காரும் அரசு பேருந்தும் நேருக்கு மோதி விபத்து.. 4 பேர் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் சோகம்!
Tiruvannamalai accident: திருவண்ணாமலையில் காரும், அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெங்களூர் சென்றுவிட்டு புதுச்சேரி திரும்பியபோது, இந்த விபத்து நடந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

திருவண்ணாமலை, ஏப்ரல் 13: திருவண்ணாமலையில் காரும், அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புதுச்சேரியைச் சேர்ந்த ஸ்டாலின், சதீஷ்குமார், சைலேஷ்குமார், சரூஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. பணி காரணமாக, பெங்களூர் சென்றுவிட்டு புதுச்சேரி திரும்பியபோது, இந்த விபத்து நடந்துள்ளதாக தெரிகிறது. நாட்டில் சாலை விபத்துகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.
காரும் அரசு பேருந்தும் நேருக்கு மோதி விபத்து
இதனால், சாலை விதிகளை அரசும் கடுமையாக்கி வருகிறது. மேலும், விபத்துகள் நிகழாமல் இருக்க சாலைகளையும் அவ்வப்போது சீரமைத்து வருகிறது. இருப்பினும், சாலை விபத்துகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் தமிழ்நாட்டிலும் விபத்துகள் நடந்து வருகிறது.
அப்படியொரு விபத்து தான் தற்போது திருவண்ணாமலையில் நடந்துள்ளது. திருவண்ணாமலை காட்டுக்குளம் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதாவது, காட்டுக்குளம் பகுதியில் நெடுஞ்சாலை கார் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அந்த காரில் நான்கு பேர் பயணித்துள்ளனர்.
லாரி உரிமையாளர்களான இவர்கள், பெங்களூருவுக்கு வேலை நிமித்தமாக சென்றுவிட்டு, புதுச்சேரிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, கார் ஓட்டியவர் தூக்கத்தில் இருந்ததாக தெரிகிறது. அந்த நேரத்தில், சென்னை நோக்கி சென்றுக் கொண்டிருந்த அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதியுள்ளது.
4 பேர் பரிதாப பலி
இந்த விபத்தில் காரில் பயணித்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து குறித்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த 4 பேரின் சடலங்களை மீட்டு திருவண்ணாமலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
உயிரிழந்தவர்கள் புதுச்சேரியைச் சேர்ந்த ஸ்டாலின், சதீஷ்குமார், சைலேஷ்குமார், சரூஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து கீழ்பெண்ணாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்மையில் கூட, கடலூர் மாவட்டத்தில் அரசு பேருந்துகள் ஒன்றுக்கொன்று நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நடந்த சில நாட்களில், திருவண்ணாமலையில் இந்த விபத்து நடந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2024ஆம் ஆண்டு 17,282 பேர் சாலை விபத்துகளால் உயிரிழந்துள்ளதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2023ஆம் ஆண்டை விட குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டில் தமிழகத்தில் 18,347 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர்.
2023ஆம் ஆண்டு நடந்த 17,526 விபத்துகளில் 16,800 விபத்துகளுக்கு ஓட்டுநர்களின் தவறுதான் காரணம் என்பது தெரியவந்தது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளால் 1,78,000 பேர் உயிரிழப்பதாகவும், அதில் 60 சதவீதம் பேர் 18 முதல் 34 வயதுக்குட்பட்டவர்கள் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.