Tamil Nadu Cabinet Meeting: ஏப்ரல் 17ம் தேதி கூடுகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம்.. முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு?

Tamil Nadu Government: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஏப்ரல் 17, 2025 அன்று மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. முக்கிய தொழில் திட்டங்கள், ஆளுநர் எதிர்ப்பு வழக்கு, நீட் தேர்வு மசோதா, மாநில சுயாட்சி உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளன. சட்டமன்ற கூட்டத்தொடர் குறித்த முடிவுகளும் எடுக்கப்படலாம்.

Tamil Nadu Cabinet Meeting: ஏப்ரல் 17ம் தேதி கூடுகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம்.. முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு?

தமிழக அமைச்சரவை கூட்டம்

Published: 

15 Apr 2025 18:46 PM

சென்னை, ஏப்ரல் 15: தமிழக அமைச்சரவைக் கூட்டம் 2025 ஏப்ரல் 17 ஆம் தேதி மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது. தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய தொழில்துறை திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamilnadu Chief Minister MK Stalin) தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வருகின்ற 2025 ஏப்ரல் 17ம் தேதி அதாவது நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. அதன்படி, சென்னை தலைமை செயலகத்தில் மாலை 5 மணிக்கு அமைச்சரவை கூட்டம் (Tamil Nadu Cabinet Meeting) தொடங்குகிறது. இதில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (Tamilnadu Deputy Chief Minister Udhayanidhi Stalin) மற்றும் மற்ற அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இந்த கூட்டமானது தொகுதி மறுவரையறை, புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக நடைபெறும் என்று கூறப்படுகிறது. மேலும், தொழிற்சாலை பணிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக ஆலோசனை செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

முக்கிய முடிவுகள்:

கடந்த 2021ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தது. அதன்பிறகு, தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் முதலமைச்சரை தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழக வேந்தராக மாற்றுவது உள்ளிட்ட 10 மசோதாக்களை தீர்மானமாக நிறைவேற்றி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பியது. இந்த மசோதாக்களுக்கு எதையும் ஒப்புதல் தராமல் ஆளுநர் நீண்ட ஆண்டுகாலமாக கிடப்பில் போட்டிருந்தார்.

இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் ஆளுநருக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை சமீபத்தில் விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு எதிராக தீர்ப்பளித்து, தனது அதிகாரத்தை பயன்படுத்தி மசோதாக்களுக்கு ஒப்புதல் வழக்கி உத்தரவிட்டது. மேலும் ஆளுநர், குடியரசு தலைவருக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க காலக்கெடுவையும் விதித்து உத்தரவிட்டது. இதன் தொடர்பாகவும், நாளை அதாவது 2025 ஏப்ரல் 16ம் தேதி பல்கலைக்கழக துணை வேந்தர்களின் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.

அமைச்சரவைக் கூட்டம்:

2025 ஏப்ரல் 15ம் தேதி நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்ற தீர்ப்பு வழங்கியது தொடர்பாகவும் விவாதிக்கலாம் என்று கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, நீட் தேர்வு மசோதா, மாநில சுயாட்சி குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், சட்டமன்ற கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இதுகுறித்தான முக்கிய முடிவுகளையும் எடுக்கலாம்.மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றுவது குறித்து குழு ஆய்வு செய்யும் குறித்தும், மத்திய அரசு இந்தி மொழியை திணிக்க முயற்சிப்பது தொடர்பான விவகாரம் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தலாம்.