Tamil Nadu Chief Minister M.K. Stalin: நீட் தேர்வை ஆரம்பம் முதலே எதிர்த்தது திமுக.. அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உரை!
All-party Meeting: நீட் நுழைவுத் தேர்வை ஆரம்பம் முதலே திராவிட முன்னேற்ற கழகம் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், எதிர்த்தும் வந்தது. மக்கள் மன்றத்தில் இதற்காக தொடர்ந்து திமுக சார்பில் போராடி வருகிறோம். மேலும், நீட் தேர்வு மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விரிவான ஆய்வு செய்யப்பட்டது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை, ஏப்ரல் 9: நீட் விலக்கு (NEET Exemption) சட்டத்திற்கு மத்திய பாஜக அரசு ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டது. இது தொடர்பாக, 2025 ஏப்ரல் 9ம் தேதியான இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் அனைத்துக்கட்சி கூட்டம் (All Party Meeting) நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu CM MK Stalin) தலைமை தாங்கினார். இந்த நீட் விலக்கு தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தனர். இந்தநிலையில், நீட் விலைக்கு தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் நுழைவுத் தேர்வை தொடக்கம் முதலே திமுக எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. மக்கள் மன்றத்தில் இதற்காக தொடர்ந்து போராடி வருகிறோம் என்று தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை:
அனைத்துக்கட்சி கூட்டத்தில் நீட் விலக்கு தொடர்பாக பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ தமிழ்நாட்டில் நீட் விலக்கு தொடர்பான உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகளை கடந்த 2006ம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, சட்டம் மூலம் நுழைவு தேர்வு மூலம் ரத்து செய்தார். இதனால், தமிழ்நாடு மருத்துவ கல்லூரிகளில் ஏழை, எளிய மாணவர்களின் சேர்க்கை அதிகரித்தது.
நீட் நுழைவுத் தேர்வை ஆரம்பம் முதலே திராவிட முன்னேற்ற கழகம் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், எதிர்த்தும் வந்தது. மக்கள் மன்றத்தில் இதற்காக தொடர்ந்து திமுக சார்பில் போராடி வருகிறோம். மேலும், நீட் தேர்வு மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விரிவான ஆய்வு செய்யப்பட்டது. அந்த குழு அளித்த பரிந்துரையை அடுத்து நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றி தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பினோம்.
தமிழ்நாடு ஆளுநர் தனது கடமையை சரிவர செய்யாமல் நீண்ட காலமாக கிடப்பில் போட்டு நீட் ரத்து மசோதாவை மீண்டும் திரும்ப அனுப்பினார். அதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு சார்பில் மீண்டும் நீட் ரத்து மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினோம். இதுமட்டுமின்றி, இந்திய பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் இதற்கு ஒப்புதல் அளிக்கவும் வலியுறுத்தினோம். இதன் காரணமாக, நீண்ட போராட்டத்திற்கு பிறகு, தமிழ்நாடு ஆளுநர் நீட் ரத்து மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார். இதற்கு அடுத்தும் தமிழ்நாட்டில் நீட் ரத்துக்கு ஒப்புதல் கோரி பல முறை கடிதம் வாயிலாகவும், நேரில் சந்தித்தும், நமது எம்பிக்கள் மூலம் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது. இருப்பினும், இதனை ஏற்காமல் அம்மசோதாவை மத்திய அரசு நிராகரித்தது. இதனால், நம்முடைய போராட்டம் எவ்விதத்திலும் குறையவில்லை, குறையபோவதும் இல்லை.” என்று பேசி இருந்தார்.