Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

2026 சட்டமன்ற தேர்தலில் யார் யாருக்கு எவ்வளவு தொகுதிகள்.. நயினார் நாகேந்திரன் விளக்கம்!

Nainar Nagenthiran Explained About 2026 Election Seat Sharing | 2026 சட்டமன்ற தேர்தலை பாஜக - அதிமுக கூட்டணி அமைத்து களம் காண உள்ள நிலையில், தொகுதி பங்கீடு குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

2026 சட்டமன்ற தேர்தலில் யார் யாருக்கு எவ்வளவு தொகுதிகள்.. நயினார் நாகேந்திரன் விளக்கம்!
நயினார் நாகேந்திரன்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 21 Apr 2025 07:10 AM

திண்டுக்கல், ஏப்ரல் 21 : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA – National Democratic Alliance) இடம்பெறும் கட்சிகள் மற்றும் யார், யாருக்கு எவ்வளவு தொகுதிகள் என்பதை உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் முடிவு செய்வார்கள் என்று பாரதிய ஜனதா கட்சியின் (BJP – Bharatiya Janata Party) மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். நேற்று (ஏப்ரல் 20, 2025) திண்டுக்கல்லில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பங்கேற்றார். அப்போது மேடையில் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்த நிலையில், 2026 சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து அவர் கூறியது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல்

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில் அதிமுக – பாஜக கூட்டணி தோல்வியை தழுவியது. தற்போது தமிழகத்தில் உள்ள திமுக தலைமையிலான அரசு நிறைவடைய உள்ளது. இதன் காரணமாக 2026-ல் மீண்டும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், இந்த தேர்தலில் எந்த எந்த கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கும் என பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது. பாஜக – அதிமுக கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகளும் இருந்தன. அதன்படியே அந்த இரண்டு கட்சிகளும் 2026 சட்டமன்ற தேர்தலை இணைந்து சந்திப்பதாக அறிவித்தன.

அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்த அமித்ஷா

தொகுதி பங்கீடு – நயினார் நாகேந்திரன் விளக்கம்

பாஜக – அதிமுக இடையே கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், தொகுதி பங்கீடு குறித்து தகவல் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திண்டுக்கல்லில் கட்சி நிகழ்ச்சியில் பேசிய நயினார் நாகேந்திரன், இரட்டை இலை, தமரை உறுதியான கூட்டணி, இறுதியான கூட்டணி. திமுகவை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டியது தான் நமக்கு முக்கியம். தேசிய ஜனநாயக கட்சியில் பங்கு வகிக்கும் கட்சிகள் எவை, யார் யாருக்கு எவ்வளவு தொகுதிகள் என்பது குறித்து அமித்ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் முடிவு செய்வார்கள் என்று கூறியுள்ளார்.

திருச்சி: குடிநீரில் கலந்த கழிவு நீர்? அடுத்தடுத்து 4 பேர் பலி..!
திருச்சி: குடிநீரில் கலந்த கழிவு நீர்? அடுத்தடுத்து 4 பேர் பலி..!...
டார்ச்சர் செய்த வருங்கால மனைவி - உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்!
டார்ச்சர் செய்த வருங்கால மனைவி - உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்!...
துணை வேந்தர்கள் மாநாடு: முதலமைச்சர் ஸ்டாலின் vs ஆளுநர் ரவி
துணை வேந்தர்கள் மாநாடு: முதலமைச்சர் ஸ்டாலின் vs ஆளுநர் ரவி...
லாப நோக்கற்றது.. பதஞ்சலியில் ரோஜா சர்பத் ஏன் உருவானது தெரியுமா?
லாப நோக்கற்றது.. பதஞ்சலியில் ரோஜா சர்பத் ஏன் உருவானது தெரியுமா?...
மீண்டும் சினிமாவில் ரீ - என்ட்ரி கொடுக்கும் நடிகர் அப்பாஸ்...
மீண்டும் சினிமாவில் ரீ - என்ட்ரி கொடுக்கும் நடிகர் அப்பாஸ்......
சிஎஸ்கே அணிக்காக இளம் வயதில் அறிமுகமான வீரர்கள் பட்டியல்!
சிஎஸ்கே அணிக்காக இளம் வயதில் அறிமுகமான வீரர்கள் பட்டியல்!...
என் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன - சீமான்!
என் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன - சீமான்!...
2025-26 கல்வியாண்டில் தமிழக பள்ளிகளில் கல்விக்கட்டணம் உயர்கிறதா?
2025-26 கல்வியாண்டில் தமிழக பள்ளிகளில் கல்விக்கட்டணம் உயர்கிறதா?...
பம்பாய் படம் இப்போ ரிலீஸ் ஆனா தியேட்டரே பத்தி எரியும்
பம்பாய் படம் இப்போ ரிலீஸ் ஆனா தியேட்டரே பத்தி எரியும்...
2026 சட்டமன்ற தேர்தலில் யார் யாருக்கு எவ்வளவு தொகுதிகள் - நயினார்
2026 சட்டமன்ற தேர்தலில் யார் யாருக்கு எவ்வளவு தொகுதிகள் - நயினார்...
வெயிலும் மழையும் தொடரும் – வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை
வெயிலும் மழையும் தொடரும் – வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை...