விண்வெளி கொள்கை… 10,000 பேருக்கு வேலை ரெடி.. ஸ்டாலின் சொன்ன முக்கிய விஷயம்!

தமிழ்நாடு விண்வெளி கொள்கை 2025க்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கையின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் விண்வெளித்துறையில் ரூ.10,000 கோடி முதலீடுகளை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் மூலம் 10,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று கூறப்பட்டுள்ளது.

விண்வெளி கொள்கை... 10,000 பேருக்கு வேலை ரெடி.. ஸ்டாலின் சொன்ன முக்கிய விஷயம்!

விண்வெளி கொள்கை 2025

Updated On: 

18 Apr 2025 08:44 AM

சென்னை, ஏப்ரல் 18: தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை (space industrial policy)  2025க்கு அமைச்சரவை ஒப்புதல் (Tamil Nadu Cabinet) அளித்துள்ளது. இதன் மூலம், 10,000 பேருக்கு வேலை வாய்ப்புகள கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவை கூட்டம் 2025 ஏப்ரல் 17ஆம் தேதியான நேற்று நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் மாலை 4 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் பல முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

விண்வெளி கொள்கை

குறிப்பாக, தமிழகத்தில் தொழில் முதலீடு செய்வது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும், இக்கூட்டத்தில் என்னென்ன விஷயங்கள் குறித்து  ஆலோசிக்கப்பட்டது என்பது குறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.

அப்போது பேசிய அவர், “விண்வெளித் துறையில் ஒரு முக்கியமான கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த துறையில் ரூ.1000 கோடி முதலீடுகளை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்களுக்கு திறமையான இளைஞர்களை உருவாக்குவதன் மூலம் சுமார் 10,000 பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதும் இதன் நோக்கமாகும். பொதுவாக உற்பத்தித் துறையில் கவனம் செலுத்தப்பட்டாலும், விண்வெளி மற்றும் தொடர்புடைய சேவைத் துறை உள்ளிட்ட புதிய துறைகளில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது” என்று கூறினார்.

ஸ்டாலின் சொன்ன முக்கிய விஷயம்

தொடர்ந்து பேசிய அவர், “விண்வெளித் துறையில் உள்ள நிறுவனங்களுக்கு ஒரு சிறப்புத் தொகுப்பு வழங்கப்படும். இந்தக் கொள்கையில், மாநிலத்தில் விண்வெளித் துறையில் பங்களிக்கும் ஸ்டார்ட் அப்கள் மற்றும் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள், நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகைகள் ஆகியவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

விண்வெளி துறையில் ரூ.300 கோடிக்கு மேல் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு சிறப்புத் தொகுப்பை உருவாக்குவதோடு, காப்புரிமைகளைப் பெறுவதற்கு மாநில அரசு 50 சதவீதம் மானியத்தையும் வழங்கும்.

வேலைவாய்ப்பு பெற்ற முதல் ஆண்டில் 30 சதவீதம் வரை சம்பள மானியம் வழங்குவதும் இந்தக் கொள்கையின் அம்சங்களில் ஒன்றாகும். இது விண்வெளி துறைக்கு பொன்னான நாள். இந்தக் கொள்கை தமிழக்ததில் வரப்பிரசாதமாக இருக்கும். தென் தமிழக்ததில் குலசேகரபட்டினத்தில் கட்டப்பட்டு வரும் ராக்கெட் ஏவுதளமான போன்ற இடங்களுக்கு இந்தக் கொள்கை பெரும் ஊக்கத்தை அளிக்கும்” என்றார்.