தமிழகத்திற்கு அநியாயமாக நிறுத்தி வைக்கப்பட்ட ரூ.2,252 கோடியை மத்திய அரசு விடுவிக்குமா?.. முதலமைச்சர் கேள்வி!

Stalin Questions Centre on NEP | இந்தியாவில் தேசிய கல்விக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை தமிழகத்தில் அமலபடுத்த திமுக அரசு தொடர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், மகாராஷ்டிராவில் மூன்றாவது மொழியாக மராத்தி கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்திற்கு அநியாயமாக நிறுத்தி வைக்கப்பட்ட ரூ.2,252 கோடியை மத்திய அரசு விடுவிக்குமா?.. முதலமைச்சர் கேள்வி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

Updated On: 

22 Apr 2025 07:51 AM

சென்னை, ஏப்ரல் 22 : தேசிய கல்விக் கொள்கையின் (NEP – National Education Policy) கீழ் மகாராஷ்டிராவில் மூன்றாவது மொழியாக மராத்தியை தவிர வேறு எந்த மொழியும் கட்டாயமில்லை என்ற அந்த மாநில முதலமைச்சரின் நிலைப்பாட்டை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கிறதா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரிடம் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார். இந்த நிலையில், முதலமைச்சர் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தேசிய கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்க்கும் திமுக அரசு

இந்தியாவில் 2021 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது தான் இந்த தேசிய கல்விக் கொள்கை. இதன் மூலம் பள்ளி மாணவர்கள் கட்டாயம் மூன்று மொழிகளை படிக்க வேண்டும். மாணவர்களின் செயல்திறனையும், கல்வியையும் மேம்படுத்த இந்த திட்டத்தை அறிமுகம் செய்வதாக மத்திய அரசு கூறினாலும், இந்த திட்டத்தின் மூலம் புதிய இந்தியை திணிக்க முயல்வதாக குற்றம்சாட்டி திட்டத்தை அமல்படுத்த விடாமல் திமுக அரசு தொடர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. பீகார் உள்ளிட்ட சில மாநிலங்கள் இந்த தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டாலும் தமிழ்நாடு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு

சரமாரி கேள்வி எழுப்பிய முதலமைச்சர்

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசிய கல்விக் கொள்கையின் கீழ் மகாராஷ்டிராவில் மூன்றாவது மொழியாக மராத்தி தவிர வேறு எந்த மொழியும் கட்டாயமில்லை என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கிறதா. அப்படியில்லை என்றால் தேசிய கல்விக் கொள்கையில் மூன்றாவது மொழியையை கட்டாயமாக கற்பிக்க வேண்டிய அவசியமில்லை என்பதை உறுதி செய்யும் தெளிவான உத்தரவை அரசு வெளியிடுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தமிழகத்திற்கு அநியாயமாக நிறுத்தி வைக்கப்பட்ட ரூ.2,252 கோடியை மத்திய அரசு விடுவிக்குமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.