Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தமிழக அமைச்சரவை மாற்றம்.. பொன்முடி, செந்தில்பாலாஜி ராஜினாமா..

தமிழக அமைச்சரவை அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவால் செந்தில் பாலாஜியும், சமீபத்தில் பெண்கள் பற்றி இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடியும் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். புதிய அமைச்சர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இலாகாக்கள் பிரித்து வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவை மாற்றம்.. பொன்முடி, செந்தில்பாலாஜி ராஜினாமா..
செந்தில் பாலாஜி - பொன்முடி
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 27 Apr 2025 20:45 PM

தமிழ்நாடு, ஏப்ரல் 27: தமிழ்நாடு அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்கள் பொன்முடி (Ponmudi) மற்றும் செந்தில்பாலாஜி (Senthil Balaji) ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அவர்களின் துறைகள்  அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அமைச்சர் முத்துசாமி மற்றும் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோருக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் முன்னதாக அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டிருந்த மனோ தங்கராஜ் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கான துறை பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை. போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மின்சாரத்துறை கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சரான முத்துசாமி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பால்வளத்துறை அமைச்சராக உள்ள ராஜ கண்ணப்பன், இனி  பொன்முடி வகித்து வந்த வனத்துறை மற்றும் காதி துறைகளை கவனிப்பார் என சொல்லப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. முதலமைச்சராக முதல் முறையாக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் இதுவரை நடந்த நான்காண்டு கால ஆட்சியில் அவ்வப்போது அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு வந்தது.

மீண்டும் மனோ தங்கராஜ்

அதன்படி 2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த போது தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ் 2023 ஆம் ஆண்டு மே 11ம் தேதி பால்வளத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டார். பின்னர் அவர் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். தற்போது ஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அமைச்சரவையில் மனோ தங்கராஜ் சேர்க்கப்பட்டுள்ளார்.

செந்தில் பாலாஜி, பொன்முடி ராஜினாமா

முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தற்போதைய திமுக ஆட்சியில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சராக இருந்தார். இவர் கடந்த ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்தது. நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. வெளியே வந்த அவர் உடனடியாக அமைச்சராக பதவி ஏற்று கொண்டார்.

இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக வெடிக்க இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வேண்டுமா? அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா? என்று கேள்வியெழுப்பி 2025, ஏப்ரல் 28ஆம் தேதி அவர் இது தொடர்பாக கருத்து தெரிவிக்க அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தான் ஜாமீன் கிடைத்தால் போதும் என்ற முடிவுக்கு வந்த அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.

இதேபோல் திமுக அரசு பதவியேற்ற போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி பின்னர் வனத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் சமீபத்தில் விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் குறித்து இழிவாக பேசியதாக பொன்முடிக்கு சரமாரியாக கண்டனங்களை எழுந்தது. 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இது திமுக ஆட்சிக்கு அவப்பெயராக அமையலாம் என கூறப்பட்டது. இந்த நிலையில்தான் பொன்முடி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tamilnadu Weather Update: அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
Tamilnadu Weather Update: அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு...
அதிக வட்டி விகிதம் கொண்ட FD - உடனே இந்த வங்கிகளை செக் பண்ணுங்க!
அதிக வட்டி விகிதம் கொண்ட FD - உடனே இந்த வங்கிகளை செக் பண்ணுங்க!...
தங்கத்தை உருக்கி நொடி பொழுதில் பணமாக தரும் மெஷின் - வைரல் வீடியோ!
தங்கத்தை உருக்கி நொடி பொழுதில் பணமாக தரும் மெஷின் - வைரல் வீடியோ!...
கை பம்ப் மூலம் விமானத்திற்கு காற்றடித்த விமானி!
கை பம்ப் மூலம் விமானத்திற்கு காற்றடித்த விமானி!...
ஹல்தி விழாவில் டைனோசர் உடையணிந்து வந்த மணப்பெண் வீடியோ வைரல்!
ஹல்தி விழாவில் டைனோசர் உடையணிந்து வந்த மணப்பெண் வீடியோ வைரல்!...
அந்நியன் படத்தில் நடித்தது எனக்குத் தொந்தரவாக இருந்தது- விக்ரம்!
அந்நியன் படத்தில் நடித்தது எனக்குத் தொந்தரவாக இருந்தது- விக்ரம்!...
குட்டி யானைக்கு சாப்பிட சொல்லி தரும் தாய் யானை - வைரல் வீடியோ!
குட்டி யானைக்கு சாப்பிட சொல்லி தரும் தாய் யானை - வைரல் வீடியோ!...
பாகிஸ்தான் உடனான அனைத்து வர்த்தக உறவுகளும் துண்டிப்பு!
பாகிஸ்தான் உடனான அனைத்து வர்த்தக உறவுகளும் துண்டிப்பு!...
சிம்புவுடன் நடிக்கணும்னா ஒரு கண்டிஷன்.. ஹரிஷ் கல்யாண் சொன்ன பதில்
சிம்புவுடன் நடிக்கணும்னா ஒரு கண்டிஷன்.. ஹரிஷ் கல்யாண் சொன்ன பதில்...
தமிழக அமைச்சரவை மாற்றம்.. பொன்முடி, செந்தில்பாலாஜி ராஜினாமா..
தமிழக அமைச்சரவை மாற்றம்.. பொன்முடி, செந்தில்பாலாஜி ராஜினாமா.....
செப்சிஸ் போன்ற தொற்றுநோய்களுக்கு ஆயுர்வேத சிகிச்சை-பதஞ்சலி தகவல்
செப்சிஸ் போன்ற தொற்றுநோய்களுக்கு ஆயுர்வேத சிகிச்சை-பதஞ்சலி தகவல்...