2 பேருந்துகள் மோதி கோர விபத்து.. பயணிகள் பலர் காயம்.. கடலூரில் பரபரப்பு!
Cuddalore Bus Accident : கடலூரில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது, அரசுப் பேருந்தும், தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி கொண்டது. இதி 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடலூர், ஏப்ரல் 10: கடலூரில் இரண்டு பேருந்துகள் (Cuddalore Bus Accident) நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் கடலூரை உலுக்கியுள்ளது. நாட்டில் சாலை விபத்துகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.
2 பேருந்துகள் மோதி கோர விபத்து
சாலை விபத்துகளை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், சாலை விதிமுறைகளையும் கடுமையாக்கி வருகிறது. இருப்பினும், நாட்டில் சாலை விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது ஒரு கோர விபத்து கடலூரில் நடந்துள்ளது.
அதாவது, கடலூரில் 2 பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானது. கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. அதாவது, சென்னையில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
விழுப்புரம் – நாகப்பட்டினம் 4 வழிச்சாலை வழியே ஆலப்பாக்கம் அருகே சென்றபோது, கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த தனியார் பேருந்து, அரசு பேருந்தின் மீது மோதியது. அப்போது, அதில் பயணித்த பயணிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
பயணிகள் பலர் காயம்
தனியார் பேருந்து இடது பக்கம் திரும்ப முயன்றபோது அரசு பேருந்தின் மீது மோதி இருக்கிறது. இதனால், அரசு பேருந்து வயல்வெளியில் இறங்கியது. அப்போது, இரண்டு பேருந்துகளில் பயணித்த பயணிகள் பலரும் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து அறிந்த உள்ளூர் மக்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு போலீசாரும், ஆம்புலன்ஸ் வந்தடைந்தது. அப்போது, விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கோர விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், பேருந்துகளை ஓட்டுநர் சரியாக இயக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அண்மையில் கூட விபத்துகளை தடுக்க தமிழக போக்குவரத்து துறை புதிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
அதாவது, தமிழக அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர்களுக்கு பணிக்கு வரும்போது கட்டாய ஆல்கஹால் சோதனை நடைமுறைக்கு வந்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலும், விபத்துகளை குறைக்க நோக்கிலும் தமிழக போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.