே தபால் காரர் தான். திமுகவின் நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது” என்றார்.

தொடர்ந்து சாதனை படைக்கும் அஜித்... பெல்ஜியம் ரேஸிலும் வெற்றி!
தொடர்ந்து சாதனை படைக்கும் அஜித்... பெல்ஜியம் ரேஸிலும் வெற்றி!...
திருச்சி: குடிநீரில் கலந்த கழிவு நீர்? அடுத்தடுத்து 4 பேர் பலி..!
திருச்சி: குடிநீரில் கலந்த கழிவு நீர்? அடுத்தடுத்து 4 பேர் பலி..!...
டார்ச்சர் செய்த வருங்கால மனைவி - உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்!
டார்ச்சர் செய்த வருங்கால மனைவி - உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்!...
துணை வேந்தர்கள் மாநாடு: முதலமைச்சர் ஸ்டாலின் vs ஆளுநர் ரவி
துணை வேந்தர்கள் மாநாடு: முதலமைச்சர் ஸ்டாலின் vs ஆளுநர் ரவி...
லாப நோக்கற்றது.. பதஞ்சலியில் ரோஜா சர்பத் ஏன் உருவானது தெரியுமா?
லாப நோக்கற்றது.. பதஞ்சலியில் ரோஜா சர்பத் ஏன் உருவானது தெரியுமா?...
மீண்டும் சினிமாவில் ரீ - என்ட்ரி கொடுக்கும் நடிகர் அப்பாஸ்...
மீண்டும் சினிமாவில் ரீ - என்ட்ரி கொடுக்கும் நடிகர் அப்பாஸ்......
சிஎஸ்கே அணிக்காக இளம் வயதில் அறிமுகமான வீரர்கள் பட்டியல்!
சிஎஸ்கே அணிக்காக இளம் வயதில் அறிமுகமான வீரர்கள் பட்டியல்!...
என் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன - சீமான்!
என் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன - சீமான்!...
2025-26 கல்வியாண்டில் தமிழக பள்ளிகளில் கல்விக்கட்டணம் உயர்கிறதா?
2025-26 கல்வியாண்டில் தமிழக பள்ளிகளில் கல்விக்கட்டணம் உயர்கிறதா?...
பம்பாய் படம் இப்போ ரிலீஸ் ஆனா தியேட்டரே பத்தி எரியும்
பம்பாய் படம் இப்போ ரிலீஸ் ஆனா தியேட்டரே பத்தி எரியும்...
2026 சட்டமன்ற தேர்தலில் யார் யாருக்கு எவ்வளவு தொகுதிகள் - நயினார்
2026 சட்டமன்ற தேர்தலில் யார் யாருக்கு எவ்வளவு தொகுதிகள் - நயினார்...