சட்டப் போரில் சளைக்காமல் முதன்மையாக நிற்பேன்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
CM MK Stalin Letter to Party Members | நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தொடர்பாக ஏப்ரல் 9, 2025 அன்று சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்காத நிலையில், பாஜக பங்கேற்காததால் அதிமுகவும் புறக்கணித்துவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, ஏப்ரல் 10 : மாநில உரிமை காக்கும் சட்டப் போரில் சளைக்காமல் முதன்மையாக நிற்பேன் என்றும், இந்தியாவின் ஜனநாயகத்தையும், கூட்டாட்சியையும் காத்திடும் பேரியக்கமாக தி.மு.கழகம் தன் போராட்டத்தை தொடரும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் (DMK – Dravida Munnetra Kazhagam) தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை ஏழுதியுள்ளார். அதில் ஆளுநர் விவகாரம், நீட் எதிர்ப்பு தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்காதது உள்ளிட்ட சில முக்கிய விஷயங்கள் குறித்து பேசியுள்ளார். இந்த நிலையில், தொண்டர்களுக்கு எழுதிய மடலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன கூறியுள்ளார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தொண்டர்களுக்கு முதலமைச்சர் எழுதிய மடல்
தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஆளுநரின் அதிகார அத்துமீறல்களை ரத்து செய்து மாநில உரிமைகளை காத்திடும் மகத்தான தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்கிய நாள் வரலாற்றின் பக்கங்களில் பொன்னான எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய Red Letter Day ஆகும் என்று கூறியுள்ளார். கல்வியில் சிறந்த தமிழ்நாட்டில் பல்கலைக்கழக வேந்தர் என்று அதிகாரத்தைக் கொண்டிருந்த ஆளுநர் உயர்கல்வி ஆரமற்ற அரசியலை புகுத்தி, காவி சாயம் பூசி கொண்டிருப்பதற்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் மசூதாக்கள் நிறைவேற்றப்பட்டன என்றும் அவர் கூறியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு
மாநில உரிமை காக்கும் சட்டப் போரில் சளைக்காமல் முதன்மையாக நிற்பேன்!
இந்தியாவின் ஜனநாயகத்தையும் கூட்டாட்சியையும் காத்திடும் பேரியக்கமாகத் தி.மு.கழகம் தன் போராட்டத்தைத் தொடரும்!#தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும்!#LetterToBrethren pic.twitter.com/xA7VTvVErV
— M.K.Stalin (@mkstalin) April 10, 2025
ஆளுநர் பதவி தபால்காரர் பணிதான் – முதலமைச்சர்
திமுக எப்போதும் சொல்லி வருவது போல ஆளுநர் பதவி என்பது ஒன்றிய மாநில அரசு இடையிலான தபால்காரர் பணிதான் என்பதை உச்ச நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு அளித்திருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், ஆன்லைன் அத்துமீறல்களை தகர்த்தெறிந்து வெற்றி தீர்ப்பு வெளியான வேகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான சட்ட போராட்டத்தை தொடர்வதற்கான அனைத்து கட்சி கூட்டம் ஏப்ரல் 9, 2025 அன்று நடைபெற்றது. சமூக நீதிக்கும் மாணவர்களுக்கும் மக்களுக்கும் எதிரான பாஜகவினர் இதில் பங்கேற்கவில்லை என்றதும் முதன்மை எதிர்க்கட்சியான அதிமுகவினரும் புறக்கணித்துவிட்டனர் என்று தனது கடிதத்தில் முதலமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முன்னோடியான திராவிட முன்னேற்ற கழகம், நீட் தேர்விலும் விலக்கு பெற ஆதரவு சக்திகளுடன் ஒருங்கிணைந்து தனது சட்டப்போராத்தை முன்னேடுக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.