Minister Regupathy: தமிழ்நாட்டின் நம்பர் 1 துரோகி யார்? எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த அமைச்சர் ரகுபதி!
Edappadi Palaniswami's Martyr Badge: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “ நாங்கள் எழுப்பிய யார் அந்த தியாகி என்ற கேள்விக்கு பதில் சொல்ல திராணியில்லாத முதல்வர் மு.க.ஸ்டாலின் சம்மந்தமே இல்லாத பதில் ஒன்றை அளித்துள்ளார்” என குறிப்பிட்டிருந்தார்.

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
சென்னை, ஏப்ரல் 7: தமிழ்நாடு சட்டப்பேரவைக்கூட்டம் இன்று அதாவது ஏப்ரல் 7ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி (Edappadi K. Palaniswami) உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது சட்டையில் ‘யார் அந்த தியாகி..?’ என்ற வாசகத்துடனான பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர். இது இன்றைய நாள் முழுவதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை பார்த்து சற்று கடுப்பான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu CM MK Stalin) ” அதிமுகவில் இருக்கும் சிலர் தாங்கள் சிக்கியிருக்கும் வழக்குகளில் இருந்து தப்பித்து கொள்ள தலைநகர் டெல்லிக்கு சென்று யார் காலில் விழுந்தார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதலமைச்சராக அன்றைக்கு மாற உதவி செய்த அம்மையாரை ஏமாற்றியவர்தான் இன்று தியாகியாக இருக்கிறார்” என்று தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “ நாங்கள் எழுப்பிய யார் அந்த தியாகி என்ற கேள்விக்கு பதில் சொல்ல திராணியில்லாத முதல்வர் மு.க.ஸ்டாலின் சம்மந்தமே இல்லாத பதில் ஒன்றை அளித்துள்ளார்” என குறிப்பிட்டிருந்தார்.
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்ட முக்கிய கருத்து:
எடப்பாடி பழனிசாமியின் இந்த ட்விட்டர் பதிவிற்கு தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். அவை பின்வருமாறு:
- தமிழகத்தின் நம்பர் ஒன் துரோகி யார்? எனக் கேட்டால் அரசியல் தெரியாத சிறிய வயது உடையவன் கூட முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கை காட்டுவான்.
- ’பாரதிய ஜனதா கட்சியின்ன் அடிமையாக வாழ்வதையே அரசியல்’ என வாழும் பாதந்தாங்கி எடப்பாடி பழனிசாமி அவமானப்படுவது உறுதி
- யார் அந்தத் தியாகி? என்ற அதிமுகவின் முனை மழுங்கிய கேள்விக்கு ‘’நொந்து போய் நூடுல்ஸ் ஆன அதிமுக தொண்டர்கள்தான் அந்த தியாகிகள்’’ என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நொந்து போன எதிர்க் கட்சித் தலைவர் வீராவேசமாக கருத்து சொல்லியிருக்கிறார்.
- அம்மையார் ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்தவர் பழனிசாமி. ஜெயலலிதாவின் கொள்கைக்கு எதிரான பாஜகவின் பாதம்தாங்கியாக மாறினார் பழனிசாமி.
- தவழ்ந்து, ஊர்ந்து சென்று நாடகமாடி ஆட்சியைப் பிடித்த பிறகு, சசிகலாவுக்கும் துரோகம் செய்தவர் பழனிசாமி. திரையில் துரோகத்திற்குக் கட்டப்பா என்றால், தரையில் பழனிசாமிதானே!
எடப்பாடி பழனிசாமி குறித்து அமைச்சர் ரகுபதி:<
’தமிழ்நாட்டின் நம்பர் 1 துரோகி யார்?’ எனக் கேட்டால் அரசியல் தெரியாத சிறுவன் கூட பழனிசாமியை கை காட்டுவான்.
’பாஜகவின் அடிமையாக வாழ்வதையே அரசியல்’ என வாழும் பாதந்தாங்கி பழனிசாமி அவமானப்படுவது உறுதி
யார் அந்தத் தியாகி? என்ற அதிமுகவின் முனை மழுங்கிய கேள்விக்கு ‘’நொந்து போய்…
— எஸ்.ரகுபதி (@regupathymla) April 7, 2025
- சுயநலத்துக்காக எடப்பாடி பழனிச்சாமி எந்த எல்லைக்கும் செல்வார்? எந்தத் துரோகத்தையும் செய்வார் என்பதற்கு நடமாடும் சாட்சிகள் ஓ.பன்னீர்செல்வமும் தினகரனும்.
- எடப்பாடி பழனிச்சாமியின் சுயரூபம் தெரியாமல் அவரை நம்பி மோசம் போன இவர்கள்தான் அந்தத் தியாகிகள்!
- எடப்பாடி பழனிச்சாமியின் வார்த்தையை நம்பி ஏமாற்றம் அடைந்த அதிமுகவின் ஒவ்வொரு தொண்டனுமே தியாகிகள்தான்! அவர்களுக்கும் எடப்பாடி துரோகிதான்!
- பாஜகவின் தயவில் அரசியல் வண்டியை ஓட்ட நினைக்கிறார் பழனிசாமி. தனக்கு முதுகெலும்பு இருப்பதே, பாஜகவிற்கு வளைந்து கொடுத்து அடிமை சேவகம் செய்வதற்குத்தான் என ஒன்றிய அரசின் காலடியில் வீழ்ந்து கிடக்கும் பாஜகவின் பண்ணையடிமைதான் பழனிசாமி.
- தனது டெல்லி எஜமானர்களின் ஏவல் படையான அமலாக்கத்துறை தமிழ்நாடு டாஸ்மாக் அலுவலகத்தில் நடத்திய ஒரு முகாந்திரமற்ற சோதனையை வைத்துக் கொண்டு, அபத்தமான கேள்வியோடு தனது கோமாளித்தனத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி. யார் அந்த சார்? என்ற புரளி நாடகம் அம்பலப்பட்ட பிறகு வேறு ஏதேனும் கிடைக்காதா என்று திணறிக் கொண்டிருக்கிறார்.
- கொஞ்சம் கூட வெட்கமின்றி, தமிழ்நாட்டு மக்களைப் பற்றி துளியும் யோசிக்காமல் கூட்டணிக்கு அச்சாரம் போட்டுக் கொண்டிருக்கும் எடப்பாடி தமிழ்நாட்டுக்கே துரோகி!
- இன்றைக்குத் தமிழ்நாடு மட்டுமல்ல ஒட்டுமொத்தத் தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளையும் பாதுகாத்து, நாட்டின் கூட்டாட்சி கோட்பாட்டை உயர்த்திப்பிடித்து வரும் தமிழ்நாடு முதலமைச்சரை இன்று உலக அளவில் ஊடகங்கள் பாராட்டி வருகின்றன.
- அதைப் பொறுக்க முடியாமல், தனது பதவி நலனுக்காக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ’பாஜகவின் அடிமையாக வாழ்வதையே அரசியல்’ என வாழும் பாதந்தாங்கி பழனிசாமி டெல்லி எஜமானர்களின் ஆணையின் படி இந்த நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த நாடகமும் மக்களிடம் அம்பலப்பட்டு பழனிசாமி அவமானப்படுவது உறுதி.” என தெரிவித்திருந்தார்.