எச்சரிக்கை: மீனவர்கள் இந்த இரண்டு நாட்கள் கடலுக்கு செல்லக்கூடாது… காரணம் இதுதான்…

Fishermen banned from going to sea: தூத்துக்குடியில் 2025 ஏப்ரல் 10, 11 தேதிகளில் கடலில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை; விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடலில் மணிக்கு 55 கிமீ வரை சூறாவளிக்காற்று வீசலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எச்சரிக்கை: மீனவர்கள் இந்த இரண்டு நாட்கள் கடலுக்கு செல்லக்கூடாது... காரணம் இதுதான்...

மீனவர்கள் இரண்டு நாட்கள் கடலுக்கு செல்லக்கூடாது

Updated On: 

10 Apr 2025 12:00 PM

தூத்துக்குடி ஏப்ரல் 10: தூத்துக்குடி மாவட்டத்தில் (Thoothukudi district) கடலில் பலத்த காற்று வீசுவதால், விசைப்படகு மீனவர்கள் (Motorboat fishermen) 2025 ஏப்ரல் 10, 11 தேதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம், (India Meteorological Department) தென் தமிழக கடலோரங்களில் மணிக்கு 35-45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் காற்று வீசும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளிலும் கடும் காற்று வீசக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகளில் மீன்பிடிக்க தடை (Ban on fishing in motorboats) விதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் தற்காலிகமாக கடலுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மீனவர்களுக்கு 2 நாட்கள் மீன்பிடி தடை

தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகு மீனவர்களுக்கு 2 நாட்கள் மீன்பிடி தடை விதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடலில் பலத்த காற்று வீசுவதால், விசைப்படகு மீனவர்கள் எதிர்வரும் 2025 ஏப்ரல் 10 மற்றும் 11 ஆகிய 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என அதிகாரப்பூர்வமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சூறாவளிக்காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட எச்சரிக்கையில், தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்

இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அரசு அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மீனவர்கள் தற்காலிகமாக கடலுக்கு செல்லாமலிருப்பது பாதுகாப்பு கருதி அவசியமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுவிழக்கும்

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) மத்திய வங்கக் கடலை நோக்கி நகர்ந்து, படிப்படியாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவி பி. அமுதா தெரிவித்தார்.

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் இந்த தாழ்வு பகுதி, வியாழக்கிழமை (2025 ஏப்ரல் 10) முதல் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து மத்திய வங்கக் கடலை நோக்கி செல்கிறது. இந்நிலையில் வலிமை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு

தென் தமிழகத்தையொட்டிய கடலோர பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காணப்படுவதால், 2025 ஏப்ரல் 10 முதல் 15 வரை தமிழகத்தில் சில இடங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக கோவையில் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் 2025 ஏப்ரல் 10 ஆம் தேதி வியாழக்கிழமை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.